Monday, October 28

உன் கனவுகளுக்கும் காதலன் ஆனேன்!



திரினில் அமர்ந்துகொண்டு 
ஏதும் பேசாமல் இருக்கையிலும்.. 

மெல்லத் துளைக்கும் பார்வையின் 
வழியே உயிர் வாங்கிப் போகும்
வரம் எப்படி வாய்த்தது உனக்கு..

♂.. ♥.. ♀.. 
ரு அதிகாலை நேரம்..
உன் கனவில் நான் 
வந்து போனதை சொல்லி..
அந்த நாளெல்லாம்
குறுஞ்செய்தியால் 
தகவல் அனுப்பி 
வெட்கம் குழைத்து
கொண்டிருந்தாய் நீ..

சிரமம் பாராது 
ஒரே ஒரு உதவி மட்டும் செய்..

இனி
கொஞ்சம் கனவிலாவது 
உன்னை கொஞ்ச விடு!

♂.. ♥.. ♀.. 



அந்த குளக்கரையின் 
ஓரமாக அமர்ந்தபடி..
கைகள் கோர்த்து என் 
தோளில் சாய்ந்திருக்கையில்..

எனை மறந்து 
உனை ரசிக்கும்  
கணங்களை மட்டும்..

என்னை  நகல் ஆக்கி
அந்த சாலை முனையில்
ஒரு ஓரமாய் 
நின்றபடி 
ரசித்திட துடிக்கிறேன்!

♂.. ♥.. ♀.. 

ற்றொரு நாளில்
உன் வீட்டின் அறையில் 
நான் நிற்பதைப்போல 
கனாக் கண்டு..

மீதிக்கனவை மறந்து விட்டாய் என 
ஏங்கித்  தவித்தாயே..

அன்று முதல் 
உன் கனவுகளுக்கும் காதலன்
ஆனேன்!..

♂.. ♥.. ♀.. 


ந்து சேர நேரமாகும் நாளில்..
கோணல் முகத்தோடு 
எனை வரவேற்கும்  
உனக்கு.. 

ஊடல் ஓய்ந்திட 
ஒரு குட்டிக்கவிதை போதும்
உன் கன்னத்தில்..!

♂.. ♥.. ♀.. 


ம்மாவின் 
புடவை கொண்டு  நீ
உனை அலங்கரித்த
புகைப்படம்
கண்டதிலிருந்து 

அந்த ஐந்து வயது
குறும்புக்காரியை
எப்படியெல்லாம்
காதலிக்கிறேன் என
நான் சொன்னாலும்
புரியாது உனக்கு..

முதல் குழந்தை எனக்கு
பெண்ணாய் பெற்றுக் கொடு!..

♂.. ♥.. ♀.. 



ன் 
துப்பட்டாவை கொண்டு 
என் தலை துவட்டிய 
அன்றில் இருந்து..
உன் சுடிதார் தினங்களில் எல்லாம் 
மறக்காமல் ஞாபகமாய் 
தவறவிட்டுவிடுகிறேன் 
என் குடையை..!

ஆவன செய் மழையே !

♂.. ♥.. ♀.. 




ப்போதெல்லாம்

குனித்தபுருவம்
உயர்த்தி ஒரு பார்வை
பார்ப்பாயோ..

அப்போதெல்லாம் -உன்
வெள்ளை பார்வையில் 
ஒரு கவிதை தோன்றும்..

மொழியில்லாத 
அந்த கவிதையின் -அழகிய 
மொழிபெயர்ப்புதான் 
என் காதல்!


♂.. ♥.. ♀.. 

Post Comment

No comments: