Saturday, October 5

தோழியரிஸம்_updates - september 2013

ழகியலின் வர்ணங்களை புரிதலின் யதார்த்தங்களோடு இழைத்து இழைத்து நெய்யப்பட்ட உறவுதான் நட்பு. அதை எந்த வரம்பும் தாண்டாமல் இறுதிவரையும் புனிதம் காக்கும் ஒரு ஆணும் பெண்ணும் கடவுளுக்கு நிகர் ஆனவர்கள்.

ல்லோருக்கும் கிடைத்து விடாது இப்படி ஒரு உறவு! அள்ளி அள்ளி பூசிக்கொள்ளும் அளவுக்கு மலை போல குவிந்து கிடக்கிறது இந்த அழகான உறவின் நினைவுகள். நிகழ்காலத்தின் அழகான தருணங்களில் கடந்தகாலத்தின் வரங்களை எடுத்துவருகிறது இந்த உறவு. அதை எதிர்காலத்துக்காய் பதிவு செய்யும் முயற்சி தான் அடியேனின் இந்த "தோழியரிஸம்_updates!"



என் முகப்புத்தக்தில் கடந்த மாதம் முதல் எழுதத்துவங்கிய இந்த குறும்பதிவுகளில் இருந்து ஒரு சிலதை மாத்திரம் இங்கே தருகிறேன். மேலும் இனிவரும் ஒவ்வொரு மாதத்தின் ஆரம்ப வாரத்திலும் அதன் முன்னைய மாதத்தில் (முகப்புத்தகத்தில்) பதிந்த தோழியரிசத்தை இங்கே முழுப்பதிவாக தரக்காத்திருக்கிறேன். 

தலைப்பு - ஒரு விளக்கம்:

கார்க்கி என்கிற பிரபல டுவிட்டர் மற்றும் பிரபல பதிவர்தான் என் இந்த தலைபிற்கான இன்ஸ்பிரேசன்.

அவரது தோழி அப்டேட்ஸ் தலைப்பில் இருந்து இந்த தலைப்பை சுட்டேனே தவிர அவரது டுவீட்டுகளில் அவரது உள்ளீடு வேறு., காதலை பற்றியவை! பெரும்பாலும் காதலியோடு க(ளி)ழிப்பவை. நேரம் கிடைக்கும் போது தவறாமல் வாசித்து பாருங்கள்.

எழுத்தறிவித்த அறிவுமதி :

கவிஞர்  அறிவுமதியின் நட்புக்காலம் கவிதை நூலை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பன் காண்டீபன். சில நேரங்களில் என் கைக்கு வரும் நூல்கள் பல என் வீட்டிலேயே தங்கிவிடும். அவ்வளவு நெருக்கமான உறவை நான் நூல்களோடு கொள்ளுவது வழக்கம். நட்புக்காலத்தை அவனது அறையில் வைத்தே வாசித்து முடித்துவிட்டு பத்திரமாய் அந்த நூலை அவனுக்கே கொடுத்துவிட்டேன். ஆனாலும் கவிதைகளை என்னோடு அழைத்து சென்று விட்டேன். அந்த எழுத்துக்களின் பாதிப்பு தான் இந்த "தோழியரிஸம்_updates!"

".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'.".".".".".".".".".".".".".".".".".'."."

 காதலியின் சந்தோஷமான வாழ்த்துக்களை விடவும் ரசிக்க தக்கது, 
தோழியின் கேவலமான திட்டு! (அதெல்லாம் வரம் டா.. வரம்!!) 

★★★★★


ள்ளிரவில் அழைத்து வாழ்த்து சொல்பவள் காதலி
விடியற்காலை வீட்டினுள் வந்து நின்று "கிளம்பு கோவிலுக்கு" என்பவள் தோழி!

★★★★★

புகைப்படம் எடுக்கையில் காதலியோடு Cuteness!
தோழியோடு மட்டுமே Craziness!!

★★★★★


டத்துக்கு போவோம் வர்றியா? என்றால்,
"எங்க, என்ன படம், எதுக்கு இப்போ திடீருன்னு?" என்பவள் காதலி..
"டிக்கெட் புக் பண்ணிட்டு கூப்பிடு " - தோழி!

★★★★★


யார்கூட இவ்வளோ நேரம் பேசிட்டு இருந்த?- காதலி
இனிமேல் சொல்லு அவகிட்ட நான் waitingல இருக்கேன்னு- தோழி



★★★★★
காதலியோ மனைவியோ தோழியாகலாம்..
ஒரு தோழியால் மட்டுமே இன்னொரு தாயாக முடியும்!

★★★★★

னைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
தோழி அமைவதெல்லாம் இறைவனுக்கே கிடைக்காத வரம்!

★★★★★


ரண்டு நாள் இடைவெளி விட்டால்
ஒரு வித கலக்கத்துடன் பேசுபவள் காதலி
இயல்பாய் பேசுபவள் தோழி!

★★★★★

Hugs, Kisses and Miss you- காதலி
Tight Hugs, sweet kisses &  Love always - தோழி




★★★★★
profile pic பற்றி கேள்வி கேட்பவள் காதலி..
password  கேட்டு வாங்கி  படத்தை மாற்றுபவள் தோழி!

★★★★★

காதலி அழுதால் சகிக்காது..
தோழியின் கண்ணீர் செரிக்காது!

★★★★★


மௌனத்தில் வார்த்தைகள் வைப்பவள் காதலி..
வார்த்தைகளால் மௌனத்தை தருபவள் தோழி..
(புரியலைனா யோசிங்க!)

★★★★★

தெருவில் இறங்கி நடக்கையில் காதலி, நடிகை ஆகிறாள்!
தோழி தோழியாக மட்டுமே இருக்கிறாள் !

★★★★★

து சொன்னாலும் ஏற்க மறுக்கிறாள் காதலி..
எதை சொல்லாமலும் புரிந்து கொள்கிறாள் தோழி!

★★★★★

ன் புகைப்படத்தில் அழகாய் சிரிக்கிறாய் என்றேன்..
வெட்கத்தில் குழைந்தாள்.. காதலி!
தோழியிடம் சொன்னேன்.. "பொத்திக்கிட்டு போறியா?" என்கிறாள்!


★★★★★

ன்னோட இருக்கையில உலகமே மறக்குது.. - காதலி
உன்னால தான் உலகமே புரியுது.. - தோழி


★★★★★

Post Comment

No comments: