Wednesday, August 28

எட்டாவது நிறுத்தத்தில் என் காதல்..!


போய்ச்சேர முடியாத தூரத்தில்
வேண்டும் உன்னோடு 
ஒரு பேரூந்து பயணம்!

♂.. ♥.. ♀.. 



ழை தூரலுக்காய்
உன்
யன்னல் கொஞ்சம்
திறந்தைதை
பார்த்து
வானம் முழக்கமிட்டு 
நன்றி சொன்னது!

♂.. ♥.. ♀..

  
ப்போது உன்னை 
கவனிக்க தொடங்கினேனோ 
அப்போது இருந்து 
பேரூந்து 
வாசக சாலை ஆனது!
நான் வாசகனானேன்!

♂.. ♥.. ♀.. 


நிரம்பி வழிகிற பேரூந்து கூட 
வெறுமையாய் தெரிகிறது - எனக்கு 
உள்ளே நீயில்லாததால்!
 ♂.. ♥.. ♀..

பேரூந்து நிறுத்தத்தில் 
கொட்டுகிற மழையில் 
குடைபிடித்த படி
யாருக்காகவோ வந்து
நின்று விடுகிறாள்
ஒரு தேவதை..! 

♂.. ♥.. ♀..

போனதென்னவோ பஸ்ஸு- அது 
எதிர் தெசையில தான்!
பார்த்தியே ஒரு பார்வை - யென்னை
திரும்பி!
போனேன் நான் -என் 
தெசை  கெட்டு!

♂.. ♥.. ♀..

விரட்டி பிடிக்க எண்ணி 
ஓடி வந்ததில்..
உன் சத்தம் கேட்டு நகறாமல் 
நின்றது பேருந்து மட்டுமல்ல..
என் இமைகளும் தான்!

♂.. ♥.. ♀..
வ்வளவு இரைச்சலிலும்
இன்னிசையாய் கேட்கிறது
கை நீட்டி 
சில்லறை வாங்கிய
உன் வளையோசை!

♂.. ♥.. ♀..

நான்காவது நிறுத்தத்தில் நான்!
ஏழாவது நிறுத்தத்தில் நீ..!
மற்றும் 
எட்டாவது நிறுத்தத்தில் 
என் காதல்..!

♂.. ♥.. ♀..

நீ வந்து ஏறும் வரை
தேர் என்று
தெரிந்திருக்கவில்லை!

♂.. ♥.. ♀..
டியில் தொங்கியபடி
கெஞ்சுகிறது 
என் காதல்..
கை பிடித்து இழுத்து 
இதயத்தில் 
இருக்கை கொடு!
♂.. ♥.. ♀..

பேரூந்தில் ஏறியவுடன் 
சீட்  இருக்கிறதா 
என்று தேடுபவர்களுக்கு 
இடையில்..
நீ இருக்கிறாயா என்று
தேடியதில் 
நான் கவிஞனானேன்!

♂.. ♥.. ♀..

Post Comment

No comments: