Wednesday, December 19

கொஞ்சம் இதையும் சொல்லிடுறேன்..! (02)

சக மனிதனின் உணர்வு'ன்னு ஒன்னு இருக்கு.. அதை பத்தி எந்த SCHOOL'லயாச்சும் பாடம் எடுக்குறாங்களா...? எவன் பாடம் எடுப்பான்? அதை புரிஞ்சவன் தான் யாருமே இல்லியே... கடவுள் தான் வந்து எடுக்கணும்!
சமூகத்தை பத்தி கவலை பட்டு என்னங்க நடக்க போகுது! இன்னும் இன்னும் இங்க மனித உணர்வுகளுக்கு மதிப்பில்லாம தான் போயிகிட்டு இருக்கு! நான் facebook ல status update பண்ணனும்னோ, என் ப்ளாக் படிக்க வாறவங்களுக்கு வாசிக்க ஒரு பதிவு போடனும்னோ இதை இங்க சொல்லலை.. என்னை சுத்தி நடக்குறதை பார்த்து என் மனசு துடிக்கும் போது எப்பிடி அதை மத்தவங்களுக்கு சொல்லி புரிய வைக்குறதுன்னு தெரியலை! சுத்தமா இங்க யாருக்குமே டைம் இல்லை! இதை எழுதி எத்தனை பேர் படிக்க போறாங்க! உலகத்தை ஒரே நாளுல திருத்திடனும்னு நான் நினைக்கவும் இல்லை!
நான் யாரையுமே குறை சொல்ல வரலை. யாருக்கும் எடுத்து சொல்லி புரிய வைக்கவும் நினைக்கலை. சமூகத்தை பார்க்கும் போது பயமா இருக்கு. நடக்குறதை பார்த்து பார்த்து மனசுக்கு வாழ தைரியம் இல்லாமல் போயிடுமோ'ன்னு பயமா இருக்கு! மரணம் தான் எல்லைன்னு எவன் சொன்னான்? இங்க தினம் தினம் ஒருத்தனுக்கு ஆனந்தமே குறைந்தபட்சம் அவன் உயிரோட இருக்குறது தான்!
இரண்டு நாட்களுக்கு முதல்ல facebookல ஒரு அழகான வாசகம் பார்த்தேன்!
"சிலர் வயிறு குறைக்கணும்னு ஓடிட்டு இருக்காங்க! மத்தவங்க எல்லாரும் அதை நிறைக்கனும்னு ஓடிகிட்டு இருக்கோம்!"
"நான் எப்பிடியெல்லாம் வாழணும்னு கனவுகண்டேன் தெரியுமாப்பா?"ன்னு  யாராச்சும் சொன்னா, அதை கேட்டு.. சாதனை என்பது அவங்க வாழ்ந்த வாழ்க்கை தான்'னு  தோணும்! வாழ்றது தான்! yes! வாழ்றது தான் சாதனை! அவங்களால முடியலைன்னு வாழ்கையை விட்டுடாமல், வாழ்ந்து முடிக்குறாங்க பாருங்க... அது சாதனை இல்லாமல் வேறென்ன?
தற்கொலைக்கு இருக்குற தைரியம் வாழறதுக்கு இல்லையாடா'ன்னு கேட்பாங்க? உண்மை தான்! ஆனால்,வலியினை தாங்கமுடியாமல்  இதயம் இறந்த பிறகு, எதை கொலை செய்துகொள்கிறோம்..? உயிரை விடுவது என்பது தைரியம் இல்லை! அது இறந்து போன இதயத்துக்காய் செய்துகொள்ளும் கைங்கரியம்! அப்பிடியும் இதயத்தை கையாள தட்டி தட்டி துடிக்க வைச்சுகிட்டு கடைசி வரைக்கும் வாழ்ந்து முடிக்குறது சாதனை தானே?
அப்படி இதயத்தை தட்டி, துடிக்க வைத்தபடி இரண்டு நாட்களை கடந்து வாழ்கிறேன்!
1.அமெரிக்காவின் கனெக்டிகட் நகரில் உள்ள சாண்டி ஹூக் தொடக்கப் பள்ளியில் நடந்த சம்பவம்!
2.டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட  சம்பவம்!
  • ...................நாம என்ன செய்துட முடியும்.!?
  • .........................சமூகம் இப்பிடி மோசமா போறதுக்கு காரணம் என்ன? 
  • .............வாழ்க்கைனா என்ன'ன்னு யார் சொல்லிக்கொடுக்க போறாங்க ?
  • ...................சொல்ல முடியாத சோகங்களோடு இந்த சம்பவங்களின் பின்னால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன வார்த்தை சொல்லி ஆறுதல் செய்வது?
பசிக்குதுன்னு சொல்லி யாராச்சும் சாப்பாடு கேட்டால் "பிரியாணி"ன்னு பேப்பர்ல எழுதி கொடுக்குறது தான் முறையா?மேல உள்ள படத்தை பாருங்க!... கையில் புத்தகத்தை வைச்சுகிட்டு அன்பு கேட்குறவங்களுக்கு பாடம் எடுக்குறோம்! ஆனால், அன்பு?.. 
இந்த சம்பவங்களுக்காக மட்டும் இதை சொல்லலை. விதம் விதமா இங்க தினமும் பல சம்பவங்கள் நடக்குது. பல விஷயங்கள் சமூகத்துக்கு தெரியாமலேயே போயிடுது. டான்ஸ் ஆட தெரியலன்னு  2 வயசு பையன போட்டு அந்த குழந்தையோட அப்பா  அடிச்சு (விபரிக்க விருப்பமில்லாமல் சுருக்கமாய் சொல்கிறேன்) ஆட சொல்லுற வீடியோ ஒன்னும், கட்டில் மேல குழந்தைய படுக்க வைச்சு கதறி அழும்போதும் அடிச்சு அடிச்சு தூங்க வைக்குற பெண்ணின் உடலமைப்பு கொண்ட ஒருத்தியின் (பெண் என்று எப்படி சொல்வது?) வீடியோ ஒன்னும் நெட்ல இப்போ இரண்டு நாளுக்கு முதல்ல பார்த்தேன்! இரண்டுமே இரண்டு நிமிடங்களுக்கும் அதிகமான நேரம் ஓடக்கூடிய வீடியோ காட்சிகள்! முழுசா பார்க்கலை. முடியலை! அதை வீடியோ பண்ணின ****யையும், அதை share பண்ணி, அதுக்கு கமெண்ட் பண்ணுன ****யையும் ஒரு செக்கன் மனசுல அப்பிடியே.................. அதை சொல்லி என்ன பண்ண போறேன்! 
என்ன சொல்லுறதுனே தெரியலை! கடவுள்கிட்ட பிரார்த்தனை பண்ணிக்குறேன். உலகத்தை இப்பிடி அம்போன்னு விட்டுராதிங்கன்னு! என் கடவுள் எனக்கு சொல்லிக்கொடுத்ததெல்லாம் என் மனசுக்குள்ள நினைச்சு பார்த்தேன்! வலியால துடிக்குற மனசை கடவுள் நம்பிக்கை'யை சொல்லி அமைதி படுத்திகிட்டேன்.. சில மனிதர்கள் கடவுளையும் பலி சொல்லக் கூடும்! 
எழுத்தாளர் சுஜாதா சொன்னது ஞாபகம் வருது...
"கடவுள் மனுசனை பார்த்து சிரிக்குற ஒரு சம்பவம் எப்போ தெரியுமா?என்ன நடக்கணும்னு கடவுளுக்கு மனுஷன் சொல்லிக்கொடுக்கும் போது..."
-------------இன்னும் எவ்வளவோ எழுதனும்னு தோணுது.யாருக்கு சொல்லி புரியவைக்க?..... அதெல்லாம் விடுங்க. இந்த வீடியோ பாருங்க! வாழ்க்கைன்னா என்னன்னு ஒரு வேலை தெரிஞ்சுக்கலாம்! 

Post Comment

No comments: