Sunday, October 21

blog என்று ஒரு காதல்..!

2008 'இல் கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில், அலுவலக கணனியில் எதற்கோ தமிழில் டைப் செய்து, எதையோ தேடப்போக எனக்கு அறிமுகமானது தான் தமிழ் வலைப்பூ-தளம். அதன்பிறகு என்னவெல்லாம் தேடி பார்த்தேன் என்பது இளைய சமூகத்தின் தமிழ் வாசிப்பு ஆர்வத்திற்கு ஒரு சான்று. 

அங்கிங்கெனாதபடி எதுவெல்லாம் என் கண்ணில்பட்டதோ, வாசிக்கலானேன். பலரது வலைமனைக்குள் குருட்டுத்தனமாய் எட்டிப்பார்ததினாலேயே அவர்களின் எழுத்துக்கு கள்ளக்காதலன் ஆனேன். 
 
இந்த காதலின்பால் கிடைத்த பலரின் அறிமுகம் நீண்டு கொண்டேதான் இருக்கிறது. அவர்களின் பதிவிற்கு பதில்போடும் வாசகர்களை நான் மனதிலேயே சிலாகித்ததுண்டு. இன்றுவரை எந்தவொரு பதிவிலும் நான்  என் கருத்துக்களை பதிந்தது இல்லை. ஆனால் எத்துனையோ எழுத்துக்களை (பதிவுலகம் காணாத) என் நட்பு வட்டாரத்தின் இடையே பகிர்ந்து கொண்டதுண்டு. அவ்வப்போது என் மனம் கவர்ந்த எழுத்தாளர்களை என் நண்பர்களிடம் அறிமுகம் செய்யவும் தவறியதில்லை. 

என் தேடல்களுக்காக வலைப்பூ தளத்தில் மணித்தியாலங்கள் பலவற்றை நான் கரைத்திருக்கிறேன். சிலரின் அன்றாட அனுபவங்களில், மனிதாபிமான செயல்களில், குடும்ப நிகழ்வுகளில், நாட்டு நடப்புகளில் என  அவர்களின் எழுத்துக்களோடு சேர்ந்து  நானும் பயணித்திருக்கின்றேன்., மனம் கரைந்திருக்கின்றேன். அடக்க முடியாமல் வாய் விட்டு சிரித்தும் இருக்கின்றேன். இதைக்கூட எப்படி இவர்களினால் சுவாரஸ்யமாக எழுதிவிட முடிகிறது என ஆர்ச்சர்யப்பட்ட பல சந்தர்பங்கள் உண்டு. தமிழ் நாட்டு பதிவர்கள்., வெளிநாட்டில் இருந்தாலும் பதிவுகள் மூலமாக தமிழ் உலகோடு தொடர்புடன் இருக்கும் பதிவர்கள்., என் தாய்நாட்டின் பதிவர்கள் என அனைவரையும், விடாமல் வாசித்து வந்திருக்கிறேன்.

பதிவுலகின் அன்றைய புதிய ஆக்கிரமிப்பாளர்கள் பலர் இன்று நட்சத்திர வலைப்பதிவாளர்கள்.அன்று தினசரி பதிவெழுதிய பலர் இன்று twitterவாசிகள் ஆகிவிட்டார்கள். என்னை போன்ற எத்தினையோ ரகசிய வாசகர்கள் இன்னமும் அந்த வலைபக்கங்களில் தினமும் வந்து போய்கொண்டுதான் இருக்கிறார்கள்.




அதகளப்படுத்தும் சினிமா விமர்சனங்கள், சூடான சினி செய்திகள்,விறுவிறுப்பான விளையாட்டு பதிவுகள், புதுக்கவிதை என்பன என் தேடல்களின் அதிகம் இடம் பிடிப்பவை. இவை தவிர்த்து அவ்வப்போதோ அல்லது எப்போதோ என் கண்களில் ஒட்டிக்கொள்ளும் சிறுகதைகள், கொஞ்சம் அரசியல், கொஞ்சம் விளம்பரம் என அங்கொன்றும் இங்கொன்றுமாய் நுனிப்புல் மேய்வதுண்டு..!


பரிசல்காரனின் அவியல், கேபிள் சங்கரின் கொத்து பரோட்டா, ஜாக்கி சேகரின் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்   எல்லாம் என் ஸ்டார் ..பதிவுகள்! ..பதிவர்கள்!

இப்படியாக என்னை கவர்ந்த எழுத்துகள் தான் கடந்த 5 வருடத்தின் என் வாசிப்பனுபவத்தின் பெரும்பகுதி. இன்றும்.. அடுத்த பதிவு எப்போது வரும் என்று காத்திருந்து காமுறுகிறேன் அவர்களின் எழுத்துக்களோடு.

Post Comment

3 comments:

Hafni said...

Sorry, I regret in commenting in English below this wonderful intro in Tamil. But I do not know how to type Tamil. So, forgive me ma friend :)

It carries an undeniable stamp of you; it is original & unique like you.

Read Tamil after a very long time and am embraced to say I stumbled a bit in the beginning. Felt some strong emotions stirring within me. Felt like when we partook in those debates and other programmes during school time. It is a wonderful feeling and thank you for making me remember them again.

Hope to see more from you, may god bless you to continue to write more & more.

Unknown said...

Its really nice... I wish all the best for your initiative.. Looking forward to read your upcoming articles..

Niruban

pradas s said...

@niruban.. thank u man! i didnt expect this from u.. hope u'l enjoy my blog ever.. happy reading da Nanba!