காதலித்துப்பார் - அலைபேசி
மறுமுனையில் கஞ்சா..!
மறுமுனையில் கஞ்சா..!
♂.. ♥.. ♀..
கைக்கோர்த்து நடந்துவா..
தெருவுக்கேது தாழ்?
♂.. ♥.. ♀..
நனைத்ததென்னவோ சாரல் தான் எனை..
ஆடை மழை ஆனது உன் துப்பட்டா!
♂.. ♥.. ♀..
என் குச்சி மிட்டாய்
உன் கீழ்-உதடு!
♂.. ♥.. ♀..
கொஞ்சம் காதுமூடிக்கொள்கிறேன்..
மையக் கருவிழியால் பேசு!
♂.. ♥.. ♀..
நிலம், நீர், ஆகாயம், காற்று,
அடங்கா உன் திமிர்.
♂.. ♥.. ♀..
கொலுசுகள் பொய் பேசுவதில்லை..
உன் காலடிகள் போலே!
♂.. ♥.. ♀..
நீ விரல் நீவி கூந்தல் வளைப்பதில்
உன் காது மடல் கவிதையாகியது!
♂.. ♥.. ♀..
உன் சங்குக் கழுத்தோரம் அலையோசை!
கட்டிப்போட என் கைகள் வேண்டுமா?
♂.. ♥.. ♀..
இந்தாப்பிடி! குறுக்கும் நெடுக்குமாய்
காற்றிலேயே சில முத்தங்கள்!
♂.. ♥.. ♀..
மைப்பூசிக் கொள்ளும் உன் கண்கள் திருவிழா!
நான் குழந்தை!
|
Tweet |
No comments:
Post a Comment