Monday, December 10

One நிமிட் for 5 மினிட்ஸ் (09-12-2012)

8ஆவது பதிவு. என் வாழ்க்கைல 8 ஒரு லக்கி நம்பர். நிறைய எட்டாம் இலக்க தொடர்புகள் என் வாழ்க்கைல இருக்கு. அதைப்பத்தி ஒரு தனி பதிவே போடலாம். அது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ இந்த பதிவு எதுக்குனா,.....



பார்க்குற / கேட்குற / ரசிக்குற விசயங்களை வலைப்பதிவுகளா எழுதி அதை நமக்கு தெரிஞ்ச 8 பேர்கூட பகிர்ந்துக்கலாம்னு தான் இந்த வலைமனை ஆரம்பிச்சேன். இப்படி என் மனசுல இருக்குறதை எழுதுறதுக்கு எல்லா வசதிகளும் இருக்கும் போதும்கூட நமக்காக நேரம் ஒத்துழைக்குதில்லை. அதனால, கிடைக்குற கொஞ்ச நேரத்தில அஞ்சோ.. ஆறோ.. விஷயங்களை ஒரே  பதிவா போட்டு உங்க நேரத்தையும் சிக்கனமா மாத்தலாம்னு தோணுச்சு. ஒரு அஞ்சு நிமிஷம் உங்க நேரத்தை ஒதுக்கி வந்துட்டு போனீங்கனா போதும்!

ஆனா இதுனால முழுப்பதிவுகள் எல்லாம் வராமல் போயிடாது.. அந்த அவஸ்தை எல்லாம் கண்டிப்பா இருக்கும்... ஏன்னா நீங்க எல்லாம் ரொம்பஅ.. நல்லவங்க! நான் எதை எழுதுனாலும் படிப்பீங்கன்னு நம்மம்ம்ம்பி எழுதிகிட்டு இருப்பேன்! but இப்போதைக்கு,

One நிமிட் for five மினிட்ஸ்...

*******************************************************************************************


தோழி ஒருத்தங்க எனக்கு ஒரு சின்ன பிள்ளையார் சிலை gift பண்ணினாங்க.வேலைக்காக நாடு விட்டு நாடு வரும் போது அவரையும் என் கூட கூட்டிகிட்டு வந்துட்டேன். என் டேபிள் பக்கத்துல தான் உட்க்காந்து இருக்காரு. வேலைக்கு போயிட்டு என் ரூம்குள்ள வந்தால், எனக்கு அவர்துணை! அவருக்கு நான் துணை! அவருக்கும் பாவம் யாரு தான் இருக்காங்க. அவரு புண்ணியத்துல எல்லா நாளும் நல்ல நாள் தான்.(ஒரு வகையில இந்த பதிவுக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு!). 

போன பதிவில என்மனம்கவர்ந்த இளையராஜா பத்தின எண்ணங்களை பதிவு பண்ணிருந்தேன். இதுவரைக்கும் என் பதிவுகளில் அதிகம் பேர் பார்த்த பதிவு அதுதான்'னு overview ரிப்போர்ட் சொல்லுது.என் நண்பர்கள் சிலரும் நல்லா இருக்குது'னு பாராட்டினாங்க. போனவாரம் எதேச்சையாக கூகிள் (google)'ல என் வலைமனை  URL'லை தட்டினப்போ ஒரு வலைதளத்துல இசைஞானி பற்றின கருத்துப்பரிமாற்றங்கள்ல என் பதிவு பற்றியும் ஒரு வரி கருத்துரைக்க பட்டிருந்ததை பார்த்தேன். 
 
இது ஒன்னும் பாராட்டோ, பெருமைக்கான கருத்தோ கிடையாது, ஆனாலும் எங்கயோ ஒரு மூலையில என் வலைமனை பற்றியும் என் பதிவு பற்றியும் பேசப்படுதுன்னு தெரிஞ்சுக்கும்போது, inexpressible ஆனந்தம்! Googleக்கு பலவிதத்திலும் நன்றிகள்!



டல் படத்தோட ஒரு பாட்டுக்கு கிடைச்சுருக்குற வரவேற்பை பார்க்கும்போது தொண்ணுருகளில் இசைப்புயலோட இசையை ரசிச்ச உள்ளங்கள் இன்னும் அந்த மாதிரியான இசைக்காக ரஹ்மான் கிட்ட தவம் இருக்காங்கனு புரிஞ்சது. நான் ஒன்னும் விதிவிலக்கு இல்லை. மணி சார்'க்கு தான் நன்றி சொல்லணும். 17 திகதி AUDIO CD ரிலீஸ் பண்ணுறாங்கனு கேள்வி பட்டேன். ரொம்ப நாட்களுக்கு பிறகு (வருடங்களுக்கு பிறகு'னும் சொல்லிக்கலாம்) ஒரிஜினல் CD வாங்க போறேன். I am Waiting...



ன் வெட்டி பொழுதுகளை அதிகம் நான் fb'ல தான் கழிப்பேன்.அதை பத்தி ஒரு பதிவே போட்டேன். அப்படி facebook'ல இருக்கும் போது  சில சுவாரஸ்யமான விஷயங்கள் கண்ணுல படுறதும் உண்டு.  அப்பிடி சிலதை உங்ககூட பகிர்ந்துக்க தான் இந்த பகுதி.

 facebook காய்ச்சல் 

இந்த வீடியோ நேற்று என் கண்ணுல பட்டுச்சு.. ஒரு கிட்டாரை வைச்சுக்கிட்டு இந்த சின்ன பொண்ணு  பண்ணுறது ஒரு magic தான்! மொழியை கடந்து இசையை ரசிப்போர் இதை ரசிக்கலாம்.

 

அது காதுக்கு.. இது கண்ணுக்கு..

 
இந்த படத்துக்கு எதுக்குங்க விளம்பரம்??? நெக்ஸ்ட்டு மீட் பண்ணலாம். வாரேன் ..

Post Comment

No comments: