Tuesday, November 19

One நிமிட் for 5 மினிட்ஸ் 19-11-2013

திவு எழுதி மூன்று வாரமாகிறது. தொடர் மனச்சோர்வு ஒரு காரணம். அதை தவிர எழுதும் நோக்கம் எழும் போதெல்லாம் என் எழுத்தை நானே விமர்சித்து முடக்கி விடுவது மற்றொரு பெரிய காரணம். இருந்த போதிலும் பிறர் எழுதியதை வாசிப்பதும், யோசிப்பதும் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது. 

இப்போ எல்லாம் அடிக்கடி இல்லைனா பலசமயங்களில்.. அதுவும் இல்லைனா நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனச்சோர்வு அடைவதும், எதை குறித்தும் ஆர்வம் இல்லாமல் அமைதியா இருப்பதும், மீண்டும் ஏதோ ஒரு தற்செயல் நிகழ்வில் விழித்தெழுவதுமாக, ஒரு சராசரி மிடில் கிளாஸ் மனசாட்சி உடையவங்க எப்பிடி இருப்பாங்களோ அப்படித்தான் நானும்.

டிப்ரசன்.. சப்ரசன்.. அப்ரசன்..!!

--#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#--
விஜய் டிவி'யில் நீயா நானாவுக்கு நான் ரசிகன். 

கோபிநாத் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கடந்த வருடம் கிடைத்தது. நான் என் நண்பர்கள் இருவரோடு KLCC சென்றிருந்த நாளில், அங்கே கிடைத்தது வாய்ப்பு. உரையாடவும் செய்தேன். என் நண்பன் ஒருவன் அதிகம் டிவி நிகழ்சிகளை பார்ப்பதில்லை என்பதால் சற்று தொலைவிலேயே நின்று கொண்டிருந்தான். அழைத்து அறிமுகம் செய்தேன்.



"ஹாய்.. என் பெயர் கோபிநாத்!" என்று பணிவோடு தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அந்த நேரத்தில் எனக்கு புரட்சி தலைவர் "எம்.ஜி.ஆர்." அவர்களை பற்றி என்றோ வாசித்த துணுக்கு ஒன்று ஞாபகம் வந்தது. தன்னை அறியாதவர்களிடம். "நான் எம்.ஜி.ராமச்சந்திரன். சினிமா நடிகன்." என்று அறிமுகம் செய்து கொள்வாராம்.

இம் மாத தீபாவளி சிறப்பு நிகழ்வில், கோபிநாத் அவர்களை போலவே நடித்து காட்டி கலகலக்க வைத்தவரை, சிரித்துமகிழ்ந்து பாராட்டியதை பார்த்தபோதும் அந்த எளிமை பிடித்திருந்தது. இப்படியான மனிதர்களிடம் எளிமையை கண்டு வியக்கிறேன்.

நிலை உயரும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்! - கண்ணதாசன்.

--#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#--

நெருக்கமான சில நண்பர்களை நேரடியாக கேலிசெய்து பேசிவிட முடிகிறது. புதிய நண்பர்களை அந்த சுயாதீன உரிமைக்குள் கொண்டு வர நாளாகிறது.

மனம் சிலரிடம் உண்மையாகவும், சிலரிடம் முன்னெச்சரிக்கையுடனும் நடந்துகொள்ள எப்போது தொடங்குகிறதோ அப்போதே வாழ்க்கை பிளாஸ்டிக் பாவனை போல ஆகிவிடுகிறது. உளவியல் கற்றுக்கொண்டு அடைய முடியாததை, அடுத்தவரிடம் நடந்துகொள்கிற முறை அறிவில் ஆணி அடித்ததை போல சொல்லி விட்டு செல்கிறது. சுயம் தொலைந்து நகல் ஆகி விடுகிறது அடையாளம்.

எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாத ஒன்றாய் மனம் கலங்குவது இதனால் தானோ?

--#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#--

மீபத்தில் என் முகப்புதகத்தில் நான் படித்த கவிதை..

உண்மை உத்தமி அவள்!
கபடமற்ற காதலி அவள்!

அடித்து மிரட்டும் அன்னை தெரேசா!
முள்ளை காக்கும் தங்க ரோசா!


காதலனே கதியாக கிடந்தாள்!
கம்பளமாய் படர்ந்தாள்!


டக்கு-அவுட் ஆக்க திடல் விரையும் காதலன் டொக்கு பட்டு தி௫ம்புவான்;ஏழரை மணிக்கூட்டில்!
மக்கு என தலையில் குட்டி தடவுவாள் தைலம் மணிக்கட்டில்!


உதவாக்கரை என உதாசீனப்படுத்தினர் உற்றார்!
உன் காலம் வெகு தொலைவில் இல்லை உரைத்தாள்!


ஊசலாடிய உயிர் மீட்டு கொடுத்தாள்!
அவள் தந்தை பகைத்தாள்!
அவனுடன் கந்தை உடுத்தாள்!


இக்கட்டிலும் ஈஸ்ட்மன்கலர் படம் காட்டினாள்!
காந்தி தாத்தாக்கள் கம்மியான போதிலும் கலங்கவில்லை இம்மியளவும்!


கை கோர்த்தாள்;
அடி தொடர்ந்தாள்..
வளர்ந்தான் அவன்!


வசைத்தான் அருகே "அவ ஒரு psycho மச்சி!"

இந்த கவிதையின் esthatic (நன்றி: Mr.அனந்து வைத்தியநாதன்) என்னை கவர்ந்தது! 
எழுதியவர்: திவ்யமான ஒரு eye வோல்டேஜ் அழகி! 
--#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#--

ண்ணில் பட்ட ஒரு அழகிய கற்பனை..

கண்டவுடன் இட்ட தலைப்பு: "கலப்Pin விளைவு!"

--#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#--

தொடர்ந்து தினமும் இந்த வலை-பக்கத்தை பார்த்துச்செல்லும் முகமறியா நண்பர்களுக்கு நன்றி. facebook fanpage கடந்த இருதினத்துக்கு முன்னதாக 150 ரசிகர்களை தாண்டிவிட்டது என்பது எனக்கே சிலிர்ப்பூட்டும் செய்தி. எனக்கு பரீட்சியமல்லாத முகப்புத்தக நண்பர்கள் உற்சாகமாக இணைந்து கொள்வதும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. இணைய உலகில் இது ஆர்ச்சர்யம் இல்லை என்றாலும். முகம் அறியாதவரின் அங்கீகாரம் சிறிய அளவில் கிடைப்பதை  நான் பெரிய அளவில் பார்க்கின்றேன்.

உங்கள் பின்னூட்டமும் என்னை முன்னேற்றும்..! நன்றி!!

Post Comment

No comments: