Wednesday, August 21

One நிமிட் for 5 மினிட்ஸ் (21-08-2013)

விஞர் வாலி பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தங்களை ரசிக்கவைத்த வரிகளை நண்பர்கள் சொல்லிக்கொண்டே வந்தார்கள். எல்லோருடைய ரசனைகளுமே வித்தியாசமாக இருந்தது. மீண்டும் மீண்டும் நேரம் போவதே தெரியாமல் பாடல்களை பற்றியும் அதிலே வரும் வரிகளை பற்றியும் சொல்லிக்கொண்டே இருந்தோம்.

நினைவிலிருந்த ஒரு பாடலின் வரியை சொல்லி இதில் வாலியின் திறமையில் நான் மயங்கி கிடக்கிறேன் என்று சொல்ல.. அதை எல்லோரும் ரசிக்க.. பாடலின் அடுத்தவரிகளை தேடி நான் கூகுளிட, இறுதியில் அவ்வரிகளின் சொந்தக்காரர் வேறோருவரானர்.

வரி இது தான்..

"இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக்கொண்ட புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்.."

ஒரு பெண்ணின் இடை, அதனோடு இணைந்த பின்னழகை.. இரண்டு குடத்தோடு ஒப்பிட்டு, தம்புராவோடு இணைத்து.. அப்படியே நடக்கும் அந்த நடையின் சாயலை, தம்புரா மீட்டும் படி உள்ளதாக வர்ணிப்பதை நான் ரசித்த விதத்தில் விபரித்து வைத்தேன். எழுதியவர் வாலி எனவும் சொல்லி வைத்தேன். கூகுளாண்டவர் சந்நிதானத்தில் என் நம்பிக்கை பொய்யானது. எழுதியது யாரு? என்கிற தேடலுக்கு, விஜய டி.ஆர்.'ரு என்கிற பதில் கிடைத்தது.
 

டி.ராஜேந்தரை காமெடி பீஸாக நினைக்கும் (என்னைப்போன்ற) பலருக்கு அவரது திறமையின் நிஜ முகம் தெரியாமல் இருப்பது, வருத்தத்திற்குரியது. இந்த பாடலின் எல்லா வரிகளும் ரசனைக்குரியவை,  நாயகியின் பாகங்களை பற்றி நாயகன் வர்ணித்து கொண்டே வருகின்றான்.. அதிலும் இந்த வரி என்னை பொறுத்தவரை மாஸ்டர் பீஸ்..

"தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரை பூமீது விழுந்தனவோ.."


-இது உவமை! ஆச்சா..? இதை அடுத்த வரியோடு சேர்த்து படிக்கணும்..

"இதை கண்ட வேகத்தில் ப்ரம்மனும் மோகத்தில் படைத்திட்ட
பாகம் தான் உன் கண்களோ.."

-நெத்தியடி!

பாடலின் முழுமையான வரிகளை, மேலிருக்கும் காணொளி இணைப்பில் படித்து பிறவிப்பயன் பெறுவீராக. வாலியின் புகழை பேச தொடங்கியதில் விடயம் மாறிப்போனது. வாலியின் சில மாஸ்டர் பீஸ்களை இங்கே காண்க.

❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥

ண்பர் பிரசாத் ஹரி முகப்புத்தகத்தில் ஒரு குறும்பட காணொளி இணைப்பை தந்திருந்தார். எனது ஹாட் சாக்லேட் இமாலய வெற்றியின் (நானே சொல்லிகிட்டாதான் உண்டு!) பின்னர் எனக்கு கிடைத்த அன்பளிப்பு என்று கூட சொல்லலாம். 

கதை கரு ஒன்று தான். இணைந்திருக்கும் ஆணும் பெண்ணும் பிரிவதற்காக சந்திக்கிறார்கள். முடிவு என்ன? என்பது தான் கதையின் one-line.

அதேமாதிரியான ஒரு காபி ஷாப். கதாநாயகன் தாமதித்து வருதல்.. நாயகி காத்திருத்தல்.. என பல இடங்களில் ஒரே மாதிரியான அம்சங்கள். ஆச்சர்யமாக இருந்தது. என் ஹாட் சாக்லேட் கதை உருவான கதையில் நான் சொன்னதை போல, எனக்கு இந்த கரு கிடைத்தது வேறு ஒரு விதமாகத்தான். இந்த குறும்படத்தில் வரும் ஒரு சில காட்சிகளும் என் ஹாட் சாக்லேட்'டும் ஒன்றாகவே இருப்பதாக நானும் கருதுகிறேன். ஆனால், என் கற்பனைக்கு நான் முழு உரித்துடையவன் என்பதை நான் மறுக்கப் போவதில்லை. அந்த தைரியத்தில் அந்த குறும்படம் உங்கள் பார்வைக்கு! என்ன சொல்ல போகிறாய்..




❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥

திவாகர்
சையத் சுபஹன்
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விடாமல் பார்த்து வருகிறேன். நான் என் தெரிவுகளாக இதற்கு முந்தைய "One நிமிட் for 5 மினிட்ஸ்" இல் குறிப்பிட்டிருந்த மூவருமே இன்னமும் பாடி வருகிறார்கள். இவர்களோடு சேர்த்து சமீப காலமாக இவர்களையும் ரசித்து வருகிறேன். இந்த மூவரின் குரலுமே அவர்களின் தனி அடையாளம். சரியான நேரத்தில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இவர்களை தமிழ் இசை உலகம் போற்றும்! கொண்டாடும்!! அதிலும் ஆந்திர மண்ணிலிருந்து வந்து தமிழ் உச்சரிப்பை விளங்கிப்பாடும் சரத் சந்தோஷ் ரசிக்க வைக்கிறார். 
சரத் சந்தோஷ்
❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥

ன் பாடசாலை காலத்தில் ஒரு டிவி நிகழ்ச்சி மிக பிரபலம். காமெடி டைம் என்கிற அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இருவருமே அப்போதைய மோஸ்ட் வான்டட். 

அந்த நிகழ்வின் முடிவில் விடைபெறும் போது, "உங்க எல்லாருகிட்டயும் பேசனும்ன்ற ஆசை ஆர்வம் எங்களுக்கு இருக்கு.. ஆனால் அதுக்கு இந்த அரை மணிநேரம் பத்துறதில்லை" என்கிற லட்டு பொண்ணு நம்ம அர்ச்சனா, தொடர்ந்து கலக்குவார் என எதிர்பார்த்த ஃபிகர், திருமதியான பின்பு மாயமானார். சமீபத்தில், விஜய் டிவியின், "காமெடியில் கலக்குவது எப்படி" நிகழ்வில் தோன்றி தாம் இன்னமும் இப்பூவுலகில் இருப்பதை நிரூபித்தார். எப்படி இருந்த பொண்ணு இப்பிடி தம்மாத்துண்டு காமெடி பண்ணுதே' என்று கலக்கத்தோடு ரசிக்க ஆரம்பித்த பொழுது, கடந்த இந்திய சுதந்திர தினத்தின் சிறப்பு நிகழ்வொன்றை கலகலவென தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார்., அதே லட்டு அர்ச்சனாவாக. விஜய் டிவியின் ஆஸ்த்தான தொகுப்பாளினியாய் மின்னப்போகிறார் என்பது மட்டும் நிஜம்.

சிலரை பார்க்க பார்க்க பிடிக்கும், சிலரை பார்த்தவுடனேயே பிடித்துவிடும், சிலரை எப்போது பார்த்தாலும் பிடிக்கும். அர்ச்சனாவும் அப்படித்தான்.

❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥

முகப்புத்தகத்தில் ரசித்தது...


Post Comment

No comments: