Wednesday, November 27

காதலுக்கும் காய்ச்சல் வரும்..!


தொலைந்து போன
பால்ய  மனதின்
அடையாளங்களை
எனக்கும் உனக்குமான
குறுஞ்செய்திகளில்
ஒளித்து வைத்திருக்கிறது
காதல்!


♂.. ♥.. ♀..


சை தீர பேசியபின்னும்..
ஐந்து நிமிட இடைவெளி
விட்டு மீண்டும்
அழைக்கிறாய்..
"ஏதும் மறந்துட்டேனா?"..

"சொல்ல மறக்கலை செல்லம்-நீ 
கொடுக்க மறந்துட்ட.."
என்றால்..

"ச்சீ போடா!" என்று
அழைப்பை அணைக்கிறாய்..

முத்தத்தை விடவும்
கிக்கு தருகிறது
மறதியின் பின்னரான 
 அழைப்பு!

 ♂.. ♥.. ♀..


ப்படித்தான்
அன்றும் என்னோடு
பைக்கில் அமர்ந்த படி..
ஊரெல்லாம் சுற்றி வர
என் தோள் சாய்ந்தாய்!

தொடங்க முதலே
சொன்னேன் - இன்னைக்கு
எனக்கு நிச்சயமா
காய்ச்சல் வரும்
என்று!

இறுக்கி அணைத்தபடி - நீ
சொன்னாய்..
சாயாமல் விட்டாலே
என் காதலுக்கும்
காய்ச்சல் வரும்!

♂.. ♥.. ♀..

நீயும் நானும்
வழக்கமாய் அமரும்
அந்த பார்க் பெஞ்சில்..
நமக்கு முதலே
வந்தமர்ந்த ஒரு ஜோடி
காதல் பரப்பிகொண்டிருந்த
அழகை பார்த்ததும்..

மேலே இருந்த வானம்
சேதி சொன்னது..

இதுவாய் இன்னமுமாய் இனியுமாய்
இருப்பதெல்லாம் காதலே!

♂.. ♥.. ♀..



" என்னமோ பண்ணுதுடா.. என்னை
பார்க்காத அப்படி !"என்றாய்...
உன்னையே பார்த்தபடி
கண்கள் திறந்து கிடந்தேன்!

கண்கள் பணித்து 
மேனி சிலிர்த்தாய்..

உன் அழகும் என் காதலும்
போட்டி போட்டு கொண்டதில்..
ஜெயித்தது அன்று 
உயிர் வாங்கி உயிர் ஊற்றிய
நம் இதழ்கள் தான்..!

♂.. ♥.. ♀..
 
 என் கைவிரல் பிடித்தபடி
கடற்கரையோரம் 
அமைதியாய்  அவள்
அமர்ந்திருக்கையில்..
 
"ஞாபகமா உனக்கு..
அன்றொருநாள் 
நீ மஞ்சள் சுடிதாரில் 
வந்தபோது..
உன்னிடம்..
என்னைக்குமே நீ
அழகா தான் இருக்குற..
ஆனால்..
இன்னைக்கு 
எப்போதையும் விட 
அழகுன்னு சொன்னேன்..?"
 -என்றேன்!


வெள்ளை 
சுடிதாரில் வந்திருந்தவள்..
தலைக்கவிழ்ந்து 
இருந்தபடியே
 "ம்.." -உரைத்தாள்!

 "அது எப்போது
சொன்னேன் என்று
சரியாக ஞாபகம் இல்லை
இப்போதும் அதே தான் 
தோணுது!"

என்றேன் !

தலைதூக்கி 
முறைத்து
என்  தலையில் குட்டி
விட்டு 
சிரிப்பில் கொஞ்சம் 
சிவப்பு குழைத்து 
மீண்டும் என் கைவிரல் 
பிடித்துக்கொண்டாள்..
 
"நேற்று தான்!"
-என்றவள்..

♂.. ♥.. ♀..



Post Comment

No comments: