Tuesday, October 22

ஆறாவது சக்கரம் - 50

ருவருட பூர்த்தியின் சந்தோசக் களிப்பில் இந்த வலைப் பதிவு மனை பற்றி வாசகர்களோடு பகிர்த்துகொள்ள ஆசைப்பட்டு சுய புராணம் பாடியிருக்கிறேன். முழுமையாக படித்துவிட்டு மங்களம் பாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.




  • ஆறாவது சக்கரம் என்கிற பெயரின் பின்னணி எதுவுமில்லை என்றாலும், சூட்சும உடலில்  இயங்கக்கூடிய 7 சக்கரங்களில், ஆக்நேய-Agnya சக்கரம் எனப்படும் ஆறாவது சக்கரம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்கிற செய்தியை இங்கே சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.  (என்னா வில்லத்தனம்...!)
  • இந்த தளம் ஆரம்பிக்கப்பட போது எனக்கு பலவழிகளிலும் உதவியது "ப்ளாக்கர் நண்பன்" என்கிற அப்துல் பாசித்'தின் வலைமனை தான்.  ப்ளாக் தொடங்குவது எப்படி? என்கிற அவரது பதிவுகளால் பயன் பெற்ற லட்சோப லட்ச வாசகர்களில் நானும் ஒருவன்.  எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. (எல்லாப் புகழும் பாசித்துக்கே!!)
  • மூன்று நாட்களில் மொத்தம் 27 மணித்தியாலங்களை செலவழித்து தான் இந்த தளத்தை ஆரம்பித்தேன். அக்டோபர் 19 அன்று முதல் பதிவை வெளியிட்டு, ஆரம்பிக்கவிருந்த இருந்த ஆசையை முந்திக்கொண்டது அக்டோபர் 18! (காலேஜ் எக்ஸாம்க்கு கூட இப்படி மெனக்கட்டிருக்க மாட்டேன்! ) 
  • ஒரே மூச்சில் எழுத வேண்டும் என்று அதிக நேரம் எடுத்துக்கொண்ட பதிவு இந்த பதிவுதான். என் ப்ளோக்கில் ஏழாவது பதிவு இது. இரவு 11மணிக்கு எழுத ஆரம்பித்து, விடிகாலை 4 மணிக்கு எழுதி முடித்தேன்.(பக்தி'ங்க.. பக்தி!!)
  • 9000+ ஹிட்ஸ்களை தாண்டிக்கொண்டிருக்கும் நேரத்தில் 10000த்தை அடைய உங்கள் வரவை வேண்டி நிற்கிறேன். (அவன் அவன் மில்லியன் ஹிட்ஸ் அடிச்சுக்கிட்டு இருக்கான்!)
  • 130க்கும் மேற்பட்ட வாசக ரசிகர்களை ஆறாவது சக்கரம்- iAgnya Facebook பக்கம் அடைந்திருக்கிறது. அறிமுகம் இல்லாதவர்கள் 20% அடக்கம். (நாங்களும் ரவுடி தான்!)
  • ராஜாத்தி ராஜா பதிவுதான் அதிக தடவை அதிகமானோரால் வாசிக்கப்பட பதிவு. 2300+ ஹிட்ஸ். (இதை எழுதனுமா? யாரு வாசிக்க போறாங்கன்னு நினைச்சேன்!)
  • "ராஜாத்தி ராஜா"வை அதிகமான வாசகர்கள் இந்தியாவிலிருந்து பார்த்திருக்கிறார்கள். அதை தவிர்த்து பார்த்தால் ஆறாவது சக்கரத்தை இணையத்தில் பார்ப்பவர்கள் இந்த நாடுகளில் இருந்து இணைகிறார்கள்.(நாங்க வேர்ல்டு பேமசு!)
  • இதில் 20% வாசகர்கள் கையடக்கபேசி மற்றும் ipad சாதனங்களால் இணைபவர்கள். (நீங்க எல்லாம் நல்லா இருக்கணுமுங்க சாமியோவ்!) 
  • facebook பேஜ்'ஐ லைக் செய்தவர்களில் 64%மான நபர்கள் ஆண்கள்தான் என்கிறது புள்ளி விபரம்.(தீயா வேலை செய்யனும் போலருக்கே!)
  • என் வலைமனையின் பின்னலங்காரம், "background image"களின் சொந்தக்காரர் பிரசாத் ஹரி. (நண்ண்...ண்பேண்டா! )
  • எழுதவேண்டும் என்று ஆரம்பித்து Draft'இல் கிடக்கும் பதிவுகள் மட்டும் 20ஐ தாண்டும். (சோம்பேறித்தனம் தான்.. வேறென்ன?)
  • வாழ்க்கையிலேயே நான் எழுதுன முதல் கதை இதுதான். முன்னபின்ன கொஞ்சம் பக்கத்தை காணோம்.. (படிச்சுட்டு துப்பில மூஞ்சுடாதிங்க!)
  • மொத்தமா எழுதி இருக்குற நாலு கதையில மேல சொன்ன முதல் கதை தவிர, மற்ற மூன்று கதைக்குள்ளையும் "கைப்பேசி" ஒரு கதாப்பாத்திரமா வந்திருக்கும். நினைச்சு செய்த விஷயம் கிடையாது. (நாம எதை தான் பிளான் பண்ணிருக்கோம்?)
  • சொந்த நாட்டில் இருக்கும் போது உருவான இந்த தளத்திற்கான ஆசை, விதைக்கப்பட்டு துளிர்விட தொடங்கிய இடம் மலேசியா தான். (ஓம் இன்டர்நெட் கனெக்சனே போற்றி!!)
  • இந்த பதிவுத்தளம் காணும் 50ஆவது பதிவு இது. கண்திருஷ்டி கழிக்குறதுக்காக நஸ்ரியாவை அழைத்தேன். (தலைப்பையும் படத்தையும் விளக்கியாயிற்று! ஒரு வேளை நஸ்ரியாவுக்கே கண்ணுபட்டால்?)

Post Comment

No comments: