Wednesday, February 6

Steve Jobs'ம் என் BLOG'ம்

து 12வது பதிவு.... இந்த வருசத்தோட முதல் பதிவு!

நானும் என் மனசுல தோணுறதெல்லாம் எழுதி, இருக்குற கொஞ்ச நண்பர்களுக்கு ஒரு கலைச்சேவை(!) செய்யலாம்னு ஆரம்பிச்ச Blog, அங்கவொன்னும் இங்கவொன்னுமா கொஞ்சம் பதிவுகளை எழுதி கிறுக்கி அதுக்கு பிறகு, ரெண்டு-மாசமா ஏதோ ஒரு திறக்கப்படாத கோவில் அறை மாதிரி மூடியே கிடந்துச்சு! இப்போதான் கொஞ்சம் தூசுதட்டி பழைய Template'ஐ கொஞ்சம் மாத்தி  புது background மாத்தி ரெடிபண்ணி எடுத்துருக்கேன்!   

தலைப்பே சொல்லிடும், இப்போ என் மனசுல என்ன இருக்குன்னு. இதுக்கு இடைப்பட்ட காலத்துல சொல்லுறதுக்கும், பகிர்ந்துக்குறதுக்கும் எவ்வளவோ இருந்துச்சு. இதை எல்லாம் சொல்லி, எழுதி  யாரு படிக்க போறாங்கன்னு எழுதாமலே விட்டுட்டேன். ஒரு பக்கம் சோம்பல். இன்னொரு பக்கம் அதை விடவும் சோம்பலோ சோம்பல். "இப்போ எதுக்குடா வந்த?"-ன்னு கேட்குறீங்களா.. சொல்லுறேன்..





இந்த மாதிரி ஒரு போஸ்டர் தான் காரணம். Steve Jobs என்கிற ஒரு மனிதன் தான் காரணம். விஸ்வரூபம் படத்துல கமலுக்காக வைரமுத்து எழுதின "யாரென்று புரிகிறதா?..." பாட்டை யாருக்கு Dedicate பண்ணப்போறீங்கன்னு யாராச்சும் என்கிட்ட கேட்டால், நான் கண்ணை மூடிகிட்டு இவரை தான்  கைக்காட்டுவேன்!

உலகத்தையே புரட்டி போட்ட மூன்று ஆப்பிள்களில் மூன்றாவது "apple" உருவாக்குனர். "விடா முயற்சி! விஸ்வரூப வெற்றி!!"-க்கு மிகச்சரியான உழைப்பாளி. தான் எதை கண்டுபிடிச்சாரோ அதை மட்டுமில்லாமல், தன் சொந்த வாழ்க்கையும் அடுத்த தலை முறைக்கு ஒரு ஆர்ச்சர்யமான செய்தியாகவே விட்டுட்டு போனவரு. இவரை எனக்கு ரொம்பவும் பிடிக்க  நிறைய காரணங்கள் இருக்கு. ரொம்ப விசித்திரமான ஒரு காரணம் என்னான்னு பார்த்திங்கன்னா, இவரு போட்டுருக்குற மூக்கு கண்ணாடி.

அண்ணல் காந்தி'க்கும் இவருக்கும் "Think Different " வாக்கியம் மட்டுமில்லாமல் இந்த பொருத்தமும் இருக்கு!


1999ம் வருஷம்  Time பத்திரிகை, Steve Jobsகிட்ட "நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதராக  யாரை சொல்லுவிங்க?-"ன்னு   கேட்டாங்க.

 “Mohandas Gandhi is my choice for the Person of the Century because he showed us the way out of the destructive side of our human nature.”ன்னு பதில் சொன்னாரு.

தனக்கு தடைகள் குழப்பங்கள் வரும்போதேல்லாம் தன்னம்பிக்கைக்கு துணையா இருந்தது அண்ணல் காந்தியின் வார்த்தைகளை தான்'னும் சொல்லிருக்காரு.


 "சரி! இதெல்லாம் எதுக்கு? விசயத்துக்கு வா'ன்னு கேட்குறிங்களா.. நான் உலகத்தை மாத்துற அளவுக்கு எதையுமே செய்ய போறதில்லை. என்னை சுற்றி நடக்குற விசயங்களை நான் பார்க்குற, உணருகிற, சிந்திக்குற விதம் எப்பவுமே புதுசாவும், வித்தியாசமாவும் இருக்கணும்னு நினைக்குறவன் நான்! என் Twitter, facebook தளங்களில் நான் பகிர்ந்துக்குற விசயங்கள் இப்படி "Think Different " வகையறாக்கள் தான்! அது மட்டுமில்லாமல், நான் இந்த வலைத்தளம் ஆரம்பிக்கும் போதும் என் வித்தியாசமான சிந்தனைகளை பகிர்ந்துக்கொள்ளனும்'ன்னு தான் ஆரபிச்சேன்!

ஆனால் facebook,twitter பக்கம் கிடைக்குற ஆதரவு எல்லாம் பார்த்துட்டு அங்கேயே உட்காந்துட்டேன். நாங்க என்ன அவ்வளோ பெரிய அப்பாடக்கரா? ஏதோ கொஞ்சம் சுமாரா எழுதி, அதையும் சிலர் படிச்சுட்டு, போனா போகுதுன்னு LIKE, Comments எல்லாம் குடுக்குறாங்க. "இது போதுமே..எனக்கு இது போதுமே"ன்னு விட்டுட்டேன்.

அதிலும் சில "நல்ல" நண்பர்கள் என்னை, நான் எழுதுறதை பாராட்டி [என்னாலயும் நம்ப முடியல!] தொடர்ந்து Blog எழுதுங்கன்னு சொல்லுறதை கேட்கும் போது, "அடிச்சு ஒட்டுரா பசுபதி.."ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு Ready ஆகிட்டேன்.

இனி............ இது, என் களம்! என் தளம்!(நீங்க பொறுத்துகிட்டுத்தான் ஆகனும்!) எனக்கு எப்போ டைம் கிடைக்குமோ அப்போ எதையாவது  கிறுக்குறேன் (எழுதுறேன்'ன்னு சொல்லணும், ஆனால் ஒரு சின்ன தன்னடக்கம்). ஓவர் confident உடம்புக்கு ஆகாது இல்லையா? நீங்களும் நேரம் கிடைக்கும் போது "அடிக்கடி" வந்து உங்க LIKE, Comments எல்லாம் தர்மம் பண்ணிட்டு போங்க. தர்ம அடி மட்டும் வேண்டாம்! அப்போ நான் போயிட்டு வரட்டுமா? இனி அடிக்கடி வித்தியாசமா ச(சி)ந்திப்போம் என்கிற நம்பிக்கையோடு....

Post Comment

No comments: