Wednesday, May 22

மற்றபடி நீ கொஞ்சம் கோபக்காரி..




கடற்கரையில் நின்று 
கால் நனைத்தபடி
நீ!
ஓரமாய் அமர்ந்து
உனை ரசித்தபடி 
நான்!
அலையோசையை விடவும் 
அதிகமாய் 
ஆர்ப்பரித்தபடி 
காதல்!

♂.. ♥.. ♀..

Thursday, May 9

நீ கோரினால் வானம்...

உங்களுக்கு காதல் என்பது முட்டாள்தனம் என்று தோன்றினால் இதை வாசிக்க வேண்டாம். இதை வாசிப்பதால் என்ன வந்துவிடும் என்று எதிர்வினை புரிபவராய் இருந்தால் கண்டிப்பாக இதை வாசிக்கவே  வேண்டாம். காரணம் இது உங்களது வாழ்கையை மாற்றப்போகும் கேள்விகளோடும், கோடிகளோடும் வரப்போகும் பதிவு இல்லை.. இதை வாசிப்பதால் உங்கள் நிகழ்கால வாழ்வின் எந்த பிரச்சினையும் மாற்றத்திற்கு உள்ளாகப்போவதும் இல்லை. அதனையும் மீறி வாசிக்க நினைப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து இதை உங்கள் ஆபீசிலோ.. இல்லை பொது இடத்திலோ வாசிக்காதீர்கள். (ஒரு கதை சொல்ல முதல்ல எவ்வளோ பில்ட் அப் பண்ணவேண்டி இருக்கு! ...ஷ்ஷ்ஷப்பா!!)
************************************************************************************************************

"நீ... கோரினால் வானம் 
மாறாதா..
தினம் தீராமலே மேகம்
தூறாதா.."

இது சினிமா பாட்டுன்னு உங்களுக்கு தெரியும். ஆனால் எனக்கு, என்னோட தேவதை என்னை அழைக்கும் பாட்டு. அவளோட அழைப்பு வரும் போதெல்லாம் இது தான் என் ரிங்டோன்! எடுத்து பேசினேன்...

Tuesday, May 7

ஒரு பாட்டு.. இரண்டு படம்..


♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯....
சைக்கும் எனக்குமான உறவு இப்பொழுதெல்லாம் அதிகம் நீடிக்கின்றது. நிறைய தமிழ் திரையிசை பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். பார்க்கவும் நேரம் அமைவதுண்டு. youtube இணையத்தளம் அந்த வாய்ப்பினை இலவசமாகவே வழங்குகிறது. பெரும்பாலும்  பால்ய காலத்தில் வானொலியில், கேசட்களில் மட்டுமே கேட்ட இடைக்கால பாடல்களை ஒளிவடிவில் பார்க்கும்போது அவை படமாக்கப்பட விதம் சிரிப்பை தருகிறது. சகஜமாக இருந்திருக்கலாம் அந்த காலகட்டத்தில் அப்படி படமெடுப்பது. இன்றைய தலைமுறையினரின், ரசனைகளில் வித்யாசம் நிறைய வந்துவிட்டது. செவிக்கு மட்டுமே விருந்தாக அமைந்துவிடும் பாடல்கள் போதும் என்றே தோன்றுகிறது. அமைதியான மெல்லிசை வடிவம் தான் என் சாய்ஸ். இப்பொழுதும் ஏதேனும் ஒரு புதிய திரைப்படத்தின் பாடல் வெளியீடு நிகழ்ந்தவுடன், நான் முதலில் தேடுவது அப்படத்தில் இருக்கும் மெல்லிசை பாடலினை தான். அப்படி தேடிய பாடலின் ஒரு வீடியோ வடிவம் உங்களுக்காக..