Sunday, August 18

ட்லேக்சா ட்ஹா -பிளாஷ் பெக்

 காட்சி- 06


200ஆவது லைக் நீதான் போட்டுருக்குற. நான் எழுதும்போது கண்டிப்பா 20லைக்ஸ் ஆச்சும் கிடைக்கும்னு நினைச்சேன். இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேன். உனக்கு தேங்க்ஸ் சொல்ல கூடாது. இருந்தாலும் தேங்க்ஸ்.

நான் சொன்னதை கேட்டுவிட்டு தோழி இப்படி சொன்னாள்.

அந்த ஸ்வேதா பத்தி வாசிக்கும் போது எனக்கு என்னை தான் தெரிஞ்சுது, என்னை தான் பார்த்தேன்.. குரங்கு குட்டி போல நானும் இப்பிடி தான் அடிடா புடிடா'ன்னு கோவிச்சுட்டு போவேன். பிறகு உய்ய்ய்ய்ய்'ன்னு அழுவேன்.

காட்சி- 05

பிரதர்.. நேத்து ஒரு தோழிகிட்ட சாட்'ல பேசிட்டு இருக்கும் போது சும்மா சொன்னேன்., ப்ளொக்ல போடாம இருந்திருந்த ஷோர்ட்-பிலிம் பண்ணி இருக்கலாம்'ன்னு.. உடனே அவளும் இப்போ கூட பண்ணலாமேன்னு சொன்னாள். கொஞ்சம் யோசிச்சுட்டு ஸ்வேதா'வா நடிக்குறிங்களான்னு கேட்டேன். ஓகே சொல்லிட்டாங்க. ஒரு போஸ்டர் ரெடி பண்ணியாச்சு. எப்பூடி?
  
இலங்கையில இருந்து தோழர் ஒருவர், முகப்புத்தக்தில் சொன்னதை கேட்டு அதிசயித்தேன். பிறகு சொன்னேன்,

நான் மட்டும் ஊருல இருந்துருந்தா இதை செய்ய விட்டுருக்க மாட்டேன். அதெப்படி நீங்க உங்க இஷ்டத்துக்கு செய்வீங்கன்னு கேட்டுருப்பேன். ஏன்னா.. ஹீரோவா என்னை போடுங்கன்னு தொந்தரவு கொடுத்திருப்பேன்..

..என்று வழிந்தேன்!

காட்சி- 04

இன்னொரு நண்பர், ஒரே ஊர்க்காரர். சாட்டில் வந்தார்,

சூப்பர். நல்ல எழுத்து நடை. அப்பிடியே மெயிண்டயின் பண்ணுங்க. மொழி நடையும் கிரேட். இந்த முதல் பாதியில கொஞ்சம், இந்தியா சாயல் லேசா எட்டி பார்க்குதே?

வாசகர்கள் அனைத்து பகுதிகளிலும் இருப்பதை கருத்தில் கொண்டு...-என்று முறுவலித்தேன்.

பார்ராஆஆ.... -வென கெக்கலித்தார்.

நிஜமா சொல்லனும்னா நான் எழுத்தாளர் சுஜாதா'வின் ரசிகன். ஆனால் அவரோட கதைகளை வாசிச்சதை விடவும், அவரோட ஏகலைவன் ஒருத்தர் இருக்காரு. தமிழக வலைப்பதிவாளர்களில் முக்கியமானவர். அவரை வாசிக்குறது அதிகம். என் எழுத்து நடைக்கு அவர் தான் காரணம்- என்றேன்.

கண்டிப்பா வாசிக்கிறேன்.. - சையின் அவுட்.

 காட்சி- 03
 
"தவா அண்ணா. ஒரு கதை எழுதி முடிச்சேன். உங்களுக்கும் லிங்க் அனுப்பிருக்கேன். உங்க விமர்சனத்துக்கு ஐ அம் வெயிட்டி"

"ங்" வைத்து முகப்புத்தகத்தில் இதை அனுப்ப முதலில்,

நீங்க கதை எழுதுறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. இது ஸ்க்ரீன் ப்ளே! இதுல முக்கியமா சொல்லனும்னா, எனக்கு பிடிச்ச இடம்..

என்று என் கதைக்கு முதல் ரசிகராய் வந்து நின்றார் தவா அண்ணா.

கேமரா காதலர். சினிமா வெறியர். இலங்கையில் இருந்து கொண்டு உலக அளவில் சினிமா கனவு காணும் ஒரு யதார்த்தவாதி. சில குறும்படங்களை இயக்கிக்கொண்டும், புதிய முயற்சிகளுக்காக தொடர்ந்து இயங்கிக்கொண்டும் இருப்பவர். இப்போதைக்கு இந்த அறிமுகம் போதும்.

முதல் ரசிகரை வரவேற்றேன்..

அந்த பளார்ன்னு அடிக்குற இடம். அதை நீங்க சொன்ன விதம். அதை ரசிச்சேன். அப்பறம்...

-வென ஆரம்பித்தவரோடு ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக சாட்டிங்கில் கலகலத்தேன். 

அந்த ஒரு மணிநேரத்தில், என் கதையை தனது நண்பர்களுக்கு ஷேர் செய்துகொண்டே இருந்தார். என் கதைக்கான லைக்'குகளும் கல்லா கட்டியது. என் ப்ளாக்கில் என் பதிவு ஒன்றிற்கு முதல் 50லைக்ஸ். முதல் 100லைக்ஸ் -வென வாக்குப்பதிவு எண்ணிக்கொண்டிருந்தேன்.

 காட்சி- 02

அன்றைக்கு ஆபீசில் வேலை அதிகமாக இல்லை. ஐந்தரை மணிக்கு வேலை முடியும். ஒன்றரை மணித்தியாலம் இருக்கையில்.. முகப்புத்தகத்திற்குள் நுழைந்தேன்.

"என் ப்ளொக்ல சின்னதா ஒரு கதை எழுதலாம்னு தோணுச்சு..

சரி!...எதை பத்தி எழுதலாம்னு மணிகணக்கா யோசிச்சப்போ ஒரு one-line கிடைச்சது...

ஒரு சிட்டி பையன். ஒரு சிட்டி பொண்ணு. கொஞ்ச நாளா லவ் பண்ணிட்டு இருந்தாங்க. இவங்க ரெண்டு பேருக்குமே இந்த Relationship'ல விருப்பம் இல்லை.. காதலுக்கும் இவங்களுக்கும் சரிவராதுன்னு முடிவெடுக்குறாங்க.. அவங்களோட break-up பார்ட்டில சந்திச்சுக்குறாங்க.. அடுத்த 30 நிமிஷம். இவங்களோட வாழ்கையே மாறிப்போகுது..

கதைக்கு ஒரு தலைப்பு தேவை.. வில் பி போஸ்ட்டிங் டுநைட்!"

-என ஸ்டேட்டஸ் எழுதிவிட்டு, வேறு வேலைகளை செய்து கொண்டே கதையை மனதில் வளர்க்க ஆரம்பித்தேன். முடிவு எப்படி இருக்கவேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை. 

வேலை விட்டு என் தங்குமறைக்கு வந்ததும், முகப்புத்தகத்தில் என் கதைக்கு ஏதேனும் ஆதரவு இருக்கிறதா என தேடினேன். 3 லைக்'கும் ஒரு நண்பனிடம் இருந்து பின்னூட்டமும் வந்திருந்தது. எதிர்ப்பார்ப்பு வீணானது.

சற்று ஓய்வின் பின் கதையை ஆரம்பித்தேன். 

இரு கதாபாத்திரங்கள் மட்டுமே கதைக்கு தேவை. பெயர் தேடினேன். கேர்ள் ப்ரெண்ட் ஸ்வேதா. அட இந்த பெயர் நல்லா இருக்கே. ஹ்ம்ம்.. பாய் ப்ரெண்ட் பெயர் என்ன வைக்கலாம். பெயர் சிக்கவில்லை. சிக்கியவை திருப்தியாய் இல்லை.

"என்னமோ ஏதோ.. எண்ணம் திரளுது கனவில்.." பாடல் ஒலித்தது என் ஸ்பீக்கரில். ஜீவா. பெயர் முடிவானது!

பின்னூட்டத்தில் கதைக்கு தலைப்பு கேட்டதில்; நீ அப்படினா நான் இப்படி தான்/ முடிவில் ஒரு ஆரம்பம்/ வாழும் வரை.

சிரிப்பை அடக்க நினைத்து தோற்றுப்போனேன். பெரும்மூச்சு ஒன்றில் சிரிப்பை வெளியேற்றிவிட்டு கதைக்குள் நுழைந்தேன். காட்சிகள் விரிந்தன. எழுத்தாக மொழிப் பெயர்த்தேன்.
 காட்சி- 01

பீட்டர், எங்களோடு இதே அப்பார்ட்மெண்டில் இருப்பவன், சென்னை பையன். வேறொரு நிறுவனத்தில் பணி செய்பவன். மதிய உணவுக்காக ரெஸ்டாரென்ட் வந்த இடத்தில் சந்தித்து பேச ஆரம்பித்தான். 

மச்சான்.. அன்னைக்கு உன் ப்ரெண்ட், அந்த சைனீஸ் பொண்ணு, உங்களுக்கெல்லாம் பார்ட்டி கொடுத்தா தானே? நீ கூட அவளோட பாய் ப்ரெண்டோட பிரேக் அப் ஆனதுக்காக பார்ட்டி'ன்னு சொன்னியே..

ஹ்ம்ம்.. என்ன மச்சான்.. உனக்கு ஏதும் ஐடியா இருக்கா?  

-கலாய்த்தேன்.

அடப் போப்பா! எனக்கு வேற வேலை இல்லை'ன்னு  நினைச்சியா?. அந்த மாதிரி ஒரு தமிழ் பொண்ணும் பையனும் பிரேக்-அப் ஆகுறதுக்காக போறாங்க. அதை வைச்சு ஒரு கதை எழுதி கொடு. 

-என்னை உசுப்பேற்றினான். நான் ப்ளாக் எழுதுவதெல்லாம் பீட்டர்'க்கு தெரியாது. அவனுக்கும் கதை எழுதி அதை படமாக்கும் எண்ணமும் இல்லை. அவனிடம் சொன்னேன்.

சூப்பர் மச்சி. இந்த ஒன்-லைன் வைச்சுகிட்டு ஒரு கதை எழுதலாம். நான் என் ப்ளாக்'ல எழுத போறேன்.. 

-அவன் கன்னத்தை கிள்ளி என் வாயில் போட்டுக்கொண்டு விடைப்பெற்றேன். 

".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'.".".".".".".".".".".".".".".".".".'."

இதுதான் என் "ஹாட் சாக்லேட்" கதை உருவான கதை. 

சில முக்கிய குறிப்புகள்.
  • நான்  ஸ்வேதாவை என் கதைக்குள் சித்தரித்திருந்த விதம் பற்றி பலர் பாராட்டி இருந்தனர். எனக்கும் அந்த ஸ்வேதா போல ஒரு பெண் தோழி இருக்கிறாள் என்பதை ஒரு சிலரிடம் சொல்லி வைத்தேன். காதலை கோபமாக வெளிப்படுத்துகிற பெண் அவள். அவளது காதலன் என் நண்பன். இவளை புரிந்துகொள்கிற சாமர்த்தியன். இவர்களது சரக்கில்லா சண்டைகளையும் ஊடல்களையும் தூரத்தில் இருந்து ரசித்திருக்கிறேன். அந்த அன்பான தோழி தான் கதையின் நாயகி. கதையின் 200ஆவது ரசிகையும் கூட!

  • எனது இந்த கதையில் ஈர்க்கப்பட்டு இதை குறும்படமாக்க காத்திருக்கும் அந்த சகோதரர் தான் இந்த கதையின் முதல் ரசிகர். அவரது ஒரு குறும்படம் பற்றிய என் சற்று நீளமான பார்வை இங்கே.

  • என் இந்த கதையின் மறக்க முடியாத தருணங்களின் , என் வலைபதிவு கண்ட சாதனையில், 100வது விசிறியை என் வலைத்தளத்திற்கான முகப்புத்தக -பக்கம் சம்பாதித்துகொண்டுள்ளது.
உங்கள் அன்பு தொடர வேண்டுகிறேன்! நன்றி!

Post Comment

No comments: