Monday, February 18

One நிமிட் for 5 மினிட்ஸ் (18-02-2013)

இந்த தலைப்பின் விளக்கம் மற்றும் முதல் பதிவு  இங்கே.

*******************************

ன் நண்பர் ஒருவர் எடுத்த புகைப்படம் தான் மேல இருக்கு. பெயர் பிரசாத்  ஹரி. வாழ்க்கை மேல நம்பிக்கை நிறைய இருக்குற அழகான ஒரு இளைஞர். செய்ற வேலைக்கும் எடுக்குற புகைப்படங்களுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை! நிஜ உலகத்துல நடக்குற விசயங்களை, நிழற்படமா எடுக்கும் போது, பகல் வானம் போல மனசும் பிரகாசமா இருக்குதுன்னு சொல்லுறாரு! அந்த நம்பிக்கை அவருக்கு நிறைய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தணும். இந்தா இருக்குது அவரோட நம்பிக்கை! 
*******************************

Saturday, February 16

சரிகம"காதல்"பதனி -ஒரு ரசனை கெட்டவனின் பார்வையில்..

வேண்டுகோள் தயவு செய்து  இந்த பதிவை படிக்காமல் விட்டுவிடாதீர்கள்!

ரு சிந்தனை உருவாகி அதை சீரியஸா எடுத்திக்கிட்டு, அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து வெற்றியும் அடையணும்னா அதுக்கு தேவையான உழைப்பை கொடுக்கணும்! கலைப்படைப்பு என்று வரும்போது அதன் வெற்றி அதை ரசிப்பவர்களின் கைகளில் விடப்படுகிறது!

நேரடியா விசயத்துக்கு வாரேன். இந்த குறும்படம் உருவாகியதன் பின்னணி ஓரளவுக்கு தெரியும். படக்குழுவில் அநேகமானோரை தனிப்பட்ட ரீதியில் அறிவேன். பரீட்சார்த்த முயற்சி என்பதை மனதில் இருத்திக்கொண்டுதான் சிந்தனையை படமாக்க முயற்சித்தார்கள். திரைப்பட அனுபவம் போலவே திரைக்கருவிகளும் அதிகம் இல்லாத, ஒரு புதிய குழுவின் புது முயற்சி இது! 

Friday, February 15

சரிகம"காதல்"பதனி - குறும்திரைப்படவிமர்சனம்

எச்சரிக்கை: தயவு செய்து இந்த விமர்சனத்தை (ரொம்ப சீரியஸா) படிக்காதிங்க!


அரை மணித்தியாலத்திற்கும் சற்று குறைவாக ஓடக்கூடிய கொஞ்சம் நீளமான குறும்திரைப்படம் இது! திரை அனுபவம் போலவே திரைக்கருவிகளும் அதிகம் இல்லாத, இலங்கை திருநாட்டின் ஒரு புதிய குழுவின் புது முயற்சி. அந்த முயற்சியில் எப்படியான ஒரு வெற்றியை கண்டு இருக்கிறார்கள்? தொடர்ந்து வரும் விமர்சனத்தை  படியுங்கள்..



(மிக ஆழமான கவனித்தல்களை, கொஞ்சம் நீளமாக சொல்லும் பதிவு என்றதனால இரண்டு பகுதிகளாக இந்த விமர்சனம் எழுதப்படுகிறது.. )




விமர்சனம் எழுதுறதுக்கு எந்த முன் அனுபவமும் எனக்கில்லை. எல்லாமே என் நண்பர்களின் அல்லது அவ்வாறு நான் கருதுபவர்களின் ஒரு கன்னி முயற்சி, எனும் போது நானும், கிடைக்குற ஒரு வாய்ப்பை வச்சு இப்பிடி ஒரு நறுக் விமர்சனத்தை சொல்லிட்டு போறதுதான் நல்லது! வளர்ற புள்ளை தானேன்னு குறைகளை அதிகமா கண்டுக்கமாட்டாங்க. ரசிக்குற விஷயத்தை சொல்லுறதுக்கு அனுபவமும் அதிகம் தேவை இல்லைதானே?

Wednesday, February 13

தலைப்பு தேடினேன்.. கிடைக்கல!

திடீருன்னு நாலு நாள் லீவுல இருந்துட்டு நாளைக்கு திரும்பவும் வேலைக்கு போக போறேன்.
 
இந்த நாலு நாளும் சொல்லிக்கும் படியா எதையும் செய்ய கிடைக்கல. என் கூட தங்கியிருக்குற நண்பர்கள் அவங்கவங்க  ஊருக்கு கிளம்பி போயிட்டாங்க.இவ்வளோ பெரிய அப்பார்ட்மென்ட்ல நானும் நான் சார்ந்த இயக்கமும் மட்டும் தான் இயங்கிகிட்டு இருக்கு. அதிகமாக எந்த சலனமும் இல்லாத ஒரு வீட்டுக்குள்ள அடங்கிப்போய் வாழ்ந்துகிட்டு இருக்கேன். ஆனாலும் என் தனிமைக்கு இருந்தது என் கணணியும் அதன் இணையத் தொடர்பும் தான்.

உரையாடலுக்கு யாரும்மில்லாத ஒரு ரூம்ல இருக்குறப்போது கிடைக்குற தனிமையும், நேரமும் நிறைய யோசிக்க வைக்குது. எரிச்சல், மனஉளைச்சல் எல்லாம் இந்த காலத்துல எல்லாருக்கும் சாதாரணமானது தான்! அதிகமா வேலை செய்தாலும் அது இருக்கும். ஒரு வேலையும் இல்லாமல் சும்மா இருந்தாலும் இருக்கும். இந்த மாதிரி மன உணர்வை பாதிக்கும் தனிமைக்குள் இருக்கும் போது என்னோட எண்ணங்களை திசை திருப்புறதுக்கு இசையும், திரைப்படங்களும், வாசிப்பும், அப்பறம் கொஞ்சம் பிரார்த்தனையும் துணையா இருந்தது.

Wednesday, February 6

Steve Jobs'ம் என் BLOG'ம்

து 12வது பதிவு.... இந்த வருசத்தோட முதல் பதிவு!

நானும் என் மனசுல தோணுறதெல்லாம் எழுதி, இருக்குற கொஞ்ச நண்பர்களுக்கு ஒரு கலைச்சேவை(!) செய்யலாம்னு ஆரம்பிச்ச Blog, அங்கவொன்னும் இங்கவொன்னுமா கொஞ்சம் பதிவுகளை எழுதி கிறுக்கி அதுக்கு பிறகு, ரெண்டு-மாசமா ஏதோ ஒரு திறக்கப்படாத கோவில் அறை மாதிரி மூடியே கிடந்துச்சு! இப்போதான் கொஞ்சம் தூசுதட்டி பழைய Template'ஐ கொஞ்சம் மாத்தி  புது background மாத்தி ரெடிபண்ணி எடுத்துருக்கேன்!   

தலைப்பே சொல்லிடும், இப்போ என் மனசுல என்ன இருக்குன்னு. இதுக்கு இடைப்பட்ட காலத்துல சொல்லுறதுக்கும், பகிர்ந்துக்குறதுக்கும் எவ்வளவோ இருந்துச்சு. இதை எல்லாம் சொல்லி, எழுதி  யாரு படிக்க போறாங்கன்னு எழுதாமலே விட்டுட்டேன். ஒரு பக்கம் சோம்பல். இன்னொரு பக்கம் அதை விடவும் சோம்பலோ சோம்பல். "இப்போ எதுக்குடா வந்த?"-ன்னு கேட்குறீங்களா.. சொல்லுறேன்..