Monday, February 18

One நிமிட் for 5 மினிட்ஸ் (18-02-2013)

இந்த தலைப்பின் விளக்கம் மற்றும் முதல் பதிவு  இங்கே.

*******************************

ன் நண்பர் ஒருவர் எடுத்த புகைப்படம் தான் மேல இருக்கு. பெயர் பிரசாத்  ஹரி. வாழ்க்கை மேல நம்பிக்கை நிறைய இருக்குற அழகான ஒரு இளைஞர். செய்ற வேலைக்கும் எடுக்குற புகைப்படங்களுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை! நிஜ உலகத்துல நடக்குற விசயங்களை, நிழற்படமா எடுக்கும் போது, பகல் வானம் போல மனசும் பிரகாசமா இருக்குதுன்னு சொல்லுறாரு! அந்த நம்பிக்கை அவருக்கு நிறைய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தணும். இந்தா இருக்குது அவரோட நம்பிக்கை! 
*******************************
நான் வேலை செய்யுற கம்பனியில Chinese New Year'க்காக நாலு நாள் லீவு கொடுத்தாங்க. கிடைச்ச நேரத்தை ரொம்ப பிரயோஜனமா பயன்படுத்திகனும்னு சில முன் ஏற்பாடுகளை செய்துக்குட்டேன். அதன் பலனாக...

  • சுஜாதா எழுதின சில புத்தகங்களை வாசிச்சு முடிச்சேன்!  அட ஆமாங்க!,அவரோட புத்தகங்களை வாங்குறதுக்கு எவ்வளோ நாள் தான் நானும் தேடி அலையுறது? ஏதோ  சில நல்ல மனுசங்க செய்த புண்ணியம். ஒரு தொகை, அவர் எழுதின புத்தகங்கள் மின்-நூல் வடிவமா தரவிறக்கம் பண்ணி, அதுதாங்க டவுன்லோடு.. ஆங்.! அதை பண்ணி வைச்சுகிட்டேன்! வாசிக்க இதுதான் ஒரே வழி! but, குறுக்கு வழி! அவரது தீவிர வாசகர்கள் என்னை மன்னிப்பார்களாக!

  • Harrison Ford என்கிற ஹாலிவூட் சினிமா கலைஞன் மீது இருக்குற மோகம் காரணமா, அவர் நடிச்ச "இன்டியானா  ஜோன்ஸ்" படங்களை பார்க்கணும்னு துடிச்சுகிட்டே இருந்தேன். எங்க தேடி கிடைக்காட்டியும் எங்ககிட்ட வாங்கன்னு ஒரு Torrent பக்கம் கூப்பிட்டுகிட்டே இருந்தாங்க. போய் பார்த்தால், சொல்லிவைச்சாப்புல அவரோட அந்த படம் அத்தனையும் ஒரே தொகுப்பா, அதுவும் BluRay Quality'ல இருந்துச்சு! மூணு நாள் முன்னாடியே wait பண்ணி டவுன்லோடி விட்டு,நாலு நாளும் ஆற அமர பார்த்து முடிச்சுட்டேன்! மனுஷன் கலக்கிட்டாருய்யா! எங்கேயோ ஒரு புதையல் தேடி, நாலு நாள் உலகம் பூராவும் அலைஞ்ச அனுபவம் எனக்கு!
  • Into the wild படத்தோட இசையை பீட்சா படத்தில பயன்படுத்திருக்காங்கன்னு எங்கேயோ படிச்சுட்டு அந்த ஒரிஜினல் படத்தோட trailer பார்த்தேன். அட இதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கேன்னு நினைச்சுட்டு, உடனே ஜாக்கி சேகர் அண்ணனோட பதிவை தேடினேன்! சரிதான்! அவர் எப்போவோ எழுதின திரை விமர்சனம் அது. மேலோட்டமா பார்த்துட்டு  படிக்காமலே விட்டுட்டேன். ஆனால் அந்த படம் பார்க்கணும்னு தோணுச்சு. நடுநிசி நேரம். கொஞ்சம் பார்த்துட்டு மிச்சத்தை பிறகு பார்ப்போம்னு, பார்த்தேன். படம் தொடங்கி கொஞ்ச நேரத்துல மனசை ஏதோ பண்ணுச்சு. காரணம் இசையும், வசனமும். அப்பிடியே கொஞ்சம் நிறுத்தி வைச்சுட்டு அண்ணனோட பதிவை வாசிச்சேன்.விடிய 3.30 மணிக்கு படம் முழுசா பார்த்து முடிச்சேன். மனசெல்லாம் என்னமோ பண்ணுச்சு. ஒரு மிகப்பெரிய வாழ்க்கை பாடத்தை இரண்டரை மணிநேர படம் சொல்லி கொடுத்தது.
  •  
    படத்தை பார்த்துட்டு அண்ணன் ஜாக்கி சேகர்  எழுதிய சில வரிகள்...
இந்த படம் கண்டிப்பாக பார்த்தே பாத்தே பாத்தே பாத்தே பாத்தே பாத்தேதீரவேண்டியபடம்... அவசியம் பாருங்கள்...முதலில் இந்த படத்தின் போஸ்டர் பார்த்து விட்டு இதுவும் ஒரு மென்சோகபடம் என்று நினைத்து பல நாள் ஒதுக்கி வைத்து விட்டேன். நேற்று இரவு என்னதான் இதில் இருக்கின்றது என்று பார்த்து விடுவோம் என்று பார்க்கும் போது மனதில் தைத்த இந்த படம்., படம் முடிந்து நான் தூங்க வேகு நேரம் ஆனாது... கிரிஸ் நினைவில் வந்து கொண்டே இருந்தான்.. ஆனால் படம் முடியும் போது **** இன்னாமயித்துக்கு இப்படி தனியா வந்து அவஸ்தைபடனும் என்று எண்ணம் தோன்றினாலும் அந்த வித்யாசமான யோசிப்பும் செயல்பாடும்தான்.. கிரிஸ் என்றஅமேரிக்க ஜார்ஜியாவில் பிறந்தவனை பற்றி சென்னையில் உட்கார்ந்து அவன் வாழ்க்கை பற்றி சிலாகித்து அவனுக்காக வருத்தபட முடிகின்றது... ரொம்ப நாளைக்கு அப்புறம் நிறைய நேரம் எடுத்துக்கொண்டு நான் எழுதிய படம் இது..

*******************************

 facebook காய்ச்சல் 

ந்த பொண்ணோட friends ரொம்ப கொடுத்து வைச்சவங்க!!


~~~~~~~~
தை சத்தமா படிக்க வேண்டாம்..

ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்…”

இவன் : “ஓ மை காட்! .. ரம்யா..?”

அவள் : “இல்லை”

இவன் : “கீதா..?”

அவள் : “இல்லை”

இவன் : “உமா..?”

அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு ஆசிரியை...!
 

 ~~~~~~~~

facebookல நமக்கு எத்தினையோ நண்பர்கள் இருப்பாங்க. அதுல சிலரோட நாங்க எந்த விதத்துலயும் சம்பந்தபடாம இருப்போம். நமக்கு தேவையான ஒருத்தரோட எங்களோட facebook உறவு எப்பிடி இருக்குதுன்னு பார்க்குறதுக்கு ஒரு வழி இருக்கு. நிறைய பேருக்கு இப்படி ஒரு விஷயம் இருக்குதானே தெரியாது. 

எப்பிடின்னா..

உங்க நண்பரோட profileக்கு போங்க. அங்க அவரோட நண்பர்  தான் நீங்கன்னு உறுதிபடுத்துறதுக்காக  கீழ உள்ள மாதிரி ஒரு இடத்துல Friends ன்னு போட்டுருப்பங்க. உங்க mouse cursorஐ அது மேல கொண்டு போங்க (கிளிக் பண்ணகூடாது)..
 

இப்பிடி ஒரு லிஸ்ட் வரும். அதுல "See Friendship"ஐ செலக்ட் பண்ணுங்க. ஒரு common profile உருவாகும். profile  pic, cover page கூட இருக்கும். அதை நீங்க உங்களோட நண்பருக்கு share பண்ணலாம். ஸ்டார்ட் மியூசிக்....

Post Comment

No comments: