Tuesday, November 27

இளையராஜா

"தமிழனாய் பிறந்ததற்கு பெருமை படக்கூடியவை என்ன என்ன?ன்னு ஒரு பட்டியல் போட்டால், தமிழ் இசைக்கு ஒரு இடம் இருக்கும். அதில் இளையராஜா'வுக்காக ஒரு தனி இடம் இருக்கும்!"

"I have understood music across several parts of the world. Have sung in several languages. With that experience, I can say confidently that there is no match to Indian Classical music. And in that form of music, Illayaraja has explored and mastered."
-Dr. Balamurali Krishna-

***********************************************************
நீங்க தொடர்ந்து வாசிக்க முதல்ல ஒரு விஷயம்.


Caution : தலைப்பை பார்த்த உடனேயே தெரிஞ்சுருக்கும் இந்த பதிவு என்ன பதிவுன்னு.youtube'லையோ  இல்லைன்னா google'லையோ இந்த பெயரை தேடினால் சுவாரஸ்யமான நிறைய தகவல்கள் கிடைக்கும். இளையராஜா பற்றி மற்ற மேதைகள் சொன்ன விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அதை தேடிப்படிங்க! பாருங்க! நான் சொல்லப்போவதெல்லாம் என் தனிப்பட்ட எண்ணங்கள். என்ன செய்துவிட முடியும்.. இப்படி ஒரு பதிவு மூலமா இந்த இசை மேதைக்கு ஒரு நாலு வரி எழுதுறத தவிர?!....


இசைக்கு மயங்காத மனிதர்களே இல்லை. மாயக்கண்ணனின் குழலுக்கு மிருகங்கள், பறவைகள்... ஏன்? மரமும் அதிலுள்ள பூவுமே லயித்திருக்கும் போது, மனுஷனுக்கு என்ன? எப்பேர்பட்ட மனிதனாக இருந்தாலும் இசையில் கரைகின்ற ஒரு தருணம் இருக்கும். அப்படி ஒரு இசையை ஒரு music genius தான் தரமுடியும். அதை நிகழ்த்திய தமிழ் இசையமைப்பாளர்கள் சிலரை விரல் விட்டு எண்ணிவிடலாம். காலம் கடந்தும் இந்த இசை மூலமாக இவர்களின் பெயர்கள் வாழ்ந்துகொண்டே தான் இருக்கின்றன.



இளையராஜா பற்றி இப்படியெல்லாம் வர்ணனை கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இங்க இருக்குற எல்லாருமே அந்த இசையை கேட்டிருக்கிறோம். இன்னைக்கும் கேட்டுக்கிட்டுருக்கிறோம். 


இன்னொரு இசை வடிவத்தை கேட்டு இரசித்துக்கொண்டிருந்த தமிழனுக்கு, உன் இசையில் இருக்குதுடா இன்பம்'னு சொன்னது இளையராஜாதான்! இன்னும் சொல்லப்போனால் இசையை ரசிப்பதில் இன்னொரு நிலைக்கு தமிழர்களை அழைச்சுட்டு போனதும் இளையராஜாதான்! காலம் தனது நாட்குறிப்பில் ஒரு முக்கிய சம்பவத்தை இசைகுறியீடுகளை கொண்டு குறித்துக்கொண்டதும் இந்த இசை மேதையினால் தான்

அந்த சம்பவம்....

அந்த குள்ளமான கருத்த இளைஞனுக்கும் இசை தேவதைக்கும் காதல் பின்னிப் பெடலெடுக்கும்னு அது வரைக்கும் வெளிய இருந்தவங்க நினைச்சுருக்கமாட்டாங்க! இன்னைக்கு வரைக்கும் ஸ்ருதி கெடாமல்  இந்தக்காதல் ஸ்வரம் மீட்டிக்கொண்டேதான் இருக்கு. இசை தேவதை ரொம்ப கொடுத்து வைச்சுருக்கனும்., இளையராஜா மாதிரி ஒரு காதலன் கிடைக்க. அதை விடவும் இசை ரசிக்கும் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.

800 படங்களுக்கு மேல இசையமைக்குறது ஒரு மனிதனுடைய வாழ்நாளில் எப்பிடி சாத்தியம்னு நெனைச்சு பார்க்குறேன். ஒவ்வொரு படத்துலயும் பாடலுக்கு மெட்டு, பாடகர் தெரிவு, இசைக்கோர்வை அப்பறோம் அந்த படத்துக்கான காட்சிகளில் பின்னணி இசை இப்பிடி யோசிச்சு பார்க்கும் போதே கிறுகிறுன்னு வருது.அனால் அதை சாத்தியப்படுத்துறதுன்னா.....?? எவ்வளவு காதல் இருந்தால் இசைமீது இப்படி காதல் புரிந்து கொண்டிருப்பார் இளையராஜா.

இசை பற்றி அறிவு இருந்தால் தான் இசை ரசிக்க முடியும்னு யாராச்சும் சொன்னால், சொல்லுறவங்களை நாங்க எல்லாரும் என்ன பண்ணுவோமோ அப்பிடித்தான் இளையராஜா என்ற இசைஞானிக்கு தன்னை ஆரம்பத்தில் இழிவாக பேசியவர்களை பார்த்தபோது தோன்றிருக்கும். அதனால தானோ என்னவோ இசை மூலமாவே செவிகளை பதம்பார்க்க ஆரம்பிச்சாரு. இந்த இசை போதுமான்னு கேட்குற அவரோட கேள்விக்கு.. "அடுத்து என்ன படத்துக்கு இசையமைக்குறிங்க?"ன்னு கேட்குற எதிர்கேள்வி தான் பதில்!



இன்று இளையராஜா பற்றிய கருத்து பரிமாற்றங்களில், அவருடைய இசை பற்றி யாரும் விமர்சிக்காமல் விட்டாலும் அவருடைய பேச்சு, கர்வம் நிறைஞ்சுருக்குன்னு குற்றம் சொல்லுறவங்க இருக்காங்க. கர்வம் தான்! இந்த கர்வம் யாரையுமே அழிச்சது கிடையாது! இசை மூலமாக, தான் பேசியதெல்லாம் இளையராஜாவினுடைய கர்வம்தான்! இசைக்காதலனாய் தன்னில் சிறந்த காதலன் இருந்து விட முடியாது என்ற கர்வம் அது! விருதுகளால் பெருமை அடைவது கலைஞன் அல்ல, அந்த விருதுகளுக்கு பெருமை இந்த கலைஞனின் இசை என்று கலையையும் கலைஞனையும்  பெருமை படுத்தியதும் அந்த கர்வம் தான். இன்று தமிழனை மற்ற நாடுகளில் பெருமையாய் வாழச்செய்ததில் இவரது கர்வத்திட்கும் பங்குண்டு! தமிழனுக்குள் ரசனைமாற்றத்தை அறிமுகப்படுத்திய இவரது கர்வம் தான் இன்று ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் நானெல்லாம் சிறந்த இசை ரசிகன்டா என்று கர்வம் கொள்ளும் நிலைக்கு உயர்த்தி விட்டுருக்கின்றது. இப்படி இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம்.

தெய்வீகமான ஒரு இசை என்பது தானாகவே நிகழவேண்டும்! இதை இளையராஜாவிற்கு பிறகு ரஹுமானிடம் தமிழன் உணரத்துவங்கிய பின்னர் தான் தமிழனின் இசை ரசனை அடுத்த நிலைக்கு உயர்ந்துநின்றது. தமிழனும் உயந்து நின்றான். தமிழ் இசையும் உயந்து நின்றது. காலம் தன் நாட்குறிப்பேட்டில் மீண்டும் இசைக்குறியீடுகளால் ஒரு நிகழ்வை பதிந்து கொண்டது.இம்முறை ரஹுமானின் வாய்ப்பு!

ஒருவேளை முன்னைய நிகழ்வு நிகழாமல் விட்டிருந்தால் இரண்டாவது நிகழ்வது சாத்தியமில்லாமலே போயிருக்கும். இதுதான் காஹோஸ் தியரி (chaos theory). புரியாமல் விட்டால் பாவம் தமிழன்!

இளையராஜா என்று ஒரு guide இல்லாமல் விட்டுருந்தால் தமிழன் எங்கோ ஒரு இருட்டு jungle of art'க்குள்  இன்னமும் waste cannibal ஆகத்தான் musical taste தெரியாமல் சுற்றிகொண்டிருந்துருப்பான்.

இந்த video clip'ல 07:57 தொடங்கி 07:59க்குள்ள கவனிங்க..


இந்த Scene எல்லாரும் பார்த்துருப்பிங்க. ஆனால், எத்தனை பேர் முதல் தடவை பார்க்கும் போதே இதை ரசிச்சுருப்பிங்கனு தெரியல. சூர்யா guitar pickகை பாக்கெட்ல வைக்கும் போது pocket top'ல எழுதியிருக்குற அந்த குறியீடு உணர்த்துவதை தான் என் இந்த பதிவின் மூலம் செய்ய  நினைத்தேன். a tribute to maestro!

இன்னைக்கு பிறக்குற குழந்தைக்கு மட்டுமில்ல, இன்னும்  50வருஷம் கழிச்சு ஒரு குழந்தை பிறக்கும் பாருங்க.. அந்த குழந்தைக்கும் இளையராஜாவின் இசை ஒரு வரம் தான்!


Post Comment

No comments: