Thursday, October 23

கத்தி - படம் பார்த்த அனுபவம்


ஜெயா டீவில “ஐ” ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி பார்த்துட்டு இருந்தோம். சீயான் விக்ரம் பற்றிய ஏவியில் ஒரு குறிப்பு வந்தது. “இவரது கதாப்பாத்திரங்களின் உருவங்களை வைத்தே, இவரது படத்தின் பெயரை சொல்லிவிடலாம்”, என்றதுமே நானும் நண்பரும் “அப்போ விஜய் நடிச்ச படத்தை, எந்த படம்ன்னு எப்படி கண்டுபிடிக்குறது?” என்கிற கேள்வி எழும்ப.. இருவருமே சிரித்துவிட்டோம்.
 
கத்தி படத்துக்கு எதுக்கு ரெண்டு விஜய்? படத்துல சமந்தாவுக்கு ஏன் முக்கியமில்லாத பாத்திரம்? சதீஸ்க்கு கவுன்ட்டர் ஜோக்ஸ் ஏன் குறைவு? முதல்பாதி ஏன் விறுவிறுப்பு இல்லாமல் இருக்கு? ரெண்டாவது பாதியில லாஜிக் ஓட்டைகள் நிறைய இருக்கே!? சம்பந்தமே இல்லாமல், திடீருன்னு பாட்டு வைக்குற தேவை என்ன?


ஒரு விஜய்க்கு நடிக்குற வாய்ப்பு! விஜய் கடைசியாக இப்படி அழுதது, துள்ளாத மனமும் துள்ளும் படத்துல. அம்மா இறந்துட்டாங்கன்னு செய்தி வந்ததும், பாத்ரூம்குள்ள உட்கார்ந்து அழுவாரே ஒரு அழுகை, அதை நான் கத்தி படத்தில நேத்து பார்த்தேன். அடுத்தவருக்கு, எல்லா வில்லன்களையும், ரெண்டு வில்லிகளையும் அடிக்குற வாய்ப்பு! பஞ்ச் வசனங்களுக்கும் டான்ஸ்க்காகவும் விஜய்யை பாராட்டுவது, இரண்டாம் வாய்ப்பாடு மாதிரி ஆகிவிடும்.

சமந்தா, ஹை-ஹீல்ஸ் போட்டுகிட்டு செம்ம டான்ஸ் ஆடுறாங்க. அஞ்சான் படத்துல எதுவுமே இல்லாமல் ஆடினாங்க (காலுக்கு). இதுக்கு தான் சொல்லுவாங்க, co-star’s height matters! அதை விட முக்கியம், படத்துல கடைசி பாட்டை தவிர மீதமுள்ள எல்லா பாடல்களும் சம்மு சம்பந்தப்பட்டது. செல்ஃபி புள்ள பாட்டுல காஸ்டியும் செட் ஆகலை என்பது பர்சனல் வருத்தம்.

சதீஸ், படத்துக்கு தேவை தான். ஆனால் அவரை ரசிக்குற இடங்கள் குறைவு. அவரோட காட்சியில விஜய்க்கு தான் ஸ்கோர். கடைசியில, ஒரு நீளமான வசனம் பேசுற இடத்துல மனசுல நிப்பாருன்னு பார்த்தேன், அதையும் விஜய் “கை” வரிசை காட்டி பறிச்சுட்டார். ஏன்னு படம் பார்த்து தெரிஞ்சுகோங்க.

படம் தொடங்கி ரெண்டு பாட்டு முடிஞ்சாப்பிறகுதான் கதை எங்க போகப்போகுதுன்னு ஒரு க்ளு கிடைக்குது. விஜய் ஒரு நல்ல நடிகர்ன்னு பேர் வாங்குற இடம் முதல் பாதி. அதுக்காகவே அந்த கிராமத்து விஜய் கதாபாத்திரம் படத்துல வைச்சதுக்கு டைரக்டர்க்கு பாராட்டு..

இண்டர்வல் பிளாக் சூப்பர். விஜய்க்கு இருக்குற மாஸ் எப்படி பட்டது என்பதை நிரூபிக்கும் இடம். ஒரு சீன்ல 50 வில்லன்களை ஒரே இடத்தில சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஹீரோவுக்கு. பக்கத்துல படம் பார்த்துட்டிருந்த நண்பர், “50 பேரையும் சும்மா அடிச்சா வேலை இல்லை பாஸ்” என்றார். 30 பேரை தான் அடிச்சாரு ஹீரோ, அதுவும் ஒரு சூப்பர் ஐடியா பண்ணி தான். மிச்சம் 20 பேரும் அவங்களாவே ஓடிப்போனாங்க. நண்பரின் எதிர்பார்ப்பை விஜய் காப்பாற்றினார்.

மத்த நடிகர்கள் எடுக்குற ரிஸ்க் எல்லாம் ஏன் விஜய் எடுக்க மாட்டேங்குறாரு என்பது அவருக்கே வெளிச்சம். மாஸ் ஹீரோ படங்களுக்கு தேவையான அம்சங்களோடு இருக்கும் கதைக்குள் சமூக அக்கறைக்கும் இடம் கொடுத்த இயக்குனர், “ரமணா”வை நினைவு படுத்தினார். விஜய் படங்களுக்கு இருக்குற எதிர்ப்பார்ப்பு என்பது எப்படிப்பட்டது என்கிற தெளிவோடு படம் பார்த்தாலே போதுமானது.
இன்னும் இந்த படத்தை வேற மாதிரி எல்லாம் எடுத்திருக்கலாம் தான். சமீபத்துல வந்த விஜய் படங்கள் கொடுத்த தலைவலி இந்த படத்தில் இல்லை என்பது பெரும் வெற்றி. பாவம் பார்மசி வியாபாரிகள் தான்.

படத்தை பார்குறப்போ அந்த படம் மனசில ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்பது எனக்கு ரொம்ப முக்கியம். அதுக்காக கலைப்படம் தான் பார்ப்பேன் என்கிற பேர்வழி இல்லை. உலக சினிமா வெறியனும் இல்லை. எந்தப் படமானாலும் அதன் குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்த கதையை எப்படி ஆரம்பித்து எப்படி முடிக்கிறார்கள் என்பதும், ரசனையாளனான என்னை எப்படி கவர்கிறது என்பதும்தான் முக்கியம். 

எனக்கு படம் பிடித்திருந்தது.

Wednesday, August 13

KAய்ஞ்சு POன KAதல் - once upon a time in whatsapp

சாரா பேச ஆரம்பித்தால் அவளுக்கே மூச்சு முட்டி குரல் அடைத்தாலும் சொல்லவந்ததை எல்லாம் சொல்லிவிட்டுத்தான் பேச்சை முடிப்பாள். மைக்ரோ செக்கன்களில் அவளுக்கு குப்பென கோபம் முளைக்கும். கோபம் உள்ள இடத்தில்தானே குணமிருக்கும் என்கிற சொல்லின் ஆதர்சநாயகி-யவள். ரசனிக்கும் மனம் (ரசனையை ரசிக்கும் மனம் எனக்கொள்க) கொண்டவள். அந்த மனம் தான்  அவளை லிசாவின் ரசிகை ஆக்கியது. 

இந்தக் கதையின் பிரகாரம் அவன்தான் நாயகன். லிசா என்பது அவனது நிஜப்பெயரல்ல புனைப்பெயர். இந்த பெயருக்கான விளக்கம் சாராவுக்கு இன்னமும் தெரியாது. அவள் அறிமுகம் கிடைத்த நாளில் இருந்துதான் புனைப்பெயர் வைத்துக்கொண்டான். வனுக்கு கவிதை எழுதப்பிடிக்கும். அதை வாசித்து அவள் சிலிர்க்கும் தருணங்களில் பரவசமாய் ஏதோ ஒன்று மனதின் மையத்தில் வந்துபோகும் அந்தநொடி, அவனுக்கு ரொம்பவே பிடிக்கும். கவிதையின் பின் லிசா என்று கையொப்பமிடுவான். அதற்கு அவன் வைத்திருக்கும் விளக்கம் என்னவென்றால்.. (வேண்டாமே!! சஸ்பென்ஸ் போயிடும். கடைசியில கண்டிப்பா சொல்லிடுவேன். நீங்க கதையை படிங்க.)

பழகிய சில நாட்களிலேயே காதல் மலர்ந்து அதை இருவருமே மறைக்க முயன்று தோற்றுப்போனதில், ஒரு வாட்ஸ்எப் ஃபோர்வர்ட் மெசேஜ் காதலை பகீரென்று போட்டுடைத்தது. அதன் பின்னர் அவர்களின் அன்றாட சாட்டிங்கில் காதல் கலகலக்கும். அப்படியானதொரு நாளில்..

"சாரு.. கோயிங் டு கோவில் வித் அம்மா"

-சிறுபீப்போலி கேட்டு வாட்ஸ்எப் திறந்தாள் சாரா.

ஆச்சர்ய-முகமிட்டு கேள்விக்குறியோடு மறுமொழிந்தாள். பதிலுக்கு மென்சிரிப்பில் ஒரு முகம் இமோஜி ஆனது.

"போயிட்டு வந்து சொல்லுறேன்"

அதற்கடுத்த வரியில் அவன் எதையோ டைப் செய்து கொண்டிருந்தான்.

அதை முடிப்பதற்குள் அவனுக்கு செல்லிடப்பேச முனைந்தாள். கட் செய்தான். மீண்டும் முயன்று கட் செய்கிறான் என்று தெரிந்தும் மீண்டும் முனைந்தாள்!

"வெயிட்2"

-பளிச்சிட்டது அவனிடமிருந்து மெசேஜ். கடுப்போடு காத்திருந்தாள்.



Tuesday, July 22

கொஞ்சம் இதையும் சொல்லிடுறேன்! (03)

ரு பெண்ணுக்கும் ஆணுக்குமான அழகிய உறவை சினிமா காட்டுகிற அதே முறையில், நிஜத்திலும் நிகழ்த்திட இங்கே சாத்தியமே இல்லை.

டூயட் பாடிட, கலர் கலராய் ஆடைகள் மாறிட, நூறு பேர் பின்னணியில் ஆடுவதெல்லாம் நிதர்சனம் இல்லை.

நிஜத்தில் வாழ்க்கைக்கென்று எந்த BGMஉம் இல்லை. கட் ஷாட், க்ளோஸ் அப், லாங் ஷாட், ஜிம்மி ஜிப் என்று எதுவுமே இல்லை.. பிளாஷ்பெக் போய்விட்டு திரும்பி வருகிற நேரத்தில் வாழ்க்கை அப்படியே அதே இடத்தில், மீசை மைக்ரோமில்லிமீட்டர் அளவேனும் வளராமல் ஸ்தம்பித்து நிற்பதுமில்லை. ஒற்றை வரியில் சொன்னால்.,

வாழ்கை சினிமா இல்லை.

Thursday, May 29

One நிமிட் for 5 மினிட்ஸ் 29-05-2014

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் - செல்லக் குரலுக்கான தேடலில் தினமும் #தட்_சூப்பர்_மொமெண்ட்'களால் அமிர்தமுண்டு வாழ்ந்து வருகிறேன். களமிறங்கியிருக்கும் சின்ன சின்ன வாண்டுகளில் இதயம் கவர்ந்த ஸ்பூர்த்தி கண்ணுக்கும் காதுக்கும் குளிர்ச்சி! அனுஷா பாடும் போது கைகள் செய்யும் ஜலதரங்கம் அவள் குரலுக்கும் அதிகமாய் என்னை கவரும் secret recipe! ப்ரவஸ்த்தி பாடுகையில் என் headfone வழியே ஒரு குழலிசை! ஷிவானி வாய்ஸ் "வாவ்" ரகம்! ராபின் Excellency! பரத் powerpack! இப்படி எல்லாருக்கும் ஒரு ஸ்பெஷல் இருக்கு.. சொல்ல சொல்ல என் விசைப்பலகையும் இசைக்கேட்க ஆரம்பித்துவிடும்.  


  --#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#--


இது "நன்றிக்கடன் நேரம்" Powered By:- உணர்ச்சி பொங்கும் இதயம்

டந்தவாரம் வரை, 180+ ஜோடிவிழிகளாய் ரசித்திருந்த, எந்தன் ஆறாவது சக்கரம் fanpage யாரெல்லாமோ (தெரிந்தே) தவறுதலாய் எட்டிப்பார்த்ததில் 200ஐ தாண்டி 275 ஜோடிவிழிகளாய் உயர்ந்து.. வளர்ந்துகொண்டே இருக்கின்றது. 


கடமை, படிப்பு... இரண்டையும் விட வெட்டிவேலைக்கெல்லாம் மத்தியில் என்னை நேசித்த அத்தனை விழிகளையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.

Monday, May 5

எதையாச்சும் எழுதுவோம்

நமக்கென்ன கருவாச்சி காவியமா வரப்போகுது? நம்மளைத்தான் ப்ளாக் ரைட்டர்ன்னு ஒத்துக்குட்டாங்களே.. இனி மாசத்துக்கு நாலு பதிவை எழுதிபோட்டு ஒரு கொஞ்ச காலத்துக்கு எதையாச்சும் ஒப்பேத்துவோம்'னு பார்த்தால் எதையுமே உருப்படியா யோசிக்கவும் முடியலை, இந்த சோம்பெறித்தனமும் போய் சேருதில்லை! (கடைசி பதிவெழுதி நாலு மாசம் ஆச்சு!)



ஆனாலும், பழைய வீட்டுக்கு புதுசா பெயிண்ட் அடிச்சு, புதுப்பொழிவை ஏற்படுத்த ஆசை! பெயிண்ட்டுக்கு எங்க போவேன் நான்? என் சின்ன வீட்டுல (facebook) அடிச்ச பெயிண்ட் கொஞ்சம் இருக்கு.. இதோ கொஞ்சம் பூசிக்குறேன்..!

Monday, January 13

கஞ்சா வைச்ச கண்ணு..

நீ அவனை அப்படி பேசிருக்க கூடாதும்மா.. நம்ம பக்கமும் பிழை இருக்கு! என்ன இருந்தாலும்  அந்த இடத்துல அவளோ பேருக்கு முன்னால நீ அவனை..

சொல்லிக்கொண்டிருக்கும்போதே தனது உள்ளங்கையை விரித்து, அம்மாவின் முன் நீட்டினாள் திவ்யா.

அப்பாகிட்ட நான் பேசிக்குறேன்!

-என்றவள், இனி பேச எதுவுமில்லை என்பது போல எழுந்து போய் தன் அறையினை தாழிட்டு கட்டில் மேல் தொப்பென்று வீழ்ந்தாள்.


கதையை படிக்க தொடங்கும் நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு, இந்தக் கதையில்(லும்) நீங்கள் எதிர்ப்பார்க்கும் டுவிஸ்ட்டோ  அதை சார்ந்த எந்தவொரு சமாச்சாரமுமோ கிடையாது என்பதை தெளிவாக சொல்லிவைக்க கடமைப்பட்டுள்ளேன். அதையும் தாண்டி நீங்கள் , வேறு ஒன்றை தேடி வந்திருந்தால் கதையை தொடருங்கள்! தேடல் ஜெயிக்கட்டும்!

********************************************************************************