Friday, June 21

வாழ்க்கை: கிலோ என்ன விலை?



வேசங்கள் கூடாது என்றார்கள்..
வீட்டிற்கு ஒரு வேசம் 
வேலைக்கு ஒரு வேசம் 
உறவுக்கு  ஒரு வேசம்
தெருவுக்கு ஒரு வேசம்
ஊருக்கு நாட்டிற்கு உலகிற்கு
ஓயாமல் வெவ்வேறு வேசம்..
இயல்பினை ஏற்பவர் எவரும் இல்லை..
நடிப்பினை நம்புகிறார் நிஜமென்று!
நான் நல்லவனா? கெட்டவனா?..



❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥

பாடும் நிலா..! evergreen..! (02)

பாடும் நிலா என்கிற பெயரில் இருக்கின்ற கலைநயம் எவ்வளவு அழகானதோ அவ்வளவு அழகு அந்த பெயரை கேட்கும் போதெல்லாம் முழுநிலவாய் மனம் நிரம்புவதும்! 
 S.P.B இன்றி அமையாது என் இசை-உலகு! பதிவின் தொடர்ச்சி இது...


மனதின் சந்துகளில் இசை நுழைந்து ஞாபகப்பள்ளங்களில் "S.P.B." என்கிற பெயர் பாயும்போதெல்லாம் எத்தினையோ சுகமான பாடல்கள் இதயசுரங்கத்துள் ஒலித்துகொண்டே இருக்கிறது.

Sunday, June 16

S.P.B இன்றி அமையாது என் இசை-உலகு!

வாசகர்களுக்கு (நம்பி வாசிக்கலாம்னு வந்தவங்களுக்கு ):
இந்த இசை இமயத்தின் குரலுக்கு காதல் கொண்டு மயங்கிக்கிடக்கும் உங்களைப்போல, நானும் ஒரு ரசிகன்.. இல்லையில்லை வெறியன்! கடந்த 4ஆம் திகதி பிறந்தநாள் கொண்டாடியவருக்கு ஒரு சிறு வாழ்த்து செய்தியை நானும் சொல்லி வைக்க ஆசை பட்டேன். என் நினைவு தெரிந்த காலத்தில் இருந்து SPB என்கிற எழுத்துக்கள் மூன்றுமே என்னை கட்டிப்போடுகிற மந்திரச் சொல்! இந்த குரலின்பால் உள்ள காதலால் இந்த பதிவு சற்று முத்திப் போகலாம். முடிந்தவரை இயல்பான முறையில் (சுருக்கமாகவும்) எழுத முயற்சிக்குறேன். இது முழுக்க முழுக்க என் அனுபவமும் என் கருத்துக்களும் மட்டுமே.....
   ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯....

Thursday, June 13

One நிமிட் for 5 மினிட்ஸ் (12-06-2013)

தே  தலைப்பில்.. என் முதல் பதிவில்..

பார்க்குற / கேட்குற / ரசிக்குற விசயங்களை வலைப்பதிவுகளா எழுதி அதை நமக்கு தெரிஞ்ச 8 பேர்கூட பகிர்ந்துக்கலாம்னு தான் இந்த வலைமனை ஆரம்பிச்சேன். இப்படி என் மனசுல இருக்குறதை எழுதுறதுக்கு எல்லா வசதிகளும் இருக்கும் போதும்கூட நமக்காக நேரம் ஒத்துழைக்குதில்லை. அதனால, கிடைக்குற கொஞ்ச நேரத்தில அஞ்சோ.. ஆறோ.. விஷயங்களை ஒரே  பதிவா போட்டு உங்க நேரத்தையும் சிக்கனமா மாத்தலாம்னு தோணுச்சு. ஒரு அஞ்சு நிமிஷம் உங்க நேரத்தை ஒதுக்கி வந்துட்டு போனீங்கனா போதும்!

என்று எழுதி தான் இந்த பதிவை ஆரம்பித்தேன். திகதி மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இதே தலைப்பில் 4வது பதிவு இது.

..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..