Wednesday, November 14

உயிர் மொழி! (ஒரு கவிதை)

(எனக்கெல்லாம் கவிதை எழுத வருமான்னு கேட்காதிங்க.. படிக்கும் போது கிறுக்க தொடங்கினேன்.. என் சக நட்பு வட்டாரம் உசுப்பேத்தி உசுப்பேத்தியே.. ரணகலபட்டுருக்கேன் பலதடவை! அப்பிடி ஒரு கிறுக்கல் தான் இதுவும்..! )






பேசாத மழலைக்கு 
புது மொழி புரியாது 
என்பதை போல..-சிலவேளை 
என்னை புரியாது 
போகலாம் உங்களுக்கு!

மழைக்கு வெளியே நின்று 
மழையை ரசிப்பதை போல..
என்னில் வசித்து விட்டு 
போங்கள்!

பின்னொரு நாளில் வெள்ளை 
குடையோ, ஒரு காகிதக் கப்பலோ  
அதுவும் இல்லை என்றால்,
தலையில் கை வைத்து 
நனைந்து கொண்டே 
வீடு திரும்பும் 
பள்ளிகூட பையனோ, பெண்ணோ..
என்னை   கற்றுக்கொடுப்பார்கள்..

அப்போதும் புரியவில்லை 
என்றால்..

கரையோரம் வந்து 
நுரை துப்பிச் செல்லும் 
அலை ஒன்று 
உங்கள் கால் நனைக்கும் போது 
என் மொழி பேசும்..!

அப்போது கேளுங்கள்..

செவி மூடி கேளுங்கள் 
உங்கள்
மனம் பேசும் மொழியை..!

அதுதான் 
உயிரின் மொழி!

******



Post Comment

No comments: