Wednesday, September 18

One நிமிட் for 5 மினிட்ஸ் (18-09-2013)

ண்பர் பிரசாத் ஹரி பற்றி பல சந்தர்பத்தில் நான் என் பதிவுகளில் குறிப்பிட்டதுண்டு.

கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருப்பவருக்கு புகைப்படம் எடுக்கும் ஆர்வம் இற்றைக்கு ஏறக்குறைய 4 ஆண்டுகள் முன்னதாக தான் வந்தது. அவரது இந்த ஆர்வத்திற்கு காரணமானவர் பஹீரதன் என்கிற மூத்த புகைப்பட கலைஞர் (இப்பிடி சொன்னது தெரிஞ்சால் அந்த நண்பர் என்னை வலை வீசி தேடக்கூடும்). அவர் தன் காதல் மனைவியோடு  தற்சமயம்.. இலக்கம் ஆறு, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின் ரோட்டில் தனிக்குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கிறார்.

தனது திறைமைக்கு ஏற்றதைப்போல தற்பொழுது நண்பர் ஹரி, குருநாதரிடம் கற்றுக்கொண்ட வித்தையை பயன்படுத்தி தன் விருப்பத்திற்கு சுட்டுத்தள்ளி பின்பு ஆறவைத்து அவரது பிரத்தியேக, Canonனும் நானும் என்கிற facebook பக்கத்தில் தருகிறார்.

கடந்து செல்லும் நிமிடங்களை நான் என் கவிதைகளால் எழுத்து வடிவமாக தருவதை போல, இவர் நிழற்படமாக தருகிறார். இதோ அவரது.. வானம் மறந்த சில சிறகுகள்!

 ❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥ 

டந்த வாரம் என் அலுவலக நண்பர் ஒருவருக்கு திடீர் என்று தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்பட்டிருந்திருக்கிறது. அந்த சம்பவத்திற்கு போகும் முன்னர் ஒரு சிறு தகவல்.

நான் வேலை செய்யும் இடம் கணணி தொடர்பான சேவைகளை செய்யும் ஒரு அலுவலகம். எங்கள் நிறுவனத்தின் சேவையை பெறும் சில தனியார் அலுவலகங்கள் இங்கே இருக்கின்றன. அந்த காரியாலயத்தின் கணணி தொடர்பான எந்த தேவை என்றாலும் எங்கள் மூலமாகத்தான் நிறைவேற்றிக்கொள்ள விரும்புவார்கள். 

மேற்சொன்ன அந்த அலுவலக நண்பர், எங்கள் சேவை பெரும் ஒரு காரியாலயத்தின் பெண் ஊழியருக்கு கணணி சேவையை வழங்க, அந்த இடத்திற்கே சென்றிருந்த சமயம்..

இணையத்தில் ஜிமெயில் சம்மந்தமான ஒரு தேவைக்காக இவரை அழைத்ததாகவும் அதை பூர்த்தி செய்துவிட்டு திரும்பும் சமயம், மீண்டும் அந்த பெண் ஊழியர் இவரை தன் அறைக்கு அழைத்ததாகவும் சொன்னார். அவர் அந்த நிறுவனத்தின் கணக்காளர்.

திரும்ப வரச்சொன்னதுமே சிறிது தயக்கத்துடன் அவர் அறைக்குள் நுழைந்திருக்கிறார். தனது சிஸ்டத்தில் தான் வழக்கமா திறக்கும் அப்ளிக்கேசன் இப்பொழுது வேறொரு அப்ளிக்கேசனை open செய்து தருவதாகவும், அதை சரி செய்யுமாறும் கேட்டிருக்கிறார். மைக்ரோசாப்ட் விண்டோஸ் பாவனை உள்ள சிஸ்டம் அது. என்ன சிக்கலாக இருக்கும் என்று தேடியவருக்கு எந்த பிரச்சினையும் பிடிபடவில்லை. ஊழியர் குறிப்பிட்ட அந்த அப்ளிக்கேசன் சரியாக திறப்பட்டு வந்தது. மீண்டும் அதை செய்து சரி பார்த்த என் நண்பர் அந்த கணக்காளரிடம், எந்த சிக்கலும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

ஊழியர் மீண்டும் தன் சிஸ்டத்தை பயன்படுத்தி விட்டு, இல்லையே பிரச்சினை இருக்கிறதே என்று முறைத்திருக்கிறார். குழப்பத்தோடு மீண்டும் தன் கைக்கு வாங்கியவர் ஊழியரிடமே அப்ளிக்கேசனை open செய்யும் படி சொல்லி இருக்கிறார். அப்பொழுது தான் அந்த தற்கொலை எண்ணம் அவரை பீடித்திருக்கிறது.

நடந்தது இதுதான். விண்டோஸ் ஸ்டார்ட் பட்டன் அருகில் Quick Launch பகுதியில் சில அப்ளிக்கேசன்கள் இருக்கும். அவரது சிஸ்டத்தில் அதில் firefox browserக்கு அடுத்ததாக outlook மற்றும் ms word என்று அடுத்தடுத்து இருந்திருக்கிறது. நண்பர் முதலில்சென்று பயன்படுத்தியபொழுது, தவறுதலாக அவை இடம் மாறி விட்டன. நண்பர் அறையை விட்டு வெளிவந்த சமயம் அந்த ஊழியர் தான் வழக்கமாக பயர்பாக்ஸ் அருகில் அடுத்ததாக இருக்கும் அவுட் லுக் 'கினை open செய்திருக்கிறார் அது ms word. இதை ஏதோ கோளாறு என்று எண்ணி என் நண்பரை மீண்டும் அறைக்கு அழைத்திருக்கிறார் அந்த உயர் அதிகாரி.

இருந்த இடத்திலேயே மீண்டும் மாற்றி வைத்துவிட்டு நகர்ந்து வந்து விட்டார் நண்பர், தற்கொலை எண்ணத்தையும் அங்கேயே கைவிட்டு..!
 
❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥ 

என் முகப்புதகத்தில் கடந்த வாரம் நான் பகிர்ந்தது..

ழக்கமா சாப்பிடுற மலையாளி கடைக்கு சாப்பிட போனேன். டிவி'ல ஒரு மலையாள படம் போட்டுருந்தாங்க.. மம்முட்டியோட மகன் நடிச்ச படம்!

"உஸ்தாத் ஹோட்டல்" படம் பெயரு.. அதுல ஒரு காட்சி..

வெளிநாட்டுல போய் குக்கிங் படிச்சுட்டு வந்த மகனை கோபத்துல அப்பா வெளிய விரட்டிடுவாரு.. மகன் தன்னோட தாத்தாகிட்ட வந்து சேர்ந்துடுவான். தாத்தா ஒரு கடற்கரை ஓரம் சாதாரண ஹோட்டல் வைச்சு காலத்தை ஓட்டிட்டு இருப்பாரு. ஆனாலும் அவரோட அந்த ஹோட்டலுக்கு நல்ல பிசினஸ்.

வெளிநாட்டு chef பேரனுக்கு சின்ன சின்ன வேலைகளை கத்துகொடுக்க தொடங்குவாரு தாத்தா. ஒரு கட்டத்துல பேரனுக்கு உதவி பண்ணுறதுக்காக, ஒரு Five Star ஹோட்டல்க்கு பேரனை அனுப்பி அங்க ஒருத்தரை பார்த்துட்டு வர சொல்லி அனுப்புவாரு. ஒரு துண்டு கடதாசியில "என் பேரனுக்கு வேலை போட்டு கொடுங்க"ன்னு ஒரு வரி எழுதி கொடுத்தனுப்புவாரு தாத்தா..

கடதாசியை கொண்டுப்போய் உரியவர்கிட்ட கொடுத்தால் அவரு தான் அந்த Five Star ஹோட்டல் chief chef.. கதாநாயகனுக்கு வேலையும் கிடைச்சுடும்!

....சாதரணமான ஒரு மனுஷன் சொல்லி ஒரு பெரிய இடத்துல வேலை கிடைக்குறதெல்லாம் சினிமாவில மட்டும் தான் சாத்தியம்ன்னு இல்லை. இந்த மாதிரி சாதாரண மனிதர்களின் பெயருக்கு இருக்கிற மரியாதையை நானும் என் வாழ் நாளில் பார்த்திருக்கிறேன். அவரவர் வாழ்வில் தனி அடையாளங்களோடு திரியும் சர்வ சாதரணமானவர்களின் சொல்லுக்கு கிடைக்கிற மரியாதையை கண்டு ஆர்ச்சர்யமாகவும் இருக்கிறது. செய்யும் தொழிலும் இருக்கிற இடமும் அல்ல அடையாளம். நாம் வாழும் வாழ்வே நமக்கான அடையாளம்!

Post Comment

No comments: