Tuesday, July 22

கொஞ்சம் இதையும் சொல்லிடுறேன்! (03)

ரு பெண்ணுக்கும் ஆணுக்குமான அழகிய உறவை சினிமா காட்டுகிற அதே முறையில், நிஜத்திலும் நிகழ்த்திட இங்கே சாத்தியமே இல்லை.

டூயட் பாடிட, கலர் கலராய் ஆடைகள் மாறிட, நூறு பேர் பின்னணியில் ஆடுவதெல்லாம் நிதர்சனம் இல்லை.

நிஜத்தில் வாழ்க்கைக்கென்று எந்த BGMஉம் இல்லை. கட் ஷாட், க்ளோஸ் அப், லாங் ஷாட், ஜிம்மி ஜிப் என்று எதுவுமே இல்லை.. பிளாஷ்பெக் போய்விட்டு திரும்பி வருகிற நேரத்தில் வாழ்க்கை அப்படியே அதே இடத்தில், மீசை மைக்ரோமில்லிமீட்டர் அளவேனும் வளராமல் ஸ்தம்பித்து நிற்பதுமில்லை. ஒற்றை வரியில் சொன்னால்.,

வாழ்கை சினிமா இல்லை.


அழகான காவியமாய் தன் வாழ்க்கைத்துணை அமைவதற்கான கனவில் மூழ்கியிருக்கும் வேளைப் பார்த்து, நிஜங்களை மூட்டைகட்டி பெட்டிக்குள் வைத்து பூட்டி சாவியை எங்கேயோ தூரத்தில் எரிந்து விடுகிறது இளமை.

அவனோ அவளோ, இருவருமே முறைப்படி ஒருவரை ஒருவர் இம்ப்ரெஸ் செய்யும் முயற்சியில் முன்னிறங்கி விடுகிறார்கள். உனக்காக நான் எதுவும் செய்யத் தயார் என்பதாய் உருகி உருகி செய்யும் காதலினால், இறுகிபோய் மெய் மறந்தே போகிறது.

உண்மை வேறு ஒரு நிறத்தில் பளீரென வந்து முகம் காட்டுகையில், டப்பா டான்ஸ் ஆடத் தொடங்கி விடுகிறது.

முன்னிருந்த தலைமுறையில், இதெல்லாம் கண்துடைப்பு. தாத்தா பாட்டிக்கெல்லாம் என்டர்டைன்மென்ட் வேறு இல்லை. கூட்டு குடும்பங்களின் இணைப்பும் காரணமாய் இருக்கலாம்;இருந்தது! அதனால் பொறுத்து பொறுத்து வாழப்பழகி கொண்டார்கள். இப்போது இருக்கும் தலைமுறைக்கு அந்த பொறுமை இல்லை. அறவே இல்லை .

இப்போது இதுதான் serious issue!

பெண்ணுக்கும் சரி ஆணுக்கும் சரி, தனக்காக வாழும் வாழ்க்கைத்தான் உண்மையில் சௌகரியம். ஒரு குறிப்பிட்ட பெண்ணின்/ ஆணின் அன்பை பெறுகிற வரையில் அந்த ரியாலிட்டியை கொஞ்சம் பொறுத்துக்கொள்வார்கள். தனக்கென்று இருக்கும் ஆசையை கூட இழந்த மாதிரி சித்தரிப்பார்கள்.

ஆனால்ல்ல்ல்ல்ல்ல்... நிஜம் என்பது வேறு!

தனக்கே உரிய அந்த madness உள்ளுக்குள்ளே அக்கினிக் குஞ்சாய் கனன்று கொண்டிருக்கும். திருமணத்திற்கு பின், காதல் மங்கிப்போய், மனம் அங்கீகாரத்திற்காய் ஏங்க ஆரம்பிக்கும் போது மீண்டும் தனக்கே உரித்தான சௌகரியமான வாழக்கையை தேடி போகத் துடிக்கும்.

இங்குதான் பெரும்பாலும் பிரச்சினை ஆரம்பிக்கும்.

தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் எனத் தேம்பி அழுதிடும் possessive mind பெரும் கலவரத்திற்கு காரணமாகிவிடும். அதே போல, பெமினிசம் (feminism) பற்றி வெளிப்படையாய் பேசாத பெண்ணுக்குள்ளும் ஆணாதிக்கம் என்பது unbearable. அடங்க மறுக்கும் பெண்ணாய் மாறிவிடுகிறாள். தன் அம்மாவோ , வேறு ஒரு பெண்ணுறவோ பொருத்துக்கொண்டதை எல்லாம் தானும் செய்ய மறுக்கிறாள். போராடுகிறாள். ஆணுக்கோ வேறு பிரச்சினை, பெண்களை புரிந்து கொள்ளவே முடிவதில்லை. (புரிந்து கொள்ள நினைப்பதுதான் முட்டாள் தனமே!) இன்றைய தலைமுறையில் திருமணங்கள் வெற்றிகரமானதாய் இல்லாமல் போவதற்கும் இதுவே காரணம்.

ஒரு வேளை,

இந்த காதலின் வெறுமைகளை, அடுத்தவரின் individualityஐ, ஒருவரின் மனநிலை மாறும் இயல்பை, புரிந்து கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணமானால் தான் சினிமாவில் காணும் காவிய உறவுகள் சாத்தியமோ என்னவோ?
---------------------------------------------------------------------------------------

Post Comment

No comments: