Thursday, November 1

facebook காய்ச்சல் மற்றும் சில தகவல்கள்

"சரியா 3மாசத்துக்கு முன்னாடி நான் ஒரு சாதாரண fb பாவனையாளன். இப்போ நான் ஒரு fb  ஊழியன்'னு சொல்லிக்குற அளவுக்கு என் facebook நடவடிக்கைகள் மாறி போச்சு. ஏன்.. எதுனால.. எப்பிடி இப்படி ஆச்சுன்னு.. கேட்குறவங்களுக்காக இந்த பதிவு...."



அதுக்கு முதல்ல... 

இந்த ரெண்டு நாட்களா சாண்டி புயல் பத்தின செய்திகளை கேள்விப்பட்டு  இயற்கை அழிவுகளால பாதிக்கப்பட்டுருக்குற மக்களுக்காக, கண்ணை கொஞ்சம் அமைதியா முடிகிட்டோ இல்லைனா கையதூக்கி வானத்த பார்த்து கோபப்பட்டு,பிரார்த்தனை பண்ணின/பண்ணுற அத்தனை அன்புள்ளங்களுக்கும் ...thanks for your time,kind regards!

மனுசனா பொறந்தா மத்தவங்களுக்காக கொஞ்சமாவது நேரம் ஒதுக்கணும். என்னைக்குமே இந்த உலகத்துல நாம தனியா வாழ்ந்துட முடியாது.பிறந்து இன்னோருவர் வாழ்க்கையில கலந்து பின்னொருநாள் சுடுகாடு போறவரைக்கும் உறவுகள் ஒரு தொடர்கதை தான். இப்படிபட்ட இந்த வாழ்க்கைகுள்ள இன்னைக்கு இருக்குற உறவு நாளைக்கு இருக்குமான்னு சொல்ல தெரியாது. so.....,(இந்த பத்தியோட முதல் வரியை திரும்ப படிங்க!) 

"சரி....! ஊருக்கு உபதேசம் சொல்லுற வேலைய நீ இன்னும் விடலையா? சொல்ல வந்ததை சொல்லு"ன்னு  சொல்லுறவங்க தொடர்ந்து படிங்க.. இல்லை எனக்கு வேற வேலை இருக்குனு நெனைக்குறவங்க போங்க போயி உங்க புள்ளக்குட்டிங்களை படிக்கவைங்க! இந்த பதிவு ஒன்னும் அவ்வளோ பெரிய அப்பாடக்கர் மேட்டர் கிடையாது.

மேல சொன்னமாதிரி ஆரம்பத்துல நான் ஒரு averege user தான். இப்போ சூப்பர் user'ன்னு சொல்லிகுற அளவுக்கு என் facebook activities அதிகமா இருக்கு. காரணம் ஒன்னும் உங்களால கண்டுபிடிக்க முடியாத விஷயம் இல்லை. பொழுதுபோகாம இருக்கும் போது எங்க தாத்தா பாட்டியெல்லாம் பல்லாங்குழி, பரமபதம், தாயம், சோலி, சொட்டாங்கல்'ன்னு சேர்ந்து சேர்ந்து  விளையாடினாங்க. அதுவும் bore அடிச்சா வீட்டுல இருக்குற சொத்தெல்லாம் வேற கைகளுக்கு போயிடகூடாதுன்னு என் மாமாமார், மாமிமார், பெரியப்பா, சித்தப்பா, சித்திமார்'ன்னு குடும்பத்த பெரூசாக்குற வேலைல இறங்கிடுவாங்க!But, எங்களோட காலம் வேற.. இப்போ எல்லாம் பொழுது போகலைனாலும் Bore அடிச்சாலும் "தஞ்சம் என என்-நெஞ்சமது.." fbயை தேடுது.

அதுவும் என்னை மாதிரி வேற நேர்வழியில கெட்டுப்போக(!) வழியில்லாம வீணாப்போன தண்டங்களுக்கு இந்த பரமாத்மா தான் "ஷ"கலமும். வேலை முடிஞ்சு ரூம்க்கு வந்தாலும், offday'ல ரூம்ல கதியாகி கிடந்தாலும் என்னை நான் தேடி பார்க்க இந்த fb தான் இருக்கு. இது மட்டும் இல்லை குடும்பத்தை பிரிஞ்சு,நண்பர்களை விட்டு தனியா எங்கேயோ வாழ்ற என்னை போல கோடிக்கணக்கான ஜீவன்களுக்கு இது தான் பீலிங் ஒப் தி பஞ்சப்பாட்டு! கொஞ்சம் நீட்டிமுழக்காம சொல்லனும்னா (அதுதான் சொல்லிட்டியே!), எங்களோட உலகம்!



facebook, Skype, youtube, twitter, email இன்னபிற இத்யாதி  ஊடகங்களை கண்டுபுடிச்சவங்களை இன்டர்நெட் உள்ளளவும் இந்த உள்ளங்கள் மறக்காது! மனுஷன் தன்னோட உணர்வுகளின் மோசமான காலத்துல வாழ்ந்துகிட்டு இருக்கான்னு சொல்லுறது எவ்வளோ உண்மையோ அவ்வளோ உண்மை இந்த சமூக வலைத்தளங்கள் மூலமா மனிதனோட அன்பு ஒவ்வொரு மில்லிநொடிகளிலும் (milli sec'னுக்கு தமிழ் சரியா?) பரிமாறப்பட்டுகிட்டு இருக்குன்னு சொல்லுறதும்!

வந்த வேலை முடிஞ்சுது... இனி எப்போவாவது நேரம் கிடைச்சா இந்த வலைப்பதிவுல வந்து கிறுக்கிட்டு போறேன். போக முதல்ல ஒரு முக்கியமான தகவல். நேரம் இல்லை'ன்னு சொல்லி எஸ்கேப் ஆனாலும் சோம்பேறித்தனம் அப்பிடின்ற உண்மையை தைரியமா சொல்லிக்கிட்டு இதை இங்க Copy & Paste பண்ணிட்டு போறேன். 



                 The Facts and Figures from Facebook 

  • Monthly active users now total 901 million (up from 680 million a year ago).

  • One in 7.7 people in the world have a Facebook account.

  • Daily active users are up to 526 million (up from 372 million last year).

  • Monthly mobile users now total 488 million.

  • Eighty-three million monthly active users accessed Facebook solely from mobile in the month ending March 31, 2012.

  • 300 million photos are uploaded to the site each day.

  • 3.2 billion Likes and Comments are posted daily.

  • Hosts 125 billion friendships.

  • Revenue for the first quarter of 2012 was $1.058 billion, up from $731 million last year.

  • Facebook expects to raise $5 billion in its IPO.

  • Facebook’s estimated value will be close to $100 billion after the IPO.

  • Facebook paid Instagram the equivalent of $1.01 billion for its business.

  • Facebook will pay Instagram a $200 million termination fee if government authorities prevent the acquisition from being completed.

  • If Facebook increased its current revenue rate it will make from $4.69 to $4.81 on each of its 901 million users each year.

  • Facebook hosts 42 million “Pages” with 10 or more likes.

  • There are currently 9 million Facebook “apps”.

  • Facebook owns 774 of its own US patents.

  • Facebook bought an additional 650 patents from Microsoft for $550 million.

  • Zynga the online games company (which includes Farmville) contributes 15% of Facebook revenue.

  • Facebook currently has 3,539 full-time employees.

    (நீங்க இதை படிக்குற இந்நேரம் இந்த தகவல் எல்லாமே பொய்யாகி போயிருக்கும்.)
புடிச்சவங்க கீழ இருக்குற linkகை சொடுக்கி vote பண்ணிட்டு போங்க.. நன்றி மக்கள்ஸ்..!
 

Post Comment

No comments: