Wednesday, December 19

கொஞ்சம் இதையும் சொல்லிடுறேன்..! (02)

சக மனிதனின் உணர்வு'ன்னு ஒன்னு இருக்கு.. அதை பத்தி எந்த SCHOOL'லயாச்சும் பாடம் எடுக்குறாங்களா...? எவன் பாடம் எடுப்பான்? அதை புரிஞ்சவன் தான் யாருமே இல்லியே... கடவுள் தான் வந்து எடுக்கணும்!
சமூகத்தை பத்தி கவலை பட்டு என்னங்க நடக்க போகுது! இன்னும் இன்னும் இங்க மனித உணர்வுகளுக்கு மதிப்பில்லாம தான் போயிகிட்டு இருக்கு! நான் facebook ல status update பண்ணனும்னோ, என் ப்ளாக் படிக்க வாறவங்களுக்கு வாசிக்க ஒரு பதிவு போடனும்னோ இதை இங்க சொல்லலை.. என்னை சுத்தி நடக்குறதை பார்த்து என் மனசு துடிக்கும் போது எப்பிடி அதை மத்தவங்களுக்கு சொல்லி புரிய வைக்குறதுன்னு தெரியலை! சுத்தமா இங்க யாருக்குமே டைம் இல்லை! இதை எழுதி எத்தனை பேர் படிக்க போறாங்க! உலகத்தை ஒரே நாளுல திருத்திடனும்னு நான் நினைக்கவும் இல்லை!

Sunday, December 16

ஏலேய்!! இவிங்கள தெரியுமாலேய்? (strictly for facebook users)

து ஒன்னுமில்லீங்க. ரொம்ப நாளுக்கு முதல்ல எதோ ஒரு வேலையா கூகிள் கூகிள் பண்ணி பார்த்துட்டு இருந்தப்போ.. இந்த விஷயம் கண்ணுல பட்டுச்சு. படிச்சு பார்த்துட்டு, நம்ம சும்மா இருக்கும் போது (எப்போவுமே இல்லை.. எப்போவாச்சும்!) இதை ஒரு பதிவா போடுவோம்னு எடுத்து வைச்சுருந்தேன். facebook users பற்றி ரொம்ப பெரிய ஆராய்ச்சி  பண்ணிருக்காங்க.

இதை படிக்க முதல்ல உங்ககிட்ட ஒரு கேள்வி: 



நீங்க எத்தனை வருசமா facebook பாவிக்கிறீங்க?

Tuesday, December 11

ரஜினி ரசிகனாகிய நான்!

ரு பதிவு எழுதனும்னு யோசிக்கும் போது மனசுல பல விசயங்கள் தோணும். இதுதான் கரு அப்பிடின்னு தெளிவா தெரிஞ்சுகிட்டுதான் எழுத ஆரம்பிப்பேன். ஆனால், "ரஜினிகாந்த்" என்கிற ஒரு பெயரை மனசு சொல்லும் போது, அதுக்கு துணையாக மனசுல பலவிதமான எண்ணங்கள் சுத்த ஆரம்பிக்குது. என்னன்ன விதமாக இந்த பதிவை எழுதலாம்னு நினைச்சுகிட்டே எழுத ஆரம்பிக்குறேன்.

தமிழ்சினிமா மீது இருக்குற மோகம் எனக்கு ரொம்ப அலாதியானது."கலை"  ஆர்வம் வர இந்த தமிழ்சினிமா மிகப்பெரும் காரணம். அதனாலதான் என்னோட இந்த வலைமனையில பதிவுகள் மூலமா நான் ரசிக்குற கலைஞர்கள் பற்றியும் பதிவு எழுத ஆரம்பிச்சுருக்கேன்! இசைஞானி பற்றிய பதிவு தான் முதல்! இப்போ ரஜினி என்கிற சூப்பர் ஹீரோ பற்றி என் எண்ணங்கள்..


"Rajinikanth was named by Forbes India as the most influential Indian of 2010. He was also named one of the most influential people in Asia by Asiaweek."

Monday, December 10

One நிமிட் for 5 மினிட்ஸ் (09-12-2012)

8ஆவது பதிவு. என் வாழ்க்கைல 8 ஒரு லக்கி நம்பர். நிறைய எட்டாம் இலக்க தொடர்புகள் என் வாழ்க்கைல இருக்கு. அதைப்பத்தி ஒரு தனி பதிவே போடலாம். அது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ இந்த பதிவு எதுக்குனா,.....



பார்க்குற / கேட்குற / ரசிக்குற விசயங்களை வலைப்பதிவுகளா எழுதி அதை நமக்கு தெரிஞ்ச 8 பேர்கூட பகிர்ந்துக்கலாம்னு தான் இந்த வலைமனை ஆரம்பிச்சேன். இப்படி என் மனசுல இருக்குறதை எழுதுறதுக்கு எல்லா வசதிகளும் இருக்கும் போதும்கூட நமக்காக நேரம் ஒத்துழைக்குதில்லை. அதனால, கிடைக்குற கொஞ்ச நேரத்தில அஞ்சோ.. ஆறோ.. விஷயங்களை ஒரே  பதிவா போட்டு உங்க நேரத்தையும் சிக்கனமா மாத்தலாம்னு தோணுச்சு. ஒரு அஞ்சு நிமிஷம் உங்க நேரத்தை ஒதுக்கி வந்துட்டு போனீங்கனா போதும்!

ஆனா இதுனால முழுப்பதிவுகள் எல்லாம் வராமல் போயிடாது.. அந்த அவஸ்தை எல்லாம் கண்டிப்பா இருக்கும்... ஏன்னா நீங்க எல்லாம் ரொம்பஅ.. நல்லவங்க! நான் எதை எழுதுனாலும் படிப்பீங்கன்னு நம்மம்ம்ம்பி எழுதிகிட்டு இருப்பேன்! but இப்போதைக்கு,

One நிமிட் for five மினிட்ஸ்...

*******************************************************************************************