Saturday, February 16

சரிகம"காதல்"பதனி -ஒரு ரசனை கெட்டவனின் பார்வையில்..

வேண்டுகோள் தயவு செய்து  இந்த பதிவை படிக்காமல் விட்டுவிடாதீர்கள்!

ரு சிந்தனை உருவாகி அதை சீரியஸா எடுத்திக்கிட்டு, அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து வெற்றியும் அடையணும்னா அதுக்கு தேவையான உழைப்பை கொடுக்கணும்! கலைப்படைப்பு என்று வரும்போது அதன் வெற்றி அதை ரசிப்பவர்களின் கைகளில் விடப்படுகிறது!

நேரடியா விசயத்துக்கு வாரேன். இந்த குறும்படம் உருவாகியதன் பின்னணி ஓரளவுக்கு தெரியும். படக்குழுவில் அநேகமானோரை தனிப்பட்ட ரீதியில் அறிவேன். பரீட்சார்த்த முயற்சி என்பதை மனதில் இருத்திக்கொண்டுதான் சிந்தனையை படமாக்க முயற்சித்தார்கள். திரைப்பட அனுபவம் போலவே திரைக்கருவிகளும் அதிகம் இல்லாத, ஒரு புதிய குழுவின் புது முயற்சி இது! 


கட் பண்ணி ஓபன் பண்ணினால், டைரக்டரோட வாய்ஸ் மட்டும் கேட்குது..

"கதை ரெடி! ஸ்கிரிப்ட் ரெடி! வசனம் கூட LOCATION'ல சொல்லிக்குடுத்து பேச வைச்சுடலாம்! கதைக்கு தேவை நடிகர்கள்! இருக்கவே இருக்காங்க கைவசம் கொஞ்சம் பேர்! அவங்களுக்கும் கொஞ்சம் நடிப்பு வரணும்! ஓகே.. அப்பறோம் ஒரு DSLR கேமரா! ஷூட்டிங் பண்றதுக்கு இடம் வேணும், இருக்கவே இருக்கு BVM! ப்ரொடக்சன் வேலைக்கு ராகுல் இருக்கான். இருக்குற Light Settings'சை பயன்படுத்தினாலே போதும்! அதுக்கு பிறகு டப்பிங் பேச வைச்சு, கொஞ்சம் கலர் டோன் மாத்தி, எடிட்டிங் பண்ணுனா போதும். ஹ்ம்ம்ம்... பின்னணி இசைக்கு கொஞ்சம் இசைஞானி.. கொஞ்சம் இசைபுயல்! இடையில தேவை பட்டால் ஒரு சொந்த பாட்டு! அதுக்கும் தம்பி காணா'கிட்ட ஒரு டியூன் போட சொல்லிடலாம்! ஓகே பிரசாத் ஹரி,நீங்க ரெடியா?"

இதுக்கு பிறகு நடந்ததையெல்லாம் இங்க பார்த்துக்குங்க! 

படத்தோட பலம் கேமரா! வசனங்களுக்கு கொடுக்குற முக்கியத்துவம் காட்சிகளில் கொடுக்கப்பட்டிருந்தால் படம் இன்னும் சுருக்கமா இருந்துருக்கும்! ஒரு லைப்ரரி உள்ளுக்குத்தான்  உட்காந்து பேசுறாங்கன்னு மேசையில் இருக்குற books சொல்லிடுமா? இப்பிடி காட்சிப்படுத்தல்களில் சில குறைகள் இருந்தாலும், கேமரா கோணங்களும், படத்தொகுப்பும் ரசிக்க வைச்சுருக்கு! சில இடங்களில் lightning ஒத்துழைக்கலைன்னு தெரியுது! 


வசனங்கள் இயல்பா இருக்குறதை வரவேற்கத்தான் வேணும்! ஸ்பொட்'ல சொல்லிக்கொடுக்குற வசனங்களை தான் பேசி நடிச்சுருக்காங்கன்னு கேள்வி பட்டேன்! அதுக்கு பிறகு டப்பிங்ல கவர் பண்ணிக்கலாம்னு விட்டுடாங்க! 


லிப் சின்க் ஆகலை, வாய் அசைவும், பின்னணி குரலும் ஒழுங்கில்லை, சில இடத்துல வாய் மட்டும் அசையுது வசனமே இல்லை'ன்னு படம் எடுத்தவருக்கே நல்லா தெரிஞ்சுருக்கும்,..So அதை பற்றி நோ கமெண்ட்ஸ்! ஆனால், வசனங்களில் கொஞ்சம் மெனக்கட்டுருக்கலாம்ன்னு தோணுது! "...நேத்து உங்க கவிதை படிச்சேன் நல்லா இருந்துச்சு"ன்னு சொல்லும் போது அடுத்த வரியில அந்த கவிதையையும் சொல்லிருந்தால் அந்த காட்சி இன்னும் அழகா வந்துருக்கும்! அதே மாதிரி மூணு இடத்துல கவிதை சொல்லுறதுக்கான வாய்ப்பு இருந்தும் பயன்படுதிக்காம விட்டுடிங்க டைரக்டர் சார்! ..ப்ச்!! உங்க A.D's எல்லாம் என்ன பண்ணுறாங்க?.. 




அடுத்தது நடிகர்கள்! கதைக்கு தேவை மூனே பேரு! அவங்களுக்கு காட்சியை சொல்லிக்கொடுத்து நடிப்பை வாங்குற வேலையை டைரக்டர் சிறப்பாவே செய்துருக்காரு.ஷூட்டிங் டைம்ல நிறைய சொதப்பல்கள் இருந்திருக்கும். சிரிச்சு சிரிச்சு உங்க வயிறு புண்பட்டிருக்கும்! காரணம். கரண்ட் ஸ்டார் IN ACTION! சொல்லவா வேணும்? பரவாயில்லை சொல்லுங்க! bloopers இருந்தால் அதையும் சொல்லுங்க! அவரோட தீவிர கடைக்கோடி ரசிகர்கள் பார்க்க ரெடி! மற்றபடி, நல்லாவே நடிக்குறாரு! டப்பிங் வாய்ஸ் ராகுல் தானே? ரொம்ப பொறுந்தியிருக்கு! Voice-modulation நல்லா கொடுத்துருக்காரு!



கதாநாயகி நல்ல ஒரு தேர்வு! உங்களுக்கு (கதைக்கு)அவங்க கிடைச்சதே பாதி வெற்றி தான்! தேவையான இடத்துல அளந்து செய்துருக்காங்க. க்ளோஸ்-அப் சீன்ஸுக்கு மட்டும் கண் எங்கெங்கயோ ஓடுது! அவங்களுக்கு கேமரா presence நல்லா இருக்கு! இந்த முயற்சியில் அவங்களோட பங்கு ரொம்ப பெருசு!


மூன்றாவது நடிகர், அழகா இருக்காரு! சில இடத்துல ரொம்ப இயல்பாவும் இருக்காரு! வாய்ஸ் நல்ல இருக்கு! நடிக்கவும் வருது! கொஞ்சம் பயிற்சி தேவை! ஆனால், என்ன அழகா இருந்து என்ன புண்ணியம்? கடைசியில தின்ன தெரியாதவனுக்கு தானே Bun'னு கிடைக்குது! அவரு என்ன பண்ணுவாரு, கதை அப்பிடி!

படபிடிப்புக்கு தெரிவு செய்யப்பட்ட இடம் அவ்வளவா பொருந்தலன்னு தான் சொல்லணும். காதல் கதைக்கு காட்சிகளும்,படமாக்கப்படும் இடமும் முக்கியம் தானே? கவனிச்சுக்குங்க! வெளிப்புற படபிடிப்பெல்லாம் நல்லா இருக்கு! லாங்-ஷாட் அப்பறம், சில டாப் அங்கிள் ஷாட் எல்லாம் நல்லா இருக்கு! எடிட்டிங் நல்லா செய்துருக்கிங்க! உதாரணத்துக்கு, நண்பர்கள் கண்ணாடி பார்த்துகிட்டே பேசுற இடம்! அங்கிள், மாற்றி மாற்றி எடுத்ததும், கண்ணாடி முன்னுக்கு நிக்குற மாதிரி காமெராவை பயபடுத்தி இருக்குறதும் சூப்பர்!

குறைகள் கண்டுபிடிக்குறது ரொம்ப ஈஸி! அதெல்லாம் அடுத்த அடுத்த முயற்சிகளில் பார்த்து செய்துக்கலாம்! ..செய்விங்க! செய்திங்கன்னா நல்ல வருவிங்க! ..வரணும்!


இதுல ஒரே ஒரு இடம் மட்டும் காட்சிகளை வேறு விதமா மாத்தி பண்ணியிருக்கலாம்! கடைசி இரண்டு காட்சிகள்!.. முதல்ல சொன்னதை அப்படியே கடைசியா சொல்லி முடிச்சுருந்திங்கன்னா இன்னும் அழகா வந்துருக்கும்! எப்பிடின்னா...

நாயகனை நாயகி கன்னத்துல அடிக்குற ஸீனுக்கு பதிலா,

நாயகன் மன்னிப்பு கேட்டதும் எதுவும் பேசாம அமைதியா நிக்கிற கதாநாயகியை அவர் ஏக்கத்தோட பார்த்துட்டு, ஓரமா விலகிப்போய் ஹியர்-போனை மாட்டிகிட்டு பாட்டு கேட்க ஆரம்பிக்குராறு! 

அப்போ, பின்னால இருந்து அவருகிட்ட இருந்து ஹியர்-போனை கழற்றிகிட்டே "எனக்கும் இளையராஜா பாட்டு கேட்க பிடிக்கும்"னு சொல்லும் போது, அதுல இசை புயல் பாட்டு கேட்குறதை அப்படியே காட்டிட்டு, 

படத்தோட டைட்டில் போட்டு அப்பிடியே music, scene எல்லாத்தையும் மெல்ல குறைச்சுட்டு, "தென் பாண்டி சீமையில" பாட்டை ஸ்டார்ட் பண்ணி  அந்த "அடுத்த படத்துல சொல்லுறேன்" ஸீனை காட்டி முடிச்சுருக்கலாம்!

ச்சும்மா...! தோணுச்சு சொன்னேன்!

மற்றபடி, நான் சொல்ல நினைக்குறது.. உங்களை வாழ்த்துகிற,உங்க டீம்'மை வாழ்த்துகிற நல்ல உள்ளங்கள், நலன் விரும்பிகள் எல்லாம் எப்போவுமே கூடவே தான் இருப்பாங்க! ஆனால் ரசிக்குற கூட்டம் தான், பிடிக்கலைனா விட்டுட்டு போயிடும்! So, இனிமே அடுத்த முயற்சிகளை பரீட்சார்த்த முயற்சிகளாக மட்டுமே எடுக்க மாட்டிங்கன்னு நம்புறேன்!

இது எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியமான ஒரு விஷயம், போன பதிவில் ஆரம்பத்துலையே சொன்னேன்.. படம் தொடங்கும் போதே,"அனைத்தும் கற்பனையே"ன்னு சொல்லிட்டு ஆதரவாளர்கள் பெயர் லிஸ்ட்'ல இருக்குற முதல் மூணு பெயரையும் திரைக்கதையில் அப்படியே பயன்படுத்தி இருக்கீங்க. எங்க, யாருகிட்ட மனு கொடுக்கணும்னு சொன்னிங்கன்னா, படத்தை banned பண்ணுறதுக்கு வசதியா இருக்கும்!.. நான் அப்பிடியே ஷாக் ஆகிட்டேன்!
Best Wishes to Team THRIVENOR !

Post Comment

No comments: