Friday, February 15

சரிகம"காதல்"பதனி - குறும்திரைப்படவிமர்சனம்

எச்சரிக்கை: தயவு செய்து இந்த விமர்சனத்தை (ரொம்ப சீரியஸா) படிக்காதிங்க!


அரை மணித்தியாலத்திற்கும் சற்று குறைவாக ஓடக்கூடிய கொஞ்சம் நீளமான குறும்திரைப்படம் இது! திரை அனுபவம் போலவே திரைக்கருவிகளும் அதிகம் இல்லாத, இலங்கை திருநாட்டின் ஒரு புதிய குழுவின் புது முயற்சி. அந்த முயற்சியில் எப்படியான ஒரு வெற்றியை கண்டு இருக்கிறார்கள்? தொடர்ந்து வரும் விமர்சனத்தை  படியுங்கள்..



(மிக ஆழமான கவனித்தல்களை, கொஞ்சம் நீளமாக சொல்லும் பதிவு என்றதனால இரண்டு பகுதிகளாக இந்த விமர்சனம் எழுதப்படுகிறது.. )




விமர்சனம் எழுதுறதுக்கு எந்த முன் அனுபவமும் எனக்கில்லை. எல்லாமே என் நண்பர்களின் அல்லது அவ்வாறு நான் கருதுபவர்களின் ஒரு கன்னி முயற்சி, எனும் போது நானும், கிடைக்குற ஒரு வாய்ப்பை வச்சு இப்பிடி ஒரு நறுக் விமர்சனத்தை சொல்லிட்டு போறதுதான் நல்லது! வளர்ற புள்ளை தானேன்னு குறைகளை அதிகமா கண்டுக்கமாட்டாங்க. ரசிக்குற விஷயத்தை சொல்லுறதுக்கு அனுபவமும் அதிகம் தேவை இல்லைதானே?




இதை ஏன் விமர்சனமா எடுத்துக்கணும்? ஒரு ஆர்வக் கோளாரில் அவசரமாய் செய்த காகித கப்பலாக எடுத்துகொள்ளுங்கள். மழையில் நிரம்பி வழியும் ஒரு குட்டையோ, இல்லைனா வழிந்தோடும் ஒரு ஓடையோ.. எனக்கு தேவை என்னளவில் நான் செய்யும் காகிதக் கப்பலை, ஓட்டி பார்க்க ஒரு நீர் பிரதேசம்! அதில் என் கப்பல் கொஞ்சம் நகர்ந்தாலே, கரை தொட்ட அளவில் மகிழ்வேன்!



ஷ்ஷ்ஷ்ஷப்ப்பா..!! இப்போவே கண்ணை கட்டுதே! இவ்வளோ பெரிய பில்ட் அப் எதுக்கு? சொல்லுறதை சொல்லிட்டு போயிடுறேன்! "கரண்ட் ஸ்டார்" நிலக்ஸன் இருக்குற இடத்துல நானெல்லாம் பில்ட் அப் குடுத்தால் எடுபடவா போகுது!?



படம் தொடங்கும் போதே சில நன்றி , ஆதரவளிப்போர் பெயர்களை பார்த்து ஆச்சர்யம்..! அந்த ஆச்சர்யம் தீர்ந்து விடுவதற்குள், அடுத்த ஆச்சர்யம்.. "கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே!" என்ற வாசகம். அது ஏன் அப்படின்னு அப்பறம் சொல்லுறேன். (நன்றி சொல்லி பெயர் போட்டப்பவே உஷார் ஆகிருக்கணும்!)



முதல் காட்சியிலேயே பிரமாண்டம் தெரிகிறது! பொதுமக்கள் இயல்பாக நடமாடும் இடத்தில் கரண்ட் ஸ்டார் நடந்து வாரமாதிரி ஒரு லாங் ஷாட்! அதுக்கு BGM எல்லாம் அதை விட பிரமாதம்! அதுக்கு பிறகு கதாநாயகி அறிமுகம்! அதை காட்சி படுத்திய விதம்.. கவித!... கவித!...



எழுத்தாளர் சுஜாதாவுடைய "திரைக்கதை எழுதுவது எப்பிடி?"ன்னுற புத்தகத்தை டைரக்டர் படிச்சுருப்பாரு போல இருக்கு. படம் தொடங்கி இரண்டாவது காட்சிலேயே கதை எதை நோக்கி போகுதுன்னு சொல்ல  ஆரம்பிச்சுடுறாரு!கதை ரொம்ப சிம்பிள்..லவ் ஸ்டோரி! "A","B" ன்னு ரெண்டு பசங்க! ஒன்னு மொக்கை! மத்தது மரண மொக்கை! "C" ஒரு அட்டு பிகரு. C'க்கு Aயா? Bயா?ன்னு சொல்லுறாங்க!



காலத்துக்கு ஏத்த மாதிரி (எந்த காலத்துக்குன்னு கேட்காதிங்க! )சில விசயங்களை சொல்லுறதுக்கு முயற்சி பண்ணிருக்காங்க! மனுசனோட வாழ்க்கைல எது வேணும்னாலும் நடக்கலாம். நாய்க்கு நரி மேல காதல் வரலாம்! பூனையோட வயித்துக்குள்ள புலி பிறக்கலாம்'னு நடைமுறை வாழ்கையில நடக்கமுடியாத சில விசயங்களை Miracle'லா  சொல்லிருக்காங்க! எதையுமே நம்ப முடியலையே'ன்னு சிலர் படம் பார்த்துட்டு விமர்சனம் சொல்லிருக்காங்க! நம்ப முடியாததுக்கு பேரு தான் Miracle!



படத்துல பிளஸ் பாயிண்ட், கரண்ட் ஸ்டாரோட "UNDER PLAY" (அடக்கி வாசிக்குறதுன்னு அர்த்தம்!), அவ்வளவு இயல்பா நடிச்சுருக்காரு! அவரை இந்த கதையில "நடிக்க" வைக்க எவ்வளவு கஷ்டபட்டாங்கன்னு, கேமரா மேன் மூலமா தெரிஞ்சுகிட்டேன்!  அவரோட ரசிகர் மன்றத்தை கட்டு படுத்தணும். கட் அவுட் தெரியாம ஷூட்டிங் நடத்தனும். முக்கியமா அவரை இளமையா காட்டணும். மேக் அப் பண்ணினவருக்கு இது தான் முதல் படம்னு சொல்லுறாங்க! நம்பவே "முடியலை!"





படம் நெடுகவும் நிலக்ஸன் முகமும் நடிப்பும் நிறைஞ்சுருக்குறதனால, அவரை பற்றி ஒரு தனி கட்டுரையே எழுதலாம்! அவருக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு எனக்கு பர்சனலா தெரியும்! So, இனி கொஞ்சம் படத்தோட மிச்ச விஷயங்களை பார்த்துடலாம்!





(தொடரும்..)

Post Comment

No comments: