Tuesday, February 26

சுள்ளுன்னு சுட்டது..



நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே.. -யுகபாரதி, "கும்கி". 

குளத்தாங்கரையிலே குளிக்கும் பறவைக சிறகு உலத்துமே துளிக தெறிக்குமே.. -வைரமுத்து, "கடல்".

கடவுளும் பெண் இதயமும்.. இருக்குதா அட இல்லையா?.. -மோகன் ராஜன், "டேவிட்". 

கதிர் அருவாளா மனசையும் கீறி... -யுகபாரதி,"கும்கி".  

இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல... -கமல்ஹாசன், "விஸ்வரூபம்". 

நாளையைத் திறந்தால் நம்பிக்கை சிரிக்கும்.. -வைரமுத்து, "கடல்".

தொலைந்தது நானா கிடைத்திடுவேனா? கிடைத்திடும்போதும் தொலைந்திடுவேனா?.. -நா.முத்துகுமார், "மூன்று பேர் மூன்று காதல்".

லப்பறு வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே.. -வைரமுத்து, "கடல்".

இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சேர்த்து விடும்.. -நா.முத்துக்குமார், "தாண்டவம்". 

வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா.. -நா. முத்துக்குமார், "நீதானே என் பொன்வசந்தம்". 

இமை விரல்களில் காற்றாய் கை வீசு.. -கபிலன், "பீட்சா".

என் ஆசை என்ன என்ன நீ பேசி நான் கேட்க வேண்டும்.. -நா.முத்துக்குமார்,
"நீ..பொ".

எந்த தேசம் போன போதும் என்னுடைய சொந்த தேசம் உனது இதயம் தானே.. -நா.முத்துக்குமார், "நீ..பொ".

என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே மீட்டதோடு மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்.. -நா.முத்துக்குமார்,"நீ..பொ".

சில நேரம் மாயம் செய்தாய் சில நேரம் காயம் செய்தாய்.. -நா.முத்துக்குமார், "நீ..பொ".

கை வீசி காற்றில் நீ பேசும் அழகில் மெய்யாகும் பொய்யும்.. -நா.முத்துக்குமார், "நீ..பொ".

ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்.. -கபிலன் , "அட்டகத்தி".

உதட்டுல இருந்து சொன்னா தன்னாலே மறந்திடும் நிமிசத்துல.. இதயத்தில் இருந்து சொன்னா போகாம நிலைச்சிடும் உதிரத்துல.. -யுகபாரதி,"கும்கி".

நெஞ்சில் இருப்பதை கண்கள் உரைப்பது ரொம்ப ரொம்ப குறைச்சல்.. -யுகபாரதி, "கும்கி".

நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான்-யுகபாரதி, "கும்கி".

கண்ணீரை சீனிமிட்டாய் செய்து விட்டாய் நீயே.. -கார்த்திக் நேதா, "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்".

Post Comment