Friday, October 11

வாக்குப்பதிவும்.. இசைஞானி கவிதையும்..

றாவது சக்கரம் பதிவுலகம் ஏறி ஒரு வருடம் பூர்த்தியாகப்போகிறது.. இந்த ஒருவருடம் முழுதும் நீங்களும் என்னோடு இருந்ததை நினைத்து, நன்றியோடு ஒரு பதிவை எழுதத் தயாராகிக் கொண்டு இருக்கிறேன். உங்கள் நேரத்தில் இடம் ஒதுக்கி, என் எழுத்துக்களை படிக்க வந்து போனவர்களின் கண்களையும் ஏதோ ஒரு வகையில் என் பதிவுகள் குளிர்வித்திருக்கும் என நம்புகிறேன். இந்த வாக்குப்பதிவு ஒரு சுய விளம்பரம் மட்டுமே. 

யாராரோ எதுக்கெல்லாமோ விளம்பரம் தேடுறாங்க நான் எனக்கான கனவுகளை நீட்டிக்கொள்ள விளம்பரம் தேடுகிறேன். ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பங்கள் இருக்கக் கூடும் என்பதால், தரவுகளில் உங்கள் தெரிவினை "டிக்" செய்து வாக்கு பதியலாம். நன்றி.



~~~~~~~~~~~*~~~~~~~~~~~*~~~~~~~~~~~*~~~~~~~~~~~*~~~~~~~~~~~*~~~~~~~~~~~*~~~~~~~~~~~
டந்த வாரம் "இளையராஜா - இந்தியன் மேஸ்ட்ரோ" என்கிற முகப்புத்தக பக்கமொன்றில் கவிதை போட்டி நடத்தினார்கள். இசைஞானியும் அவரது இசையும் என்ற தலைப்பில் கவிதை கேட்டிருந்தார்கள். பரிசு உண்டு என்பதாலும், (ராஜாவின் முன்னணி இசைகோர்ப்பு என வெளிவந்த மிஸ்கினின், "ஓநாயும் ஆட்டுகுட்டியும்") பின்னணி இசை இறுவட்டு என்பதாலும் பங்கு கொள்ள ஆர்வமானேன். ஏற்கனவே எழுதிய ஒரு வரி ஞாபகத்தில் வந்து கொஞ்சம் புதிதாய் கிறுக்கி அந்த போட்டியில் இணைத்தேன். 

மறுநாள் அந்த பக்கத்தில் என் கவிதை தேர்ந்துடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருந்தது. பாடசாலைக்கு வெளியே என் கவிதைக்கு கிடைத்த முதல் பரிசு இது! 



இது எல்லாம் எந்த மூலைக்கு?.. நான் என்னைக்காச்சும் ஒருநாள் அவரை நேருல பார்க்கணும்! பேச கிடைக்குமான்னு தெரியலை.. அப்பிடியே கிடைச்சாலும் பின்னணியில "பார்த்த விழி பார்த்தபடி" ன்னு பாட்டு ஒலிக்கும்! அபிராமியை பார்த்த குணா மாதிரி நிற்ப்பேன்..

Post Comment

No comments: