Wednesday, August 28

எட்டாவது நிறுத்தத்தில் என் காதல்..!


போய்ச்சேர முடியாத தூரத்தில்
வேண்டும் உன்னோடு 
ஒரு பேரூந்து பயணம்!

♂.. ♥.. ♀.. 

Tuesday, August 27

ராஜாத்தி ராஜா

நானும் அவளும் இசைஞானியின் தீவிரமான ரசிகர்கள். 

இருவருமே இணைந்து, ஒன்றாக அமர்ந்து பாடல் ரசிப்பதும், இளையராஜாவின் இசையை நினைத்து உருகுவதும், அந்த பாடல்களின் சிறப்பை பற்றியெல்லாம் பேசித்தீர்ப்பதிலும் பல நாளிகைகள் கழிந்ததுண்டு. 

எல்லாவற்றிலும் அதிகமாக நான் அவளை நேசித்திருக்கிறேன். அவளது 36 வயதில் அவள் இறந்துவிட்டால்.இன்று சட்டென யூ-டியூப்'பில் இந்தப்பாடலை பார்க்க நேர்ந்த போது, நான் என்னை கட்டுப்படுத்தமுடியாமல் அழுதுவிட்டேன். ராஜா சாருடைய இசை என் ஞாபகங்களை எப்போதுமே உயிர்ப்போடு வைத்திருக்கிறது. இன்றும் என் மனைவி என் அருகிலேயே இருப்பதை உணர்கிறேன். நான் கேட்ட இந்த பாடல் இளையராஜாவின் பாடல்களிலேயே மிகவும் சிறந்தது. இந்த பாடலுக்கு வேறெந்த பாடலும் இணை இல்லை!

-----------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, August 21

One நிமிட் for 5 மினிட்ஸ் (21-08-2013)

விஞர் வாலி பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தங்களை ரசிக்கவைத்த வரிகளை நண்பர்கள் சொல்லிக்கொண்டே வந்தார்கள். எல்லோருடைய ரசனைகளுமே வித்தியாசமாக இருந்தது. மீண்டும் மீண்டும் நேரம் போவதே தெரியாமல் பாடல்களை பற்றியும் அதிலே வரும் வரிகளை பற்றியும் சொல்லிக்கொண்டே இருந்தோம்.

நினைவிலிருந்த ஒரு பாடலின் வரியை சொல்லி இதில் வாலியின் திறமையில் நான் மயங்கி கிடக்கிறேன் என்று சொல்ல.. அதை எல்லோரும் ரசிக்க.. பாடலின் அடுத்தவரிகளை தேடி நான் கூகுளிட, இறுதியில் அவ்வரிகளின் சொந்தக்காரர் வேறோருவரானர்.

வரி இது தான்..

Sunday, August 18

ட்லேக்சா ட்ஹா -பிளாஷ் பெக்

 காட்சி- 06


200ஆவது லைக் நீதான் போட்டுருக்குற. நான் எழுதும்போது கண்டிப்பா 20லைக்ஸ் ஆச்சும் கிடைக்கும்னு நினைச்சேன். இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேன். உனக்கு தேங்க்ஸ் சொல்ல கூடாது. இருந்தாலும் தேங்க்ஸ்.

நான் சொன்னதை கேட்டுவிட்டு தோழி இப்படி சொன்னாள்.

அந்த ஸ்வேதா பத்தி வாசிக்கும் போது எனக்கு என்னை தான் தெரிஞ்சுது, என்னை தான் பார்த்தேன்.. குரங்கு குட்டி போல நானும் இப்பிடி தான் அடிடா புடிடா'ன்னு கோவிச்சுட்டு போவேன். பிறகு உய்ய்ய்ய்ய்'ன்னு அழுவேன்.

Thursday, August 15

ஹாட் சாக்லேட்

"சுவீ.. ஐ அம் இன்! நீ எங்க..?"

-சொன்ன இடத்துக்கு சரியா இருபது நிமிசம் தாமதமா வந்து சேர்ந்தாரு நம்ம ஹீரோ ஜீவா. 

போனில் இடம் கேட்டுக்கொண்டான்.  

"கேஷியர் பக்கத்துல லெப்ட்டு திரும்பி நேரா உள்ள வா.. நாலாவது டேபிள்."

-இது  நம்ம ஹீரோயின். ஸ்வேதா. செல்லமா சுவீ.

இவங்களோட கடைசி சந்திப்பு இது. ரொம்பகாலமா லவ்வா தான் இருந்தாங்க. கடைசியில எல்லாருக்கும் மாதிரி இவங்களுக்கும் ஒரு அர்த்தமில்லாத இடைவெளி. எவ்வளவோ தடவை ஓட்ட வைக்கலாம்னு பார்த்தாங்க. ஆனால் முடியல. ஒரு நாள் போன்ல ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தாங்க. நிரந்தரமா பிரியுறதுன்னு. சிட்டில எல்லாத்துக்குமே பார்ட்டி தான். இன்னைக்கு நம்ம ஹீரோ ஹீரோயினோட பிரேக் அப் பார்ட்டி. ஒரு காபி டே ரெஸ்டாரன்ட். சாயங்கால நேரம்.

Monday, August 12

தம்மாதுண்டு வாழ்க்கை! தாறுமாறா கனவு! ☺

நானெல்லாம் பேசாம இருக்குறது ரொம்ப கஷ்டம். வளவளன்னு ஏதாச்சும் பேசிக்கிட்டே இருப்பேன். அப்பிடியும் இல்லேன்னா இதை மாதிரி ஏதாச்சும் எழுதி கிறுக்கிட்டாவது இருக்கணும். அதுவும் எழுதுறதுக்கு ஒரு தனி மூட் வேணும். சும்மா நினைச்ச நேரம் எல்லாம் எழுதவும் வராது. இந்த சில நாட்களா ஒரு பக்கம் வேலை முடிஞ்சு வந்தால் சாப்பிட்டு தூங்கிடுறது ஒரு வழக்கமாகிப்போச்சு. தனிமை என்பதையும் அதன் தாக்கம் பற்றியும் என் வலைப்பூவிலேயே நிறைய பதிவுகள் எழுதிட்டேன். சம்பாதிக்குறதும், அதை செலவு பண்ணுறதும் வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு! மனுசனா பொறந்துட்டமே..'ன்னு அலுத்துக்கிட்டு வாழவேண்டி இருக்கு!

மனுஷனுக்கு ரொம்ப முக்கியமான தேவை என்ன?...

எல்லாரும் ஏன் இவ்வளோ வேகமா ஓடிகிட்டு இருக்காங்க.. என்ன தேவை இவங்களுக்கு? நானும் எதுக்காக இப்பிடி ஒரு வாழ்கையை வாழ்ந்துகிட்டு இருக்கேன்? எதை தேடி இவ்வளோ வேகமா ஓடிகிட்டு இருக்கேன்? அப்பிடி சாதரணமா யோசிச்சு பார்த்தேன்.. பதில் கிடைக்கலை.

சரி கொஞ்சம் சீரியஸ்ஸா யோசிச்சு பார்ப்போம்னு கையில ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துகிட்டு உக்கார்ந்துட்டேன்!..

எழுத ஆரம்பிக்கும் முன்னமே சொல்லிடுறேன்.. இது ஒரு தொடர் பதிவு..
 ❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥