Thursday, June 13

One நிமிட் for 5 மினிட்ஸ் (12-06-2013)

தே  தலைப்பில்.. என் முதல் பதிவில்..

பார்க்குற / கேட்குற / ரசிக்குற விசயங்களை வலைப்பதிவுகளா எழுதி அதை நமக்கு தெரிஞ்ச 8 பேர்கூட பகிர்ந்துக்கலாம்னு தான் இந்த வலைமனை ஆரம்பிச்சேன். இப்படி என் மனசுல இருக்குறதை எழுதுறதுக்கு எல்லா வசதிகளும் இருக்கும் போதும்கூட நமக்காக நேரம் ஒத்துழைக்குதில்லை. அதனால, கிடைக்குற கொஞ்ச நேரத்தில அஞ்சோ.. ஆறோ.. விஷயங்களை ஒரே  பதிவா போட்டு உங்க நேரத்தையும் சிக்கனமா மாத்தலாம்னு தோணுச்சு. ஒரு அஞ்சு நிமிஷம் உங்க நேரத்தை ஒதுக்கி வந்துட்டு போனீங்கனா போதும்!

என்று எழுதி தான் இந்த பதிவை ஆரம்பித்தேன். திகதி மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இதே தலைப்பில் 4வது பதிவு இது.

..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..


மைதியான உறக்கம் என்பது குழந்தைகளின் உலகத்தில் மட்டும் தான் சாத்தியம். சில குழந்தைகள் தங்களைத் தானே உள்ளே இழுத்துக்கொண்டு உலகம் மறந்து தூங்குகிறார்கள். இன்னும் சில குழந்தைகளோ பார்ப்பவர்களையும் இழுத்துக்கொண்டு தூங்குகிறார்கள். அம்மாவின் மடியிலோ, அப்பாவின் தோளிலோ தூங்கும் குழந்தைகளை பார்க்கும் போதெல்லாம், தூக்கம் விற்று மெத்தை வாங்கி வாழும் வாழ்கையை நினைத்து வருத்தப்பட தோன்றுகிறது. குழந்தையாகவே இருப்பதன் இன்னுமொரு வசதி எல்லோராலும் நேசிக்கபடுகிறோம் என்பது தான். 
..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍.. 



AIRTEL சூப்பர் சிங்கர், விஜய் டிவி'யில எப்போ ஆரம்பிச்சாங்களோ அந்நாள் முதல் கொண்டு இன்று வரைக்கும் பார்த்துகிட்டு தான் வாரேன். youtube/விஜய்டிவி மூலமாக எல்லா episode உம் அடுத்த நாளே பார்த்துடுறது உண்டு.நம்ம ரமேஷ் குரல் தான் என்னோட முதல் சாய்ஸ் . அழகேசன் ஐயாவாக உள்ள வந்து இன்னைக்கு இளையவர்களின்  பாசத்துக்கு கட்டுப்பட்டு அல்கேட்ஸ் ஆகி எல்லோரோட அன்பையும் பெற்றுருக்கிற அந்த மூத்த கலைஞனுக்கு சரியான வாய்ப்பு. ரிஸ்வான் பாய் மேல ஒரு ஆழமான அன்பு. கண்ணை மூடி குரலை மட்டும் கேட்டால் நிச்சயம் அந்த குரல் தரும் சுகமே வேறு. "திறமை இருக்குறவங்களுக்கு சரியான வாய்ப்பு இந்த சூப்பர் சிங்கர் மேடை" அப்பிடின்னு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குற மாகாப்ஸ் அடிக்கடி சொல்லுவாரு. அதை கண்கூடா பார்க்க முடியுது. அந்த திறமைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை தமிழ் திரை உலகம் செய்து தரும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்! அப்படியே நேரம் இருந்தால் இந்த வலைப்பக்கம் ஒரு எட்டு பார்த்துட்டு வாங்க. Intresting!

..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..
ரெண்டு மாடு வாங்கி வச்சுகிட்டு இந்த வீடியோ பாருங்க.. மனித கற்பனை வளம் பற்றி நினைச்சு புல்லரிக்கும்.


..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..
 ந்த சில நாட்களாக ஆபீஸ்'ல ஆணிகள் நிறைய இருந்தது. அதனால தொடர்ந்து பதிவு எழுதுற வாய்ப்பு கிடைக்கல. என்னதான் பம்பரம் போல சுத்திகிட்டே இருந்தாலும். இடையில சிலநேரம் புடிச்ச சில விசயங்களையும் செய்துகொண்டேதான் இருக்கேன். வீட்டுல இருந்து நாடு கடந்து நெருக்கமான நண்பர்களையும் பிரிந்து இன்னொரு நாட்டுல பொழப்பு தேடி வந்து தனியா ரூம் எடுத்து தங்கி இருக்குற இந்த வாழ்க்கை அதிகமாக கத்துக்கொடுத்தது ஒன்னே ஒன்னுதான்.

\\ "உன் தனிமை உனக்கான உன்னை அறிமுகம் செய்யும்" \\

Post Comment

No comments: