Tuesday, November 20

கொஞ்சம் இதையும் சொல்லிடுறேன்..!

கொஞ்ச நாளைக்கு முதல்ல என்னோட fb'ல இப்படி ஒரு status போட்டேன்..   

"கிடைக்குற கொஞ்ச நேரத்துல.. youtube பார்ப்பேனா? blog எழுதுவேனா? பாட்டு கேட்பேனா? skype'ல பேசுவேனா? இல்லைனா fb, twitter'ல status போடுவேனா?... அட போங்கப்பா.. "உனக்கு வேற வேலை எதுவுமே இல்லையா"ன்னு என்னை வம்புக்கு இழுப்பீங்க.. நம்பி ஒரு வேலை பண்ண முடியாது..!"

இதை ஏன் இப்போ சொல்லுறேன்னா,  நான் மட்டும் கிடையாது இங்க நிறைய பேர் இந்த மாதிரி தனக்கு கிடைக்குற நேரத்துல தன்னோட மனசுக்கு பிடிச்ச விசயங்களை கூட செய்ய  நேரமில்லாம ஓடிகிட்டு தான் இருக்கோம். உலகமே தன்னோட வாழ்க்கைய தேடி தான் ஓடிகிட்டு இருக்கு. இலக்கு தேடி ஓடுறவனுக்கு வெற்றி அடையனும்னு தோணும். வெற்றியடைஞ்சவனுக்கு அந்த வெற்றியை தக்க வைச்சுகனும்னு தோணும். எறும்பு கூட்டை பார்க்கும் போது நமக்கு எப்பிடி விளங்குமோ அப்பிடி தான், மேல இருக்குறவனுக்கு நம்மளை பார்க்கும் போது விளங்கும்.


உடனே, "Building மேல இருக்குறவனுக்கா?"னு மொக்கை போடாம தொடர்ந்து படிங்க..

எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு போராட்டம் தான்! பிறந்து - இறக்குற வரையும், வாழுறதே ஒரு சாதனை தான்! கஷ்டப்பட்டு வாழ்க்கையில முன்னுக்கு வந்தவங்களை பார்க்கும் போதும் சரி,அன்னன்னைக்கு கிடைக்குறதை வைச்சு கஷ்டப்பட்டு வாழுறவங்களை பார்க்கும் போதும் சரி, பல சமயங்கள்ல, "இது என்னடா வாழ்க்கை"ன்னு சலிச்சுகிட்டு வாழ்றவங்களை பார்க்கும் போதும் சரி எல்லாருகிட்டையும் கத்துக்குறதுக்கு ஏதோ ஒன்னு இருக்குனு மனசு சொல்லும்!

யாராலையும் இன்னொரு மனுசனோட வாழ்க்கையை வாழ்ந்துட முடியாது! அப்பிடி இருந்துட்டா இங்க யாருமே தன்னோட வாழ்க்கையை வாழவும் முடியாது! இன்னொரு மனிதனா இருந்து அவனை புரிஞ்சுகுற ஆரம்பிச்சாலே இங்க தான் சுவர்க்கம்'னு  தோணும்.ஆனா இந்த உலகம் அப்பிடியா இருக்கு?

உலகத்தை பத்தி கவலைபடுற அளவுக்கு உனக்கு அப்பிடி  என்ன நடந்துருச்சுன்னு கேட்குறிங்களா? எனக்கேதும் நடக்கும்வரைக்கும் தான் நான் பார்த்துகிட்டு இருக்கனுமா..

கொஞ்சம் சுத்தி பாருங்க நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு.

கொலைவெறி பாட்டுக்கு அடிமை ஆகி இருக்குற நாம இப்போ இஸ்ரேல்-பலஸ்தீன கொலைவெறி பத்தியெல்லாம் Youtube'ல தேடி பார்க்குறது கிடையாது...

Dec 21'ல உலகம் அழியுதுன்னு மாயன் காலேண்டர் சொன்னா அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியாம அதை பத்தி facebookல  வந்த கார்ட்டூன பத்தி தான் படிக்குறோம்...

எங்கயாச்சும் ஒரு நாட்டுல ஏதோ ஒரு மூலையில பூமி அதிர்ச்சு வந்தால், உடனே அடுத்து நியூஸ்'ல நம்ம நாட்டுக்கு பாதிப்பு இருக்கான்னு தேடி பார்த்துட்டு நிம்மதியா அடுத்த சேனல்'ல கிரிக்கெட் மேட்ச் பார்க்க ஆரம்பிச்சுடுறோம்...

குறைஞ்சது, அடுத்த தெருவுல ஒருத்தன் வாகன விபத்துல இறந்துட்டான்னு கேள்விபட்டால் உடனே ஒரு "உச்சு" கொட்டிட்டு பின்ன வாயில கொஞ்சம் மிக்ஸர் கொட்டிட்டு  அடுத்த வேலைய பார்க்க கிளம்பிடுறோம்...

அடுத்த வாரம் துப்பாக்கி படத்துக்கு எத்தனை கோடி collection வரும்னு நெனைக்குற நமக்கு தெருக்கோடில பிச்சை கேட்குற பாட்டி பத்தி என்ன கவலை...

ஒரு முஸ்லிம்மோ , ஒரு ஹிந்துவோ இல்லேன்னா ஒரு கிறிஸ்த்துவனோ தப்பு செய்றதை பத்தி தான் நமக்கெல்லாம் விவாதம் பண்ண தெரியும். நம்மளோட இனத்துல ஒருத்தன்னு  என்னைகாச்சும் தோணுதா..

வேற நாட்டுல நம்மளோட நாட்டுக்காரன் ஒருத்தன் தப்பு செய்துட்டான்னு செய்தி கேள்விபட்டால் அவனை அவன் குடும்பத்தை இருந்த இடத்துல இருந்தே நாசமாக்குற வாய்கள் தான் நமக்கு இருக்கு! அவன் நிலைமைல இருந்து யோசிச்சு கதைக்க நமக்கு எதுவுமே இல்லை..

சமூக அவலங்களை  பத்தி ஒருத்தன் சினிமா'ல சொன்னா அவனுக்கு ஒரு கைதட்டோ இல்லைனா facebookலையோ twitter'லையோ ..a feel good movie'ன்னு status'ல  பாராட்டிட்டு, சமூகத்தை பார்த்து நாங்களே கேலி பண்ணிக்கிட்டு சுத்தி திரிவோம்...

..........................................ம்!

மனசு முழுக்கவும் இருக்குறதை சொல்லி முடிக்குறதை தவிர இந்த மானுட பூச்சிக்கு வேற வழி தெரியல..! உங்களை போல நானும் கோடில ஒருத்தன் தான்!

ஆனால் இந்த நாராயணன் கிருஷ்ணன்.....

 
உலகு எலாம் ஓர் பெருங்கனவு!
அஃதுளே
உண்டு....
உறங்கி....
இடர்செய்து...
செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை
ஓர் கனவினும் கனவாகும்!
 
                                                   -மகாகவி.

Post Comment

No comments: