Friday, September 27

இதுபோல் நானும் ஒரு பறவையானேன்!


வீடு திரும்பலின் வழி மறந்து
தொலைந்தே கிடக்கிறேன் -என்
வானில் தடயமும் இல்லை..


இதுபோல் நானும் ஒரு பறவையானேன்!


~~~

Tuesday, September 24

சஹானா - ஒரு சாதாரண கதை

ந்த நேரத்துல யாரா இருந்தாலும் அப்படித்தான் முடிவு எடுத்திருப்பாங்க. கண்டிப்பா நான் செய்தது சரி தான் ராகுல். உன் அட்வைஸ் கேட்டுக்கணும்னு எனக்கு எந்த தேவையும் இல்லை. உன் அக்கறைக்கு ரொம்ப நன்றி. தயவு செய்து போனை வை. நான் பிறகு பேசுறேன். குட் பை ராகுல். 

-சடார் என்று போனை வைத்து விட்டு தனது அறைக்கு திரும்பினாள் சஹானா. 

மறுமுனையில் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றுகொண்டிருந்த ராகுல் உடனே சஹானாவின் கைபேசிக்கு அழைத்தான். அழைப்பை துண்டித்தாள். மீண்டும் அழைத்தான். மீண்டும் துண்டித்தாள். பொறுமை இழந்த ராகுல் நேரே அவளை பார்க்க அவள் வீட்டுக்கு கிளம்பினான்.
 

Wednesday, September 18

One நிமிட் for 5 மினிட்ஸ் (18-09-2013)

ண்பர் பிரசாத் ஹரி பற்றி பல சந்தர்பத்தில் நான் என் பதிவுகளில் குறிப்பிட்டதுண்டு.

கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருப்பவருக்கு புகைப்படம் எடுக்கும் ஆர்வம் இற்றைக்கு ஏறக்குறைய 4 ஆண்டுகள் முன்னதாக தான் வந்தது. அவரது இந்த ஆர்வத்திற்கு காரணமானவர் பஹீரதன் என்கிற மூத்த புகைப்பட கலைஞர் (இப்பிடி சொன்னது தெரிஞ்சால் அந்த நண்பர் என்னை வலை வீசி தேடக்கூடும்). அவர் தன் காதல் மனைவியோடு  தற்சமயம்.. இலக்கம் ஆறு, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின் ரோட்டில் தனிக்குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கிறார்.

தனது திறைமைக்கு ஏற்றதைப்போல தற்பொழுது நண்பர் ஹரி, குருநாதரிடம் கற்றுக்கொண்ட வித்தையை பயன்படுத்தி தன் விருப்பத்திற்கு சுட்டுத்தள்ளி பின்பு ஆறவைத்து அவரது பிரத்தியேக, Canonனும் நானும் என்கிற facebook பக்கத்தில் தருகிறார்.

கடந்து செல்லும் நிமிடங்களை நான் என் கவிதைகளால் எழுத்து வடிவமாக தருவதை போல, இவர் நிழற்படமாக தருகிறார். இதோ அவரது.. வானம் மறந்த சில சிறகுகள்!

Thursday, September 12

தம்மாதுண்டு வாழ்க்கை! தாறுமாறா கனவு! தொடர் - 2

டார்ன்னு ஒரு பிளாஷ் பேக்..

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கொழும்பில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தோம். என் அக்காவின் சக வயது தோழி, சமந்தி அக்கா. நாங்க இருந்த வீட்டு பக்கம் தான் இருந்தாங்க. அவங்க வீட்டுல இருந்து என் அக்கா கொண்டு வந்த கவிதை புத்தகம் ரொம்ப நாளாக வீட்டில் இருந்தது. அந்த புத்தகத்தின் அட்டையில் இருந்த பெயர் என்னை ஈர்க்க எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.   

மு.மேத்தா. நான் வாசித்த முதல் கவிஞர். புத்தகத்தில் முதல் சில பக்கங்களை திறந்ததுமே மனச் சிறகு முளைக்க ஆரம்பித்தது எனக்கு. கவிதையில் இருக்கிற இலகுவான வர்ணனைகளை, வார்த்தை ஜாலங்களை எல்லாம் ரசிக்க தொடங்கியிருந்தேன். கவிதை எழுதும் ஆர்வமும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. கவிதை எழுதும்  பழக்கம் என் பதின்ம பருவத்தில் ஆரம்பித்தது.