Tuesday, October 22

ஆறாவது சக்கரம் - 50

ருவருட பூர்த்தியின் சந்தோசக் களிப்பில் இந்த வலைப் பதிவு மனை பற்றி வாசகர்களோடு பகிர்த்துகொள்ள ஆசைப்பட்டு சுய புராணம் பாடியிருக்கிறேன். முழுமையாக படித்துவிட்டு மங்களம் பாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


Sunday, October 20

எனை என்ன செய்தாய்..

தொடர்ந்து என்னை வாசித்து வருபவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! புதியவருக்கு இந்த பதிவு உங்களுக்கு சலிப்பை தரக்கூடும். இடது பக்கம்  "மேகம் தொட்டவை" பகுதியில் உள்ளதை வாசித்து விட்டு வாருங்கள்.

மிழ் பதிவுலகம் ரொம்ப பெரியது. நான் எங்கேயோ ஒரு மூலையில இருக்கேன். பிரபலங்களின் பதிவுகளை வாசிக்கும் பலருக்கு என் எழுத்தெல்லாம் ஒன்னுமே கிடையாது. ஆனாலும் என்னையும் வளர்த்து விடும் உங்களின் நல்லெண்ணம் தான் இந்த மாதிரி எல்லாம் பேசவைக்குது.

கொஞ்சம் எமோசனல் ஆசாமி தான் நான். எனக்கும் உங்களுக்குமான இந்த இணையத்தொடர்பு வளரணும்னு நிறைய கனவுகளோடு.., தொடர்ந்து வாசிங்க.. பின்னூட்டத்தில கருத்துக்களை சொல்லுங்க.. பிடிச்சுருந்தா ஷேர் பண்ணுங்க...'ன்னு வழக்கமான டெம்ப்ளேட் வார்த்தைகளை சொல்லி இரண்டாவது வருடத்திக்குள் அடி எடுத்து வைக்கும் ஆறாவது சக்கரத்தின், எழுத்துக்களை நேசிக்கும் உங்களை நன்றி சொல்லி என் கடன் தீர்க்க முடியாமல், வார்த்தைகளை தேடி விரைகிறேன்....


Wednesday, October 16

தம்மாதுண்டு வாழ்க்கை! தாறுமாறா கனவு! தொடர் - 3

ழையை பற்றி பேசுவதை விடவும் மழையில் நனைவதை விரும்புபவன் நான். இது என்னை நானே நனைத்துக் கொள்ள தொடர்ந்து எழுதிவரும் ஒரு பதிவு. எனக்கான மழையில் நீங்களும் நனைந்து கொள்ள விரும்பினால் உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.

குறிப்பு: நனைவதால் வரப்போகும் காய்ச்சல், தலைவலிக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


Friday, October 11

வாக்குப்பதிவும்.. இசைஞானி கவிதையும்..

றாவது சக்கரம் பதிவுலகம் ஏறி ஒரு வருடம் பூர்த்தியாகப்போகிறது.. இந்த ஒருவருடம் முழுதும் நீங்களும் என்னோடு இருந்ததை நினைத்து, நன்றியோடு ஒரு பதிவை எழுதத் தயாராகிக் கொண்டு இருக்கிறேன். உங்கள் நேரத்தில் இடம் ஒதுக்கி, என் எழுத்துக்களை படிக்க வந்து போனவர்களின் கண்களையும் ஏதோ ஒரு வகையில் என் பதிவுகள் குளிர்வித்திருக்கும் என நம்புகிறேன். இந்த வாக்குப்பதிவு ஒரு சுய விளம்பரம் மட்டுமே. 

யாராரோ எதுக்கெல்லாமோ விளம்பரம் தேடுறாங்க நான் எனக்கான கனவுகளை நீட்டிக்கொள்ள விளம்பரம் தேடுகிறேன். ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பங்கள் இருக்கக் கூடும் என்பதால், தரவுகளில் உங்கள் தெரிவினை "டிக்" செய்து வாக்கு பதியலாம். நன்றி.



~~~~~~~~~~~*~~~~~~~~~~~*~~~~~~~~~~~*~~~~~~~~~~~*~~~~~~~~~~~*~~~~~~~~~~~*~~~~~~~~~~~

Saturday, October 5

தோழியரிஸம்_updates - september 2013

ழகியலின் வர்ணங்களை புரிதலின் யதார்த்தங்களோடு இழைத்து இழைத்து நெய்யப்பட்ட உறவுதான் நட்பு. அதை எந்த வரம்பும் தாண்டாமல் இறுதிவரையும் புனிதம் காக்கும் ஒரு ஆணும் பெண்ணும் கடவுளுக்கு நிகர் ஆனவர்கள்.

ல்லோருக்கும் கிடைத்து விடாது இப்படி ஒரு உறவு! அள்ளி அள்ளி பூசிக்கொள்ளும் அளவுக்கு மலை போல குவிந்து கிடக்கிறது இந்த அழகான உறவின் நினைவுகள். நிகழ்காலத்தின் அழகான தருணங்களில் கடந்தகாலத்தின் வரங்களை எடுத்துவருகிறது இந்த உறவு. அதை எதிர்காலத்துக்காய் பதிவு செய்யும் முயற்சி தான் அடியேனின் இந்த "தோழியரிஸம்_updates!"