Saturday, April 20

சொன்னா புரியாது!

வசரமவசரமாய் வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன்.

(என்னைக்குன்னு எல்லாம் சரியாய் ஞாபகம் இல்லை.போன வாரமோ.. இல்லேன்னா அதுக்கு முதல் வாரமோ.. அதுவா முக்கியம்!, விஷயத்தை படிங்க!)



Saturday, April 13

முன்னபின்ன கொஞ்சம் பக்கத்தை காணோம்..

...இன்று/ நேரம்: இரவு 10.35

இன்னும் கொஞ்சம் நேரம் தான் இந்த வலி. அப்பிடியே கண்ணை மூடிக்கோ. உலகமே மறந்துரும். எதையும் உணர முடியாது. உடம்புல எதுவுமே இல்லாத மாதிரியும் காத்துல பறக்குற மாதிரியும் இருக்கும். யாருமே இல்லாத ஒரு இடத்துக்கு உன்னை கூட்டிகிட்டு போயிடும். சரியா இன்னும் ரெண்டு நிமிஷம் தான் இருக்கு. ராஜ்.. ராஜ்.. நான் பேசுறது கேட்குதா.. ராஜ்.....

Friday, April 12

...யோசிக்கிறேன்!

...தொடர்ந்து மனவேதனைக்கு உள்ளாகி வெறுப்போடும், விரக்தியோடும் காலத்தை கழிக்கின்ற, ஒரு நண்பனுக்கோ அல்லது நண்பிக்கோ ஆறுதல் சொல்லிவிட்டு நகர்ந்து வரும் போது, நமக்கு ஆறுதல் சொல்ல யாரோ ஒருவரை தேட வேண்டி இருக்கிறது! ...யோசிக்கிறேன்!


...எத்தினையோ சந்தர்பங்களில் அறிமுகமில்லாத புதியவர்களை வாழ்கையில் சந்திக்கிறோம், உரையாடுகிறோம், கடந்துவருகிறோம். ஒருசிலரிடம் எதையோ ரசிக்கமுடிகிறது. ஒரு சில நேரத்தில் சில புதியவர்களிடம் எந்த ஈடுபாடும் வருவதே இல்லை. ஒருவரை நேசிக்கவும், வெறுக்கவும் காரணம் தேவைப்படுகிறது. அடையாளங்களையும், தகுதிகளையும் வைத்து ஒருவரை நிர்ணயிக்குற மனதை ஏன் படைத்தான் ஆண்டவன்? ...யோசிக்கிறேன்!