Sunday, October 28

"Q" Tv புகழேந்தியும் நானும்

கொஞ்ச நாளைக்கு முதல்ல ஒரு blog ஆரம்பிச்சேன். என்னத்துக்கு இதை ஆரம்பிச்சேன்.. எதுனால ஆரம்பிச்சேன்னு சொல்லி பதிவு போட்டாச்சு. இனிதான் "முதல் பதிவை" உத்தியோகபூர்வமா  எழுதி ஆரம்பிக்கணும். நல்ல ஒரு விஷயம்  கிடைச்சா எழுதுனம்'னு உட்காந்துகிட்டு, நின்னுகிட்டு, படுத்துகிட்டு, வேலை செய்துகிட்டு.. கிட்டு.. கிட்டு'ன்னு.. ஏதாச்சும் கிட்டுமானு யோசிச்சு பார்த்தப்போ,  பல விஷயங்கள் மனசுல வந்து, தட்டுச்சு. எதை எழுதுறது எதை விடுறதுன்னு தெரியாம என்னவெல்லாம் தோணுச்சோ எல்லாத்தையும் draft பண்ணிகிட்டேன்.அப்பிடி(அப்fரிடி இல்லீங்க) draft பண்ணுன விஷயங்கள் மட்டும் ரெண்டு டசன் இருக்கும்.(அட.. நம்புங்க!!).



முதல் பதிவுன்னு நாம தலைப்பு கொடுத்து அதை வாசிக்குற மகாஜனங்கள் என் மேல, என் blog மேல ஒரு அடையாளமுத்திரை குத்தி.. இவன் பதிவெல்லாம் இப்பிடித்தான் இருக்கும்னு ஒரு நினைப்பு வந்துட்டா, நாம எழுதுற உலகத்தரம் வாய்ந்த படைப்புகளை தொடர்ந்து வாசிக்க வராம போயிடுவாங்கலேன்னு பயம் வந்துருச்சு. அதுனால எதை பத்தி எழுதுனாலும் ரொம்ப கவனமா எழுதுடான்னு சொல்ல ஆரம்பிச்சுருச்சு  என் ஏழாம் அறிவு.இதுல ரொம்ப முக்கியாமான விஷயம் இன்னொன்னு இருக்கு.

ஒரு blog இப்பிடித்தான் இருக்கும்னு யாருமே படிக்க வரமாட்டாங்க. அது எனக்கு தெரியும். ஆனா.. இவன் எழுத்து இப்பிடி தான் இருக்கும்னு ஒரு அடையாளம் வந்துட்டா, pickup பண்ண கஷ்டம் ஆயிடும். (figure'ரை   இல்லை!). அப்பறம் நம்ம உழைப்பெல்லாம் என்னத்துக்கு ஆகுறது சொல்லுங்க!?

பேசாம இன்னைக்கு ஒரு பதிவு எழுதி என் நினைப்புக்கு திருஷ்டி பரிகாரம் பண்ணலாம்னு நானே முடிவே பண்ணிட்டேன். ஒரு வேலை இந்த பதிவை பார்த்துட்டு என்னை எவனாச்சும் உக்காரவைச்சு  கேள்வி கேட்டா கூட, அந்த நேரம்  பவர் ஸ்டார் நடிச்ச ஒரு படத்த பார்த்து மனச தேத்திக்கலாம்னு எங்கயாச்சும் Blueray DVD  கிடைக்குமான்னு தேடினா.. "அடுத்த copy பிரிண்ட் போடுறாங்க"ன்னு சொல்லிடாங்க. so, "I'm  Waiting".

அதையும் மீறி.. "கையில ஒரு கம்ப்யூட்டரும் ஒரு இன்டர்நெட் connection'னும் கிடைச்சுட்டா நீயெல்லாம் என்ன வேணும்னாலும் எழுத வருவியா?"ன்னு யாராச்சும் கேட்டாங்கனு வைச்சுகோங்க.. நெக்ஸ்ட்டு மீட் பண்ணலாம்னு கிளம்பிடுவேன்..

"இப்பிடி சொன்னா எப்பிடி? பதில் சொல்லவேண்டியது உன்னோட கடமை. அதுக்காக தான் இவ்ளோ  பேரும் உன்னோட ப்ளாக்'க பார்க்க வந்துருக்கோம்!"ன்னு Q'tv புகழேந்தி மாதிரி விடாம கேள்வி கேட்டால்..


"Blog writing'னா என்னான்னு தெரியுமாயா உனக்கு..? என்னைக்காவது ஒருநாள் Blogspot  பக்கம் வந்துருக்கியா?.. வந்து பார்!! ஒரு நாளைக்கு எத்தின பேர் Blogs  எழுதி post பண்ணுறாங்க'னு.. எவ்வளவு கருத்துரைகள்.. எவ்வளவு பரிந்துரைகள்.., எவ்வளவு Likes.. எவ்வளவு shares.., எவ்வளவு followers.. எவ்வளவு ஹிட்ஸ்.., எத்தின வாழ்த்துக்கள், எத்தின சிக்கல்.. எத்தின tention'னு அதை உருவாக்குனவனுக்குத்தான்யா தெரியும்!எதையும் எடுத்தோமா.. எழுதிமுடிச்சு post பண்ணினோமான்னு முடிவெடுக்க முடியாது! ஒரு பதிவு எழுதினா அதை எத்தின பேர் விரும்புவாங்கனு ஒரு தொலைநோக்கு பார்வையோட தான் முடிவெடுக்க முடியும்!"

(ஒரு வகையா  தலைப்புக்கு விளக்கம் குடுத்தாச்சு ;)............!)

"இதுக்கு ஏன்யா நமீதா படத்தை போட்ட"னு கேட்டா...

ச்சும்மா...! :P.............


Post Comment

1 comment:

Hafni said...

Hahahahahaaa... I was wondering what new "Thing" that you gona talk about Namitha throughout the whole reading! I thought she got Married or something and that you gona share that sad new with us 3:)