Thursday, May 29

One நிமிட் for 5 மினிட்ஸ் 29-05-2014

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் - செல்லக் குரலுக்கான தேடலில் தினமும் #தட்_சூப்பர்_மொமெண்ட்'களால் அமிர்தமுண்டு வாழ்ந்து வருகிறேன். களமிறங்கியிருக்கும் சின்ன சின்ன வாண்டுகளில் இதயம் கவர்ந்த ஸ்பூர்த்தி கண்ணுக்கும் காதுக்கும் குளிர்ச்சி! அனுஷா பாடும் போது கைகள் செய்யும் ஜலதரங்கம் அவள் குரலுக்கும் அதிகமாய் என்னை கவரும் secret recipe! ப்ரவஸ்த்தி பாடுகையில் என் headfone வழியே ஒரு குழலிசை! ஷிவானி வாய்ஸ் "வாவ்" ரகம்! ராபின் Excellency! பரத் powerpack! இப்படி எல்லாருக்கும் ஒரு ஸ்பெஷல் இருக்கு.. சொல்ல சொல்ல என் விசைப்பலகையும் இசைக்கேட்க ஆரம்பித்துவிடும்.  


  --#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#--


கொஞ்சநாளாகவே இந்த வலைப்பதிவை ஆவலாக தொடர ஏதுவான காரணிகளில் முக்கியமான ஒன்றான.. //ஏன் இப்போவெல்லாம் அடிக்கடி எழுதுறதே இல்லை?// என்ற வாசகர் கடிதங்கள் (!) வந்துகொண்டே இருக்கின்றது.

இதுபோக.. //Hi, Actually, I don't know who you are. I'm only familierized with your writings. Its really nice, because it makes the reader to think of the heavenly aspect of this world. Also, provide much of happiness. I believe some silly things make ourlives so beautiful. So, its fine to be friend with you. Is it ok ?//

என்கிற இன்பாக்ஸ் இன்ப அதிர்சிகள் பெருகவும் செய்திருக்கிறது..!

-கூகுளாண்டவர் துணை! :)

--#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#--


என் முகப்புத்தகத்தில் கிறுக்கியது... 

மீபத்தில், டீசரில் பின்னணி இசை பிடித்துப்போய், பாடல் வெளியீட்டுக்காக "குக்கூ"வென கூவிகொண்டிருந்து, பாடல்கள் வெளியானதும், அன்றே முகப்புத்தகத்தில் status அப்டேட் செய்து ஜென்ம சாபல்யம் அடைந்ததாய் பீற்றிக்கொண்ட அல்ப்பம் நான்.

ஒருசில வாரங்களில், பாடல்களும், ரசனைகளும் மாறிப்போய் வேற்றுக்கிரக "இசை"வாசியாய் மாறிப்போனேன்.

அவ்வப்போது ரசனை swap ஆகும். அப்படித்தான்.நேற்றைய இரவின் பாடல் கேட்கிற பொழுதில், ஒரு பாடலின் குறிப்பிட்ட ஒரு வரிக்கேட்டு eargasm ஆனது எனக்கு.

அந்தப் பாடல்..

பாடியவர்களை, சமீபகாலங்களில் நண்பர்களிடம் கொண்டாடித் திரிகிறேன். புதிதாய் வெளிவரும் பாடலில் இவர்கள் பெயர் கண்டால், உடனே கேட்கத்துடிக்குறேன். facebook'ல் friend செய்தும்விட்டேன்.

Divya Ramani : vijayt v "பாடும் ஓபிஸ்"ல் "இசையில் தொடங்குதம்மா.." கேட்ட காலத்திலிருந்தே, இந்த குரலெல்லாம் தமிழ் சினிமாவில் பின்னணி பாட வரக்கூடாதா என்கிற ஏக்கம் தீர்த்துவைத்த குயில். அந்த பாடல் இங்கே : http://bit.ly/R8OGAQ

இந்தக் குரலின் மேலும் பல பாடல்களை நேரம் இருப்பின் youtube'ல் தட்டிப்பார்த்துக்கொள்ளுங்கள்! :))

Sean Roldan (RR) : youtube'ல் இவரது பிரத்தியேக படைப்புக்களின் மெய்மறந்த ரசிகன் நான். http://bit.ly/1vFSkmg

இவரும் இப்போது தமிழ்சினிமாவின் புதுவரவு. வாயை மூடி பேசவும் படத்தின் music director. "முண்டாசுப்பட்டி" பாட்டெல்லாம் கேட்டு உச்சுக்கொட்டி தீர்த்துவிட்டேன். இசைக்கென பிறந்த ஆத்மாக்கள் இவர்கள்.

சொல்லவந்ததை விட்டுட்டேன். ...ஆங்! இந்த ரெண்டு பேரும் சேர்ந்து Santhosh Narayanan இசையில் உருகியிருக்கும், கவிஞர் யுகபாரதியின் பாடலில் ஒரு வரி.. நேற்றிரவு spark'க்கியது என்னை!

பொதுவாவே பொண்ணுங்களுக்கு ரசனை அதிகம். emotional, sentimental எல்லாமே கலந்து கட்டி அன்பை பொழிவதில் அசகாய சூரதீரிகள் (அதேபோலத்தான் கோபமும்). மென்மையான இயல்பை இயல்பாகவே வைத்திருக்கும் வசியக்காரிகள். எப்போதுமே எதிலுமே தனக்கென பிரத்தியேகமான ஒரு உறவை, அதிலும் இதயத்திருடனை தனக்கே தனக்கென கொண்டாடும் கொஞ்சும்கிளிகள்.. அந்த கன்னிமனம் தன் கண்ணாளனை ரகசியமாய் ரசிக்கும். தனக்கென அமையப்பெற்றவனை தாயுள்ளமாய் கண்டு பரவசப்படும். அந்த கன்னிமனம் சொல்லும் அத்தனை சொல்லிலும், எழும் எந்த எண்ணத்திலும், தன் சக-உறவுகளிலும்.. அந்த ஆடவனை காதலித்...

அடப்போங்க..

அந்த வரி இதுதான்!

//அன்பே உன் அன்பில் வீசும் கருவறை வாசமே!!//

...எழுதிமுடித்து பதிவேற்றிய சிலநிமிடங்களில் பாடகி திவ்யா ரமணியிடம் இருந்து வந்த பின்னூட்டம்..

--#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#--
வெறித்தனமாய் ரசித்த கவிதைகளில் ஒன்று..


வேலியை தாண்டியது-
கிளை.
வெகுண்டெழுந்து
விழுந்தது வெட்டு.

முன்னிலும்
ஆவேசமாய்
விதிகளை மீறுகின்றன-
வேர்கள்.

Post Comment

No comments: