Sunday, December 16

ஏலேய்!! இவிங்கள தெரியுமாலேய்? (strictly for facebook users)

து ஒன்னுமில்லீங்க. ரொம்ப நாளுக்கு முதல்ல எதோ ஒரு வேலையா கூகிள் கூகிள் பண்ணி பார்த்துட்டு இருந்தப்போ.. இந்த விஷயம் கண்ணுல பட்டுச்சு. படிச்சு பார்த்துட்டு, நம்ம சும்மா இருக்கும் போது (எப்போவுமே இல்லை.. எப்போவாச்சும்!) இதை ஒரு பதிவா போடுவோம்னு எடுத்து வைச்சுருந்தேன். facebook users பற்றி ரொம்ப பெரிய ஆராய்ச்சி  பண்ணிருக்காங்க.

இதை படிக்க முதல்ல உங்ககிட்ட ஒரு கேள்வி: 



நீங்க எத்தனை வருசமா facebook பாவிக்கிறீங்க?


பதில் என்னான்னு உங்களுக்கு நீங்களே சொல்லிக்கோங்க..! இங்க நான் மொழிப்பெயர்ப்பு (ஒரு மொழியில இருந்து இன்னொரு மொழிக்கு மாத்துறதை அப்பிடிதானே சொல்லுவாங்க?) செய்யப்போற விஷயம், நமக்கெல்லாம் பழகிப்போன விஷயம் தான்!விதம் விதமா facebook பாவிக்குறதை அடிப்படையா வைச்சு, 40 பேர் கொண்ட ஒரு குழு 4பேர் தலைமையில நாலாபக்கமும் தேடி, அலசி, பகுத்து, பிரிச்சு பேன் பார்த்து இந்த அறிக்கையை வெளியிட்டுருக்காங்க! இதுல நம்ம நண்பர்கள் என்ன ரகம்னு நாமளே முடிவு பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க!

படித்து பலன் பெறவும்!.......ஆங்கிலத்தில் இருப்பவை ஆராய்ச்சியாளர்களுடயது! தமிழ் பெயர்கள் அடியேனுடையது! 

1) The “Lurker” –மர்ம நபர்- இருக்காங்கனு எங்களுக்கே தெரியாது. தவறியும் ஒரு like போட மாட்டாங்க. ஆனா உங்களை வெளியில எங்கயாச்சும் கண்டா நீங்க post பண்ணினதை பத்தி doubt'ட்டு clear பண்ணிப்பாங்க! #உங்க வீட்டுல எதாச்சும் பழைய நியூஸ் பேப்பர் stock இருக்குமா?

2)  “Mr/Ms Popular” –ஆள்இன்ஆள் அழகு ராஜா/ராணி 4367 friends இருப்பாங்க. ஆனாலும் என்ன செய்ய? ஆணியே புடுங்க மாட்டாங்க. #யாருங்க நீங்க?

3) The “Gamer” – தீராத விளையாட்டு பிள்ளை- அட விஷால் இல்லீங்க. நாள் பூராவும் fbல இருக்க கிடைச்சாலும், game விளையாடுறது தான் இவங்க வேலையே. உங்களுக்கு கண்டிப்பா, game request அனுப்புவாங்க! #விளையாடு மங்காத்தா.. ஆனா எங்களை வுட்டுடு ஆத்தா!

4)The “innocent” –அப்புறாணி- எல்லா postகளும் இறைவனுக்கே! #ஆண்டவா!!! 

5)The “Hyena” –ஓட்டேரி நரி- எங்கேயும் எப்போதும் "LOL"s and "LMAO"s (டீம்'ல தண்டமா ஒன்னு இருக்குமே!அதுதான் இது! மேல சொன்ன அந்த ரெண்டு வார்த்தை மட்டும் தான் comment பண்ணுவாங்க! கொட்டாவி மாதிரி!) #புரிஞ்சுதா?


6) The “Thief” –களவாணி- எப்பொருள் எவர் எவர் status'இல் பார்த்தாலும் அப்பொருள் இவர் status ஆக்குவதே அறிவு! #நாங்க நல்லா பண்ணுறமோ இல்லியோ.. நீங்க "நல்லா" பண்ணுறீங்க..

7) The “Cynic” –why பொலம்பிங்?- தன்னோட  வாழ்கை மேல வெறுப்பு வந்து அடுத்தவங்களை பார்த்து கவலை பட்டுகிட்டே இருப்பாங்க. இவங்க status பொலம்பிட்டு தான் இருக்கும்! #என்னை கொடுமை சரவணா?

8) The “Collector” –மங்குனி அமைச்சர்- எதையுமே போஸ்ட் பண்ண மாட்டாங்க. ஆனால், மணிக்கொரு தடவை ஒரு புது page'ல சேர்ந்துக்கிட்டு இருப்பாங்க #நீ ஒரு மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கொரு தடவை நிரூபித்துக்கொண்டே இருக்கிறாய்!

9) The “Promoter” –தூதுவர்- எதாச்சும் ஒரு page இல்லேனா, ஒரு event பத்தி promote பண்ணிட்டே இருப்பாங்க. நாங்களும் delete இல்லேனா ignore பண்ணிட்டே இருப்போம். #மாற்றம் ஒன்றே மாறாதது!  

10) The “Liker” –பாலபத்திர ஓணாண்டி- "LIKE" button  இவங்களுக்காக தான் கண்டுபிடிச்சாங்கனு இவங்க நம்பிக்கை. #பாடும்! பாடும்! பாடித் தொலையும்!

11) The “Hater” –வாழ்வே மாயம் - தன்னை யாருமே கண்டுக்காம இருக்காங்க'னு..தொலைச்ச இடத்துல தேடாமல் வெளிச்சமா இருக்குதே'ன்னு அங்க தேடுவாங்க! #ஒரே சுடுகாட்டு வாசனையா க்கீது!

12) The “Anti-Proofreader” –அப்பாடக்கரு-  நமீதா டமீல் மாதிரி தான் இவங்களும். எழுத்து பிழை இருந்தா அது இவங்களுக்கு ஸ்டைல். எதுவுமே புரியலன்னு சொன்னீங்கனா அது அவங்களுக்கு National  Award! #If u cn rd ths msg u r jst lke vryne lse!

13) “Drama Queen/ King” – உலக மகா நடிகன்/ நடிகை - திடீர்னு ஒரு status போடுவாங்க. எப்பிடினா...“I can’t believe this!”, or “They gonna kill me today!”, நீங்க கண்டிப்பா அவங்ககிட்ட "குற்றம் - நடந்தது என்ன?" மாதிரி விசாரணை செய்வீங்க. ஆனால் அதை சொல்லி முடிக்க மாட்டாங்க! #முடியல...

14) “Womp Womp” – மொக்கை பீஸு - சிரிக்குற மாதிரி நிறைய post பண்ணுவாங்க. ஆனா நமக்கு தான் சிரிப்பே வராது! #ஒரே நகைச்சுவை தான் போங்கள்!

15) The “News” –குடுகுடுப்பை- எங்க எதை செய்தாலும் உடனே அதை status ஆக்கிடுவாங்க. யாருகூட இருக்காங்கனு நாங்க கேட்கவே தேவை இல்லை. இவங்களோட status like பண்ணுறதுக்குன்னே ஒரு "கே" அவங்க friend லிஸ்ட்ல இருக்கும்! #தெரிவிப்பது நாங்கள் தீமானிப்பது நீங்கள்!

16) The “Rooster” –வணங்காமுடி- தன் நண்பர்கள் அனைவருக்கும் தனது வணக்கத்தை சொல்லி நாள் தொடங்கும் கடமை தவறாத கம்மனாட்டிகள்! #"Good Morning facebook!"

இதை விடவும் இன்னும் சில பேர் இருக்காங்க.. அவங்களை பத்தி நீங்க சொல்லுங்க..
 

Post Comment

No comments: